வாழைப்பழம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பக்கூடியதாக உள்ளது. காரணம் இதன் இனிப்புச்சுவை. எனவே தான் இதனை ஜூஸ், ஸ்மூத்தி, இனிப்பு, ஷேக்குகள் என அனைத்திலும் வாழைப்பழத்தை சேர்த்து சுவைத்து மகிழ்கிறோம்.
வாழைப்பழத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது ஊட்டச்சத்துக்களின் இல்லம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. எனவே அன்றைய காலை உணவுக்குப் பிறகு இதை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், வாழைப்பழத்தின் பல நன்மைகள் இருந்தபோதிலும், சிலருக்கு இது ஏற்றதல்ல. வாழைப்பழம் சாப்பிட்டால் சிலருக்கு நோய் வரும். எந்த மாதிரியானவர்கள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?
வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது பல்வேறு நாள்பட்ட நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. மேலும் வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அதிகம் உள்ளது. பகலில் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும். வாழைப்பழம் ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது.
வாழைப்பழம் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, பாஸ்பரஸ் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சுரங்கமாகும். இது செரிமானத்தை வலுப்படுத்துதல், எடை இழப்பு, எடை அதிகரிப்பு, வலுவான எலும்புகள், அதிகரித்த ஆற்றல் அளவுகள், வாழைப்பழம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.
இருப்பினும், சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தொடக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றன. அவர்கள் யார் என்று பார்ப்போம்.
சிறுநீரக பிரச்சனைகள்:
நீரழிவு நோயாளிகள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடக்கூடாது. வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகம். இதனால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. வாழைப்பழத்தை சாப்பிட்டதும் சிறிது நேரம் சுறுசுறுப்பாக உணர்ந்தாலும், பிறகு மந்தமாகி விடுவீர்கள். எனவே சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது.
மலச்சிக்கல்:
மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடக்கூடாது. இவர்கள் அதிகமாக சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் மோசமடையலாம். வயிற்று வலி, வாயு பிரச்சனை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. அதனால்தான் இந்த பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அலர்ஜி இருப்பவர்கள் உஷார்:
இந்த பிரச்சனை இருந்தால் பெரிய நோ:
இன்றைய காலத்தில் அதிக எடை பிரச்சனையால் பலர் அவதிப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடக்கூடாது. வாழைப்பழத்தில் பிரக்டோஸ் அதிகம் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் சர்க்கரை கொழுப்பாக மாறும். கொழுப்பை எரிக்கவில்லை என்றால், உடல் எடை கூடும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எந்த நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்களும் வாழைப்பழத்தை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். வாழைப்பழம் சாப்பிட்டால் மருந்துகளுடன் எதிர்வினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், அலர்ஜி பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்டவர்கள் மருத்துவரை அணுகி வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Image Source: Freepik