சாப்பிட்ட பிறகும் மீண்டும் மீண்டும் வயிறு சுள்ளுனு பசிக்க காரணம் என்ன?

உணவு சாப்பிட்ட பின்பும் சிலருக்கு தொடர்ந்து பசி ஏற்படக் கூடும். இதற்கான காரணம் என்னவென்று பலரும் அறிய முயற்சிப்பதில்லை. சாப்பிட்ட பின்பும் மீண்டும் மீண்டும் பசி எடுக்க முக்கிய காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
  • SHARE
  • FOLLOW
சாப்பிட்ட பிறகும் மீண்டும் மீண்டும் வயிறு சுள்ளுனு பசிக்க காரணம் என்ன?


காலையில் எழுந்தவுடன் பசி எடுத்தால், அது இயற்கையான செயல். காலை உணவுக்கு 3 முதல் 4 மணி நேரம் கழித்து மீண்டும் வயிறு காலியாக இருந்தால் அதுவும் பொதுவானது. அதேபோல் உடலின் அதீத செயல்பாடுகளாலும் திடீரென அதிகமாக பசி எடுக்கக் கூடும். வேளைவேளைக்கு பசி எடுப்பது என்பது இயல்பான விஷயம்தான்.

திடீரென உச்சக்கட்டமாக பசிக்க காரணம் என்ன?

சிலருக்கு சாப்பிட்ட பின்பும் வயிறு காலியாக இருப்பதுபோல் உச்சக்கட்டமாக பசி எடுக்கக் கூடும். சாப்பிட்ட உடனே மீண்டும் மீண்டும் பசி எடுக்கும் பிரச்சனையை பலர் எதிர்கொள்கிறார்கள். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சாப்பிட்ட உடனேயே பசிப்பது என்பது சில நோய்களின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

உணவு உண்ட உடனேயே பசி எடுப்பது என்பது உடலில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் நோய்களின் பற்றாக்குறையைக் குறிக்கிறது. நீங்களும் இந்த பிரச்சனையை சந்தித்தால் இதற்கான முக்கிய காரணங்களை அறிந்துக் கொள்வது முக்கியம்.

மேலும் படிக்க: எடை குறைய தினமும் இத்தனை அடிகள் நடக்கனும்..

உணவு சாப்பிட்ட பின்பும் பசி எடுக்க காரணம் என்ன?

சாப்பிட்ட உடனேயே பசி எடுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்கிறார் உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். உணவில் புரதம் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் ஆகும். இது தவிர, சாப்பிட்ட உடனேயே பசி எடுத்தால், அது பல நோய்களின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

hungry-feeling-reason

தைராய்டு

  • உணவு உண்ட உடனேயே பசி எடுத்தால் அது தைராய்டு போன்ற நோய்க்கு காரணமாக இருக்கலாம்.
  • உணவியல் நிபுணர் கூற்றுப்படி, தைராய்டு ஹார்மோன் அளவு அதிகரிக்கும் போது, ஆற்றல் எரியத் தொடங்குகிறது.
  • இது நிகழும்போது, நீங்கள் சோர்வாக உணர்கிறீர்கள், இதன் காரணமாக உங்கள் பசியின் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள்.
  • இதன் காரணமாகவும் நீங்கள் மீண்டும் மீண்டும் பசியுடன் இருக்கக் கூடும்.
  • இந்த நிலையை நீங்கள் எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவரை அணுகி தைராய்டு அளவை பரிசோதிப்பது நல்லது.

சர்க்கரை நோய்

  • எப்போதும் பசியுடன் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நீரிழிவு நோய் பிரச்சனை.
  • சர்க்கரை நோய் இருந்தால் குளுக்கோஸ் செல்களை சரியாகச் சென்றடையாது, இதன் காரணமாக உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்காது.
  • நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலில் இருந்து சிறுநீரின் மூலம் குளுக்கோஸ் வெளியேறக்கூடும்.
  • இதன் காரணமாகவே ஒரு நபர் மீண்டும் மீண்டும் பசியை உணர்கிறார்.

hungry-feeling-causes-in-tamil

மன அழுத்தம்

  • மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் பசியுடன் உணரலாம்.
  • மன அழுத்தம் காரணமாக, கார்டிசோல் என்ற ஹார்மோன் உடலில் அதிகரிக்கிறது.
  • இதன் காரணமாக சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு அதிகரிக்கிறது.
  • அதிக கொழுப்புள்ள உணவுகள், இனிப்புகள் அல்லது பேக்கேஜ் செய்யப்பட்ட சிப்ஸ், தின்பண்டங்கள் மற்றும் குளிர் பானங்கள் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: Excessive thirst: தண்ணீர் குடித்த பிறகும் தாகம் அடங்கவில்லையா? அப்போ இதுதான் காரணம்!

தூக்கமின்மை பிரச்சனை

  • தூக்கமின்மையும் மீண்டும் மீண்டும் பசி உணர்வை ஏற்படுத்தும்.
  • உடல் முழுவதுமாக சோர்வடைந்து, சில காரணங்களால் தூங்க முடியாமல் இருந்தால், ஒருவருக்கு அதிக பசி ஏற்படக்கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உணவு சாப்பிட்ட உடன் அடிக்கடி பசி ஏற்பட இதுபோன்ற பல காரணங்கள் இருக்கலாம். உங்களுக்கும் இதுபோன்ற உணர்வு இருந்தால் தவறாமல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

pic courtesy: freepik

Read Next

Blood in Urine: சிறுநீரில் இரத்தம் வருவது சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியா.?

Disclaimer

குறிச்சொற்கள்