வெயிட் லாஸ் என்பது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உடல் எடையை குறைத்த சிலர் தங்கள் அனுபவங்களையும், உணவு முறைகளையும், குறிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த எரிகா ஜென்னிங்ஸ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தனது உடல் எடையை குறைக்கும் பயணம் குறித்து தெரிவித்துள்ளார். உணவு முறை மாற்றத்தால் தான் உடல் எடை வேகமாக குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அந்த மாற்றம் என்ன?
நான்கு மாதங்களில் 18 பவுண்டுகள் (சுமார் 8.1 கிலோ) இழந்ததாக எரிகா தெரிவித்தார். உணவில் மாற்றம் செய்ததால் தான் விரைவில் உடல் எடை குறைந்துள்ளதாக கூறியுள்ளார். உடலில் இன்சுலின் ஹார்மோனை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் உணவு எடுக்க கற்றுக்கொண்டதாகவும், இந்த மாற்றத்தால் உடல் எடை வேகமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
"ஒரே விஷயம்: கொழுப்பைச் சேமிக்கும் ஹார்மோன் என்று அழைக்கப்படும் இன்சுலினைக் கட்டுப்படுத்தும் வகையில் சாப்பிட கற்றுக்கொள்ளுங்கள்" எனக்குறிப்பிட்டுள்ளார்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளில் தான் அதிக கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.
“4 மாதங்களில் 18 பவுண்டுகள் எடையை குறைக்கும் என் பயணத்தில்.. நான் பெரும்பாலும் என் இரத்த சர்க்கரை அளவுகள் அதாவது இன்சுலின் ஹார்மோனில் கவனம் செலுத்தினேன். இதில் கவனம் செலுத்தி என் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கவில்லை. இனிப்பு சாப்பிடும் ஆசை குறையும். சில மாற்றங்கள் குளுக்கோஸ் உயராமல் இருக்க எனக்கு பெரிதும் உதவியது. உடலில் குளுக்கோஸ் இல்லை" என்று எரிகா ஜென்னிங்ஸ் பதிவிட்டுள்ளார்.
எரிகா பின்பற்றிய ஐந்து குறிப்புகள் இங்கே:
எரிகா ஜென்னிங்ஸ் உடலில் குளுக்கோஸ் படிவதைத் தடுக்க 5 முறைகளைப் பின்பற்றினார்.
- சரிவிகித சர்க்கரை உணவை உண்ணுதல்.
- சாப்பிட்ட பிறகு சுமார் 30 நிமிடங்கள் நடைபயிற்சி.
- உணவின் போது முதலில் காய்கறிகளை சாப்பிடுங்கள், பின்னர் மீதமுள்ள பொருட்களை சாப்பிடுங்கள்.
- சாப்பிடுவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடிக்கவும்.