Fri Sep 11, 2026 | 11:24 PM IST

Sleep Deprivation: குறைவாக தூங்குவதால் உடலுக்கு இவ்வளவு பாதிப்பு ஏற்படுமா? நிம்மதியான தூக்கத்தை பெற டிப்ஸ்!

Lack of sleep side effects: தேவையான அளவுக்கு குறைவாக தூங்குவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனால், பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். சமீபத்தில் ஆய்வு இதழ் ஒன்றில், குறைந்த தூக்கம் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, நீண்ட நாட்களாக நீங்கள் சரிவர தூங்காமல் இருந்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே.

இந்த பதிவும் உதவலாம் : நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்

குறைந்த தூக்கத்தால் BP எப்படி அதிகரிக்கிறது?

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் தூங்குவது ஆரோக்கியமாக இருக்க மிகவும் முக்கியம். இதை விட குறைவாக தூங்கும் பழக்கம் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். குறைவான தூக்கம் காரணமாக, உடலில் பல ஹார்மோன்கள் மாறத் தொடங்குகின்றன.

இது ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது, பின்னர் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. தூக்கமின்மையால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் அல்லது நிலைப்படுத்தும் உடலின் திறன் படிப்படியாகக் குறைய துவங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம் : common monsoon diseases: பருவமழையில் பரவும் நோய்த் தொற்றுகள்- முன்னெச்சரிக்கை அவசியம்

ஆண்களை விட பெண்களுக்கு பிரச்சனை அதிகம்

பொதுவாக பெண்கள் தூக்கமின்மையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். சமீபத்திய ஆய்வின்படி, 7 முதல் 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் பெண்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். அதேசமயம், ஆண்களுக்கு இந்த ஆபத்து சற்று குறைவு. அமெரிக்காவின் பிரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையின் அறிக்கையின்படி, முழுமையற்ற தூக்கம் பெறும் பெண்களுக்கு பொதுவாக குறைவான உடல் செயல்பாடு, மோசமான உணவு மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (BMI) இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Frequent Cold and Cough: தொடர் இருமல், சளி என்பது சாதாரண விஷயமல்ல!

சிறந்த தூக்கத்தை பெற சில டிப்ஸ்

  • நல்ல மற்றும் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற, படுக்கையை சுத்தமாக வைக்கவும், தூங்கும் முன் குளிக்கவும்.
  • இதைச் செய்ய, தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உங்கள் மொபைலை ஒதுக்கி வைக்கவும்.
  • நீங்கள் தூங்கும் முன் ஒரு புத்தகத்தைப் படிக்கவும். இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது

  • தூங்கும் முன் அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்.
  • தூங்கும் முன் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதும் ஆபத்து.
  • தூங்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் குடிக்கவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Coconut Water: தேங்காய் தண்ணீர் குடிப்பதால் வரும் பக்க விளைவுகள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content