அன்றாட வாழ்வில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மூளைக்காய்ச்சலும் அடங்கும். அதென்ன மூளைக்காய்ச்சல், இது யாரை அதிகமாக பாதிக்கக்கூடும் என்ற கேள்வி பலருக்கும் எழக்கூடும். பொதுவாக, மூளைக்காய்ச்சல் என்பது ஒரு கடுமையான பிரச்சனையாகும். இதன் பாதிப்பு உலகளவில் வேகமாக அதிகரித்து வருகிறது. இது மூளை மற்றும் முதுகுத் தண்டைச் சுற்றியுள்ள சவ்வுகளைச் சுற்றியுள்ள திரவம் பாதிக்கப்படும்போது ஏற்படக்கூடியதாகும். இந்தப் பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி உலக மூளைக்காய்ச்சல் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக மூளைக்காய்ச்சல் தினத்தின் வரலாறு (World Meningitis Day 2025)
ஆரம்ப காலத்தில், உலக மூளைக்காய்ச்சல் தினமானது ஏப்ரல் 24 ஆம் நாள் அனுசரிக்கப்பட்டது. அதன் பின்னர், ஆண்டுதோறும், அக்டோபர் 5 ஆம் நாள் இந்த தினம் கொண்டாடுவதற்கு மாற்றப்பட்டது. இந்த நாள் 2008 இல் நிறுவப்பட்டது. இந்த நோய் பொதுவானதாகி வேகமாக உயிர்களை அழிக்கிறது. உண்மையில், உலக சுகாதார நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த நோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்து ஒரு உலகளாவிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: ப்ரெய்ன் ஹெல்த் ரொம்ப முக்கியம் பாஸ்! அதுக்கு முதல்ல நீங்க செய்யக்கூடிய இந்த விஷயங்களை உடனே ஸ்டாப் பண்ணுங்க
உலக மூளைக்காய்ச்சல் தினத்தின் முக்கியத்துவம்
இந்த தினத்தின் முக்கியத்துவமாக, நோயாளிகளைக் குணப்படுத்துவதும், இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமாகும். இந்த நாளில், பல சுகாதார அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த நோயைப் பற்றி மக்களுக்குக் கல்வி கற்பிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயற்சி செய்கிறது. மேலும், மக்கள் இந்த நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள்.
மூளைக்காய்ச்சல்
மூளைக்காய்ச்சல் என்பது பெரும்பாலும் இளம் குழந்தைகளைப் பாதிக்கக்கூடிய ஒரு தொற்று நோய் ஆகும். இது வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் மூலம் பரவுகிறது. இந்த நோய்க்கான சிகிச்சையில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் கூட அது ஆபத்தாக முடியலாம். மேலும், மூளைக்காய்ச்சல் ஒரு ஆபத்தான நோயாகக் கருதப்படுகிறது. சில நேரங்களில் இந்த நோய் குணப்படுத்தப்பட்டாலும், அதன் விளைவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
இது குறித்து தர்மஷில நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த உள் மருத்துவ ஆலோசகர் டாக்டர் கௌரவ் ஜெயின் அவர்கள், இந்த நோயைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவரின் கூற்றுப்படி, மூளைக்காய்ச்சல் என்பது மெனிங்கோகோகஸ் எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும், இது மூளை மற்றும் முதுகுத் தண்டு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மூளைக்காய்ச்சல் ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.
மூளைக் காய்ச்சலின் அறிகுறிகள்
இதன் அறிகுறிகளாக, டாக்டர் கௌரவ் கூறுகையில், தலைவலி, தசை பலவீனம், கழுத்து, முதுகு மற்றும் தோள்களில் விறைப்பு உணர்வு மற்றும் உடலின் அனைத்து வெளிப்புற பாகங்களிலும் பலவீனம் போன்ற உணர்வு ஆகியவை மூளைக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் மூலம் அடையாளம் காணலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: ADHD உள்ள குழந்தைகளுக்கு.. இந்த உணவுகளை கொடுக்கவும்.. நிபுணர் பரிந்துரை..
மூளைக்காய்ச்சல் சிகிச்சை
மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. இது குழந்தைகளை மூளைக்காய்ச்சலில் இருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், பல கடுமையான நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. மேலும், வீக்கத்தைக் குறைக்க உதவும் மூளைக்காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் பரிந்துரைக்கின்றனர்.
மூளைக்காய்ச்சலைத் தடுப்பதற்கான வழிகள்
மூளைக் காய்ச்சலைத் தவிர்ப்பதற்கு பின்வரும் வழிகளைப் பின்பற்றலாம்.
- நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
- இது ஒரு தொற்று நோயாக இருப்பதால், ஒருவருக்கு ஏற்கனவே காய்ச்சல் இருப்பின், அவருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உணவு கொடுத்த பிறகு, சாப்பிடுவதற்கு முன்பு கைகளை நன்கு கழுவுவது அவசியம்.
- இந்த வைரஸை எதிர்த்துப் போராடவும், நபரின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு உதவவும், ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி தடுப்பூசி போடப்பட வேண்டும்.
- அன்றாட வழக்கத்தில் வழக்கமான உடற்பயிற்சியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு திடீர் வலிப்பு மற்றும் திடீரென காய்ச்சல் ஏற்படலாம். எனவே, மூளைக்காய்ச்சலுக்கு உறுதியான சிகிச்சை இல்லை என்றாலும், கவனிப்பு மற்றும் சுகாதாரத்தின் மூலம் மூளைக்காய்ச்சலைத் தடுக்களாம்.
இந்த பதிவும் உதவலாம்: குறைந்த இரத்த சர்க்கரையால் இந்த பிரச்சனை உங்களுக்கு வரலாம்.. தடுக்க உதவும் குறிப்புகள் இதோ! மருத்துவர் பரிந்துரை
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Oct 05, 2025 17:24 IST
Published By : கௌதமி சுப்ரமணி