Moong Dal Side Effects: உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இதனால் உடல் நலக் குறைபாடுகள் நீங்குவது மட்டுமின்றி உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும். எனவே உண்ணும் உணவில் தனிக்கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.
காலை உணவாக நன்கு ஊறவைத்த பருப்பு வகைகள், முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயிறு வகைகளை எடுத்துக் கொள்வது சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அடிக்கடி பலவிதமான பருப்புகளையும் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் பச்சைப் பயிறு அல்லது பாசிப்பருப்பு என அழைக்கப்படும் பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிகின்றனர்.
எனவே இந்த பருப்புகளால் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுத்தும், யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது என இக்கட்டுரை மூலம் அறிந்து கொள்ளுங்கள்...
இந்த பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் என்னென்ன?
1.ரத்த அழுத்தம்:
உங்களுக்கு பிபி பிரச்சனை இருந்தால் பாசிப்பருப்பை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் இந்த பருப்பை அதிகமாக உட்கொள்வது குறைந்த இரத்த அழுத்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த பருப்பை சாப்பிட வேண்டாம் என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.
2.வயிற்று உபசம்:
பாசிப்பருப்பை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். எனவே இந்த பருப்பை எடுப்பதற்கு முன் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: How to Use Tulsi: ஆயுர்வேத முறைப்படி துளசியை எப்படி பயன்படுத்தனும் தெரியுமா?
இதில் ஷார்ட் செயின் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. எனவே அதிகமாக உட்கொள்வதால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
3.நீரிழிவு நோயாளிகளுக்கு சிக்கல்:
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பருப்பை குறைந்த அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். இல்லையெனில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோயின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே சர்க்கரை நோயாளிகள் எக்காரணம் கொண்டும் இந்த பருப்பைத் தொடர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Image Source: Freepik