Fri Sep 11, 2026 | 11:45 PM IST

Doctor Verified

ஆறாத சர்க்கரை நோய் புண்களுக்கு வெள்ளை ஊமத்தம்.! நன்மைகளை விளக்கும் மருத்துவர்..

சர்க்கரை நோயால் நீண்டநாள் குணமாகாத புண்களை ஆற்ற உதவும் வெள்ளை ஊமத்தம் (White Datura) பயன்படுத்தும் பாரம்பரிய முறைகளை டாக்டர் சாலை மருதமலை முருகன் விளக்குகிறார். இரண்டு பயனுள்ள வீட்டுக் குறிப்புகளையும் அறிந்து கொள்ளுங்கள்.

சர்க்கரை நோய் அதிகரித்துவரும் இந்நாளில், பலருக்கு நீண்டகாலமாக ஆறாமல் இருக்கும் புண்கள் பெரும் சிக்கலாக மாறுகிறது. இந்நிலையில், அந்த வகை புண்களை ஆற்ற உதவும் பாரம்பரிய மூலிகை முறையைப் பற்றி டாக்டர் சாலை மருதமலை முருகன், டாக்டர் சாலை ஜெயா கல்பனா ஹெல்த்தி வேர்ல்ட் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுவதில், வெள்ளை ஊமத்தம் (White Datura) என்பது பல காலமாக மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அரிய மூலிகையாகும். ஊமத்தம் செடியின் பூ, இலை, தண்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் பாரம்பரிய மருத்துவத்தில் வலி, வீக்கம், புண் போன்றவற்றைக் குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Source: https://youtu.be/3nwu5sjWn1E

டிப்ஸ் 1: ஊமத்தம் இலை + நல்லெண்ணை – வீக்கம் & புண்க்கு விரைவான நிவாரணம்

டாக்டர் மருதமலை முருகன் கூறிய முதல் முறையில், வெள்ளை ஊமத்தத்தின் இலை, அதே அளவு நல்லெண்ணை, இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து அல்லது வதக்கி, புண் மற்றும் வீக்கம் உள்ள இடத்தில் தடவிச் சிகிச்சை அளித்தால் விரைவாக குணமாகும் என அவர் தெரிவித்தார். இந்த கலவை தோலில் உள்ள அழற்சி, வீக்கம், சூடு போன்றவற்றை குறைப்பதில் சிறப்பான பலன் தரும்.

டிப்ஸ் 2: ஊமத்தம் இலை + தேங்காய் எண்ணெய் தைலம் – நீண்டநாள் ஆறாத புண்களுக்கு தீர்வு

சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக ஆறாத புண்கள் உருவாகுவது சாதாரணமான பிரச்சனை. இதற்கு டாக்டர் மருதமலை முருகன் கூறிய இரண்டாவது முறை - ஊமத்தம் இலை அரைத்து, அதே அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலம் போலக் காய்ச்சி வடிகட்டி, புண் பகுதிகளில் தடவி வந்தால், சர்க்கரை நோயால் ஆறாத புண்களையும் மெதுவாக ஆற்றும் என அவர் கூறுகிறார். இந்த தைலம் நாட்டு மருந்து கடைகளில் ‘மத்தன் தைலம்’ என்ற பெயரில் கிடைக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பதிவும் உதவலாம்: இன்சுலின் எடுத்த பிறகும் ஹை சுகரால் அவதியா? இந்த மூலிகை கஷாயம் குடிச்சா உடனே கன்ட்ரோல் ஆகும்.. 

இறுதியாக..

சர்க்கரை நோயால் ஏற்படும் ஆறாத புண்கள் பெரும்பாலும் உடனடி கவனிப்பைத் தேவைபடும். இந்நிலையில், வெள்ளை ஊமத்தம் போன்ற பாரம்பரிய மூலிகைகள் சிலருக்கு நல்ல பலன் தரக்கூடியவை. டாக்டர் மருதமலை முருகன் பகிர்ந்த இந்த இரண்டு எளிய முறைகளும் வீட்டிலேயே செய்யக்கூடியவை. இருப்பினும், மருந்து தன்மை கொண்ட மூலிகை என்பதால் நிபுணர் ஆலோசனையுடன் பின்பற்றுவது மிக முக்கியம்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தளங்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தும் முன், குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், குடும்ப மருத்துவர் அல்லது சித்த மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியம். இது மருத்துவ ஆலோசனையை மாற்றும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை.

Read Next

இரவில் தூக்கம் வரலையா? இந்த 5 ஆயுர்வேத முறைகள் உங்களை ஆழ்ந்த நித்திரைக்கு அழைத்துச் செல்லும்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 08, 2025 20:56 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content