Sat Sep 12, 2026 | 01:47 AM IST

World Heart Day 2023: இதயம் ஆரோக்கியமாக இருக்க எந்த உலர் பழங்களை சாப்பிடலாம்!

World Heart Day 2023: உடல் செயல்பாட்டிற்கு இதயத் துடிப்பு என்பது மிக இதயத் துடிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. இதயம் ஆரோக்கியமாக இருக்க, உணவு மற்றும் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம். இன்றைய காலகட்டத்தில் தவறான உணவுப்பழக்கம் மற்றும் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை காரணமாக இதயம் தொடர்பான நோய்கள் அதிகமாகவும், வேகமாகவும் வருகிறது.

முன்பெல்லாம் இதயம் சம்பந்தமான நோய்கள் முதியவர்களுக்கு மட்டுமே வந்தது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் இளைஞர்களே மாரடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு பலியாகி வருகின்றனர். உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, உங்கள் உணவில் உலர் பழங்களை சேர்க்க வேண்டும்.

இதயம் ஆரோக்கியமாக இருக்க எளிய வழிகள்

உலர் பழங்களை சீரான அளவில் தொடர்ந்து உட்கொள்வது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. உலர் பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் பண்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

இதய நோய்களுக்கு பயனுள்ள உலர் பழங்கள்

நட்ஸ்கள் மற்றும் உலர் பழங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதயம் தொடர்பான நோய்கள் ஏற்பட்டால் இவைகளை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் அபாயம் குறைவு.

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவற்றை உட்கொள்வது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதுமட்டுமின்றி, நட்ஸ்கள் மற்றும் உலர் பழங்களிலும் வைட்டமின்கள் உள்ளன. இது இதய ஆரோக்கிய செயல்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதய நோயாளிகள் சாப்பிட வேண்டிய உலர் பழங்கள்

  1. பாதாம்

உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பாதாம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தொடர்ந்து பாதாமை உட்கொள்வதால் மூளை ஆரோக்கியமாக இருக்கும். பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் உள்ளன. நார்ச்சத்து, புரதம் மற்றும் மெக்னீசியமும் இதில் உள்ளது, இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

  1. வேர்க்கடலை

வேர்க்கடலை ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில் அதிக புரதம் உள்ளது, இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வேர்க்கடலையை தொடர்ந்து உட்கொள்வது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

  1. வால்நட்

வால்நட் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நட்ஸ் வகைகளில் ஒன்றாகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து தவிர, தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வால்நட்டில் காணப்படுகின்றன. இதை தொடர்ந்து உட்கொள்வது இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

  1. பிஸ்தா

பிஸ்தா சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ உட்பட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. பிஸ்தாவை தொடர்ந்து சாப்பிடுவது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் மாரடைப்பைத் தடுக்க உதவுகிறது.

  1. முந்திரி

முந்திரி பல ஊட்டச்சத்துக்கள் கொண்ட ஒரு சக்திவாய்ந்த உலர் பழம். முந்திரி பருப்பில் மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன. இது தவிர, ஒலிக் அமிலமும் இதில் உள்ளது, இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இந்த உலர் பழங்களை உட்கொள்வது இதயத்தை ஆரோக்கியமாகவும், நோய்களிலிருந்து விடுபடவும் நன்மை பயக்கும். இவற்றை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதயம் தொடர்பான நோய்களை தவிர்க்க உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம். ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

Pic Courtesy: FreePik

Read Next

Heart Health: நடைப்பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

M Karthick

M Karthick

Senior Sub Editor

செய்தியாளர், செய்தி ஆசிரியர் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். ஆரோக்கிய நலன், அழகு பராமரிப்பு, பெற்றோர் குழந்தைகள் நலன், சினிமா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து கற்றறிந்து எழுத விரும்புபவன். தான் பதிவிடும் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். கருத்தரங்கில் பங்கேற்கவும் புத்தகம் படிக்கவும் பிடிக்கும். தனது செய்தியை படிக்கும் பயனருக்கு அதுசார்ந்த தகவலில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content