உடல்நலத்திற்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளில் ஒன்றாக வைட்டமின் B12 கருதப்படுகிறது. இரத்த சிவப்பணுக்கள் உருவாகவும், மூளை மற்றும் நரம்பு மண்டலம் சீராக செயல்படவும் இது அவசியமானது. ஆனால், சைவ உணவு பின்பற்றுபவர்கள், முதியவர்கள் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிகமாக B12 குறைபாடு அனுபவிக்கிறார்கள்.
இந்த வைட்டமின் நீரில் கரையக்கூடியது. அதாவது, உடலுக்குத் தேவையான அளவு பயன்படுத்தப்பட்ட பின், மீதமுள்ளவை சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன. இதனால்தான் தினசரி சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது பெரும்பாலும் பாதுகாப்பானது என கருதப்படுகிறது. இதுபற்றி, இந்திராபுரத்தில் உள்ள கிளவுட்னைன் குழு மருத்துவமனை மூத்த ஊட்டச்சத்து நிபுணர் கரிமா சவுத்ரி இங்கே பகிர்ந்துள்ளார்.
வைட்டமின் B12 ஏன் அவசியம்?
* இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவி செய்து இரத்த சோகையைத் தடுக்கும்.
* நரம்பு மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
* மூளை செயல்பாட்டை சீராக வைத்திருக்கிறது.
* செல்களின் வளர்ச்சி மற்றும் பழுது பார்த்தலை ஊக்குவிக்கிறது.
* உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
தினமும் எடுத்துக்கொள்ளலாமா?
* ஒரு வயது வந்தவருக்கு தினமும் சுமார் 2.4 mcg B12 தேவை.
* சரியான உணவு பழக்கத்தால் இதை பூர்த்தி செய்யலாம்.
* உணவில் குறைவாக இருந்தால் அல்லது உடல் உறிஞ்சும் திறன் குறைந்தால், சப்ளிமெண்ட் தேவைப்படும்.
* சந்தையில் 50 mcg முதல் 1000 mcg வரை டோஸ்கள் கிடைக்கின்றன.
* லேசான குறைபாடு இருந்தால் குறைந்த அளவு போதும், கடுமையான நிலைமையில் அதிக அளவு அல்லது B12 ஊசிகள் தேவைப்படலாம்.
முக்கிய குறிப்பு: நீண்டகாலம் பயன்படுத்த வேண்டியிருந்தால், கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
வைட்டமின் B12 குறைபாட்டின் அறிகுறிகள்
* நீடித்த சோர்வு மற்றும் பலவீனம்
* தலைச்சுற்றல், நினைவாற்றல் குறைபாடு
* கைகள், கால்களில் கூச்சம் அல்லது உணர்வின்மை
* இரத்த சோகை
* மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு
* நீண்டகால பற்றாக்குறையால் நரம்பு மண்டல சேதம்
எடுத்துக்கொள்ளும் போது எச்சரிக்கை
* மருத்துவர் பரிந்துரைத்த பின்னரே சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* பரிசோதனை செய்யாமல் அதிக அளவில் நீண்டகாலம் சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்ளக் கூடாது.
* சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
* பால், தயிர், முட்டை, சீஸ், செறிவூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.
இறுதியாக..
வைட்டமின் B12 உடலுக்கு இன்றியமையாதது. அதன் குறைபாடு கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். தினசரி B12 சப்ளிமெண்ட் எடுப்பது பெரும்பாலானவர்களுக்கு பாதுகாப்பானது. ஆனால், மருந்தளவு மற்றும் காலம் குறித்து மருத்துவர் ஆலோசனை அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. B12 சப்ளிமெண்ட் எடுக்க முன்பாக உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகுங்கள்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Oct 04, 2025 10:00 IST
Published By : Ishvarya Gurumurthy