Expert

வருட முடிவுக்கு முன் ஆரோக்கிய இலக்குகள்.. வாரத்திற்கு 1 கிலோ எடை குறைய ஆர்ஜா பேடி கூறும் 3-Step திட்டம்..

வருட முடிவை முன்னிட்டு வாரத்தில் 1 கிலோ எடை குறைய ஆர்ஜா பேடி கூறும் 3-Step திட்டம் என்ன? கலோரி deficit, நடை அடிகள், எளிய வழிமுறைகள் – முழு விவரம்.
  • SHARE
  • FOLLOW
வருட முடிவுக்கு முன் ஆரோக்கிய இலக்குகள்.. வாரத்திற்கு 1 கிலோ எடை குறைய ஆர்ஜா பேடி கூறும் 3-Step திட்டம்..

வருட முடிவை முன்னிட்டு பலர் தங்களது ஆரோக்கிய குறிக்கோள்களை மறுபரிசீலனை செய்து, புதிய வருடத்தை புத்துணர்ச்சியுடன் தொடங்க வேண்டுமென்று முயற்சிக்கின்றனர். பெரிய மாற்றங்கள் அல்லாமல், சிறிய ஆனால் தொடர்ச்சியான பழக்கவழக்கங்கள் தான் நீண்டகால பலன்களை தரும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.


முக்கியமான குறிப்புகள்:-


இந்நிலையில், சர்டிஃபைட் ஃபிட்னஸ் கோச் மற்றும் நியூட்ரிஷனிஸ்ட் ஆர்ஜா பேடி, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “வாரம் 1 கிலோ எடை குறைய 3 முக்கிய படிகள்” எனும் எளிய வழிகாட்டுதலை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது பலரிடமும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

1. வார இலக்கை நிர்ணயிப்பதே முதல் வெற்றி

ஆர்ஜாவின் கருத்துப்படி, ஒவ்வொருவரும் தங்கள் உடல் எடையின் 1–1.5% எடை இழப்பை வார இலக்காக நிர்ணயிக்கலாம். உதாரணம்: 72.5 kg எடை கொண்டவரின் இலக்கு - 0.72 kg. இது பெரும்பாலானோருக்கு 0.7–1.4 kg வரைகே இருக்கும். உடல் கொழுப்பு 25%க்கு மேல் இருப்பவர்களுக்கு எடை வேகமாகக் குறைவது சாதாரணமே எனவும் அவர் விளக்குகிறார்.

2. அந்த இலக்கை ‘வார கலோரி டெபிசிட்’ ஆக மாற்றுவது எப்படி?

ஆர்ஜா கூறுவது: “0.45 kg கொழுப்பு = 3500 கலோரி.” அதனால் 0.73 kg ≈ 1.6 lbs - 1.6 × 3500 = 5600 கலோரி deficit வாரத்திற்கு, தினசரி தேவைப்படும் deficit: 800 கலோரி.

அதை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம்:

  • உணவில் 600 கலோரி குறைவு
  • இயக்கத்தில் 200 கலோரி எரிப்பு

நடைப்பயிற்சி – எளிய கலோரி எரிப்பின் ரகசியம்

  • ஆர்ஜாவின் கணக்கு: 1000 அடிகள் நடப்பதால் 30–40 கலோரி எரியும்.
  • அதனால் அவர் பரிந்துரைப்பது: தினமும் கூடுதலாக 3000 அடிகள் நடக்கவும்.
  • இதற்கான வழிகள்: ஒருமுறை 30 நிமிட நடை, அல்லது இரண்டு முறை 15 நிமிட நடை

கூடுதலாக, weighted vest பயன்படுத்தினால் கூடுதல் கலோரிகள் எரிந்து, உடல் மெட்டபாலிசத்துக்கும் நன்மை தரும் என அவர் கூறுகிறார்.

3. நீண்டகால பலன்களுக்கான முக்கிய ஆதாரங்கள்

இந்த 3-Step திட்டத்தின் மூலம் பெறப்படும் நன்மைகள்:

  • உணவுப்பழக்கத்தில் மேம்பாடு
  • உடல் இயக்கம் அதிகரிப்பு
  • மெட்டபாலிசம் உயரும்
  • ‘கிராஷ் டயட்’ போல உடலை சோர்வடையச் செய்யாது
  • வாரத்திற்கு 1 kg குறைப்பு உடலுக்கு பாதுகாப்பானது
  • மன அழுத்தம், தூக்கக்குறைவு போன்றவை எடை குறைப்பில் தடையாக இருப்பதை உணர்தல்

அதேபோல, போதுமான உறக்கம், தண்ணீர் உட்கொள்ளுதல் மற்றும் ஸ்ட்ரெஸ் மேலாண்மை ஆகியவை எடை குறைப்பில் முக்கிய பங்குவகிப்பதை ஆர்ஜா வலியுறுத்துகிறார்.

 

View this post on Instagram

A post shared by Aarja Bedi | Fitness Coach (@fitwithaabi)

புதிய வருடத்துக்கு முன் பழக்க மாற்றத்திற்கான சிறந்த தொடக்கம்

வருட முடிவில் எடையை வேகமாக, ஆரோக்கியமாகக் குறைக்க விரும்புவோருக்கு இந்த 3-Step திட்டம் பயனுள்ளதாக இருக்கும். தொடர் நடைப்பயிற்சி, சரியான கலோரி கட்டுப்பாடு மற்றும் மனநல பாதுகாப்பு ஆகியவை சேர்ந்து நீண்டகால ஆரோக்கியத்தை உறுதி செய்கின்றன.

இறுதியாக..

ஆர்ஜா பேடி கூறிய இந்த 3-Step வழிமுறை, எந்த ‘கடுமையான டயட்’ இல்லாமல், உடலை சீராகப் பராமரிக்க உதவும். சிறிய மாற்றங்களே பெரிய பலன்களைத் தரும் என்பதை இந்த திட்டம் தெளிவாக உணர்த்துகிறது. வாரத்திற்கு 1 கிலோ எடை குறைப்பது பாதுகாப்பானதும், உடல்நலத்துக்கும் ஏற்றதும் என நிபுணர்கள் ஒருமித்த கருத்து தெரிவிக்கின்றனர்.

Disclaimer: இந்த கட்டுரை பொது தகவல்களை மட்டுமே அடங்கும். எந்தவொரு டயட் அல்லது உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன், மருத்துவர் அல்லது சான்றளிக்கப்பட்ட நியூட்ரிஷனிஸ்டின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Read Next

அறந்தாங்கி நிஷாவின் அதிரடி மாற்றம்.! 50 நாட்களில் 14 கிலோ குறைத்த ரகசியம் என்ன.?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 09, 2025 12:39 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்