Ulcer Diet: வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் யாருக்கும் எதற்கும் நேரம் இல்லை. ஒழுங்கான உணவு முறை, தூக்கம், வாழ்க்கை முறைடுமையான மன உளைச்சல், பதட்டம், சரியாகத் தூங்காதது, தவறான உணவுப் பழக்கம் போன்றவற்றால் என எதையும் யாரும் பின்பற்றுவதில்லை. டுமையான மன உளைச்சல், பதட்டம், சரியாகத் தூங்காதது, தவறான உணவுப் பழக்கம் போன்றவற்றால் பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது. இதில் ஒன்று வயிற்றுப்புண்.
தற்போது பலர் வயிற்றுப்புண் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். மது, புகைபிடித்தல், கூல் ட்ரிங்க்ஸ் அதிகம் குடிப்பது, காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் வயிற்றில் புண்களை உண்டாக்கும். வயிற்றில் புண்கள் இருந்தால், வயிற்றில் கடுமையான எரியும் வலியும் இருக்கும். சாப்பாடு சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் வயிறு வலி இருக்கும்.
ஒருமுறை அல்சர் ஏற்பட்டால், அது மீண்டும் வர வாய்ப்புள்ளது. எனவே அல்சர் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அல்சரால் அவதிப்படுபவர்களும், ஒருமுறை அல்சரால் பாதிக்கப்பட்டவர்களும் உணவில் கவனமாக இருக்க வேண்டியது மிக முக்கியம். அல்சரை குறைக்கவும் தடுக்கவும் என்ன வகையான உணவுகளை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.
அல்சர் வரக் காரணம் என்ன?
வயிற்றில் சுரக்கும் அமிலம் உட்புறப் புறணியை உண்பது, நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பது, அதீத காரமான உணவுகளை தொடர்ந்து உண்பது, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவை இதற்கு காரணமாக இருக்கிறது.
அல்சர் இருப்பதற்கான அறிகுறிகள்

வயிற்று புண்கள் பொதுவாக வயிற்று வலியை ஏற்படுத்தும். இருப்பினும் அல்சர் பிரச்சனைகளை அறிய எளிய வழிகளை பார்க்கலாம்.
- நள்ளிரவுக்கு மேல் வயிற்றில் திடீரென வலி மற்றும் எரிச்சல் உணர்வு.
- சிறிது சாப்பிட்ட பிறகு நிரம்பிய உணர்வு.
- எதுவும் சாப்பிடவில்லை என்றால் வயிற்று வலி.
- எதை சாப்பிட்டாலும் வாந்தி மற்றும் வலி வரும். வாய்வு, வீக்கம் போன்ற உணர்வு வரும்.
- சிலர் இரத்த சோகை மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகளையும் அனுபவிப்பார்கள்.
அல்சர் நோயாளிகள் இதை சாப்பிடவேக் கூடாது
காபியில் காஃபின் அதிகம் உள்ளது. இது சளி அடுக்குகளை சேதப்படுத்தும். இதன் காரணமாக வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. காஃபின் அமில உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் காரணமாக அல்சர் நோயின் அறிகுறிகள் மோசமடைகின்றன.
சாக்லேட்
பலர் சாக்லேட் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் அல்சரால் அவதிப்படுபவர்கள் சாக்லேட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது அல்சர் உள்ளவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். உங்கள் புண்கள் குணமாகும் வரை சாக்லேட்களை முற்றிலும் தவிர்க்கவும்.
காரமான உணவுகள்
காரமான உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அமில உணவு
அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். சிட்ரஸ் பழங்கள் வயிற்று வலியை அதிகரிக்கும். வயிற்றுப் புண்களை அதிகரிக்கிறது. வெளி உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். தண்ணீர் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மிளகாய் மற்றும் மசாலா பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டாம்.
அல்சர் நோயை சரிசெய்யும் உணவுகள்
கேரட்
அல்சரால் அவதிப்படுபவர்கள் உணவில் கேரட்டை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
கேப்சிகம்
குடை மிளகாயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்களுக்கு அல்சர் வர அதிக வாய்ப்புள்ளது. எனவே குடைமிளகாய் சாப்பிடுவது மிகுந்த நன்மை பயக்கும்.
பூசணி
பூசணி புண்களுக்கான மருந்தாக செயல்படுகிறது. இது டூடெனனல் புண்களின் அபாயத்தை குறைக்கிறது. அல்கலைன் பாஸ்பேடேஸின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. அல்சர் நோயாளிகள் பூசணிக்காயை எடுத்துக் கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதையும் படிங்க: Vitamin B12 Deficiency: கவனிக்க வேண்டியவை இது தான்…
அல்சர் நோயாளிகளுக்கு இந்த வகை உணவுகள் பெரிதளவு உதவும் என்றாலும் ஏதேனும் தீவிரத்தை உணரும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik