Vitamins For Women: வைட்டமின்கள் நம் உடலுக்கு மிகவும் முக்கியம். ஒவ்வொரு வைட்டமினுக்கும் அதன் தனித்துவ தன்மை உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி, கர்ப்ப காலம், மாதவிடாய் போன்ற பல நிகழ்வுகளை பெண் சந்திக்கிறாள். எனவே, ஆண்களை விட பெண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் மிகவும் முக்கியம். இந்த வைட்டமின்கள் பெண்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. அவை என்னென்ன வைட்டமின்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின்
பெண்கள் ஆரோக்கியமாக வாழ என்னென்ன வைட்டமின்கள் முக்கியம் அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

பயோட்டின்
பயோட்டின் ஒரு வகை வைட்டமின் B7 என்று கருதப்படுகிறது. இந்த வைட்டமின் தோல் மற்றும் முடியில் இயற்கையாகவே காணப்படுகிறது. சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இது முக்கியம். தவிர, முடி மற்றும் நகங்களின் வளர்ச்சிக்கும் இது அவசியம். இந்த குறைபாட்டை ஈடுசெய்ய, முட்டை, மீன், இறைச்சி, நட்ஸ்கள் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
புரோபயாடிக்குகள்
புரோபயாடிக்குகள் மிகவும் அவசியமான வைட்டமின்கள் ஆகும், அவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அவசியம். புரோபயாடிக்குகள் நமது குடலை சுத்தமாக வைத்திருப்பதற்கும் எடை குறைப்பதற்கும் அவசியம். உங்கள் உணவில் புரோபயாடிக்குகளை எடுத்துக் கொள்ள, நீங்கள் தயிரை உட்கொள்ளலாம், அதில் ஏணைய புரோபயாடிக்குகள் உள்ளன.
மேலும் படிக்க: 50 வயதிற்குள் நுழையும் பெண்களே ஜாக்கிரதை… இந்த 5 உடல்நல பிரச்சனைகளில் அதிக கவனமா இருங்க!
ஃபோலேட்
ஃபோலேட் வைட்டமின் B9 என்றும் அழைக்கப்படுகிறது . ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க இந்த வைட்டமின் முக்கியமானது. சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பெண்களுக்கு ஏற்படும் சில குறைபாடுகளை சரி செய்வதற்கும் இது முக்கியம். உங்கள் உணவில் ஃபோலேட் பெற, நீங்கள் பட்டாணி, ப்ரோக்கோலி அல்லது பச்சை இலைக் காய்கறிகளை உட்கொள்ளலாம்.
வைட்டமின் பி12
பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வைட்டமின் பி12 இன்றியமையாதது. இது உடலின் ஆற்றலைப் பராமரிக்க உதவுகிறது. தவிர, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
வைட்டமின் பி குறைபாடு காரணமாக, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் உடலில் உறிஞ்சப்படுவதில்லை. உங்கள் உணவில் வைட்டமின் பி 12 க்கு, நீங்கள் ஆப்பிள், தக்காளி, காளான் ஆகியவையை சாப்பிடலாம்.
ஆற்றலை பராமரிக்கும் வைட்டமின்
பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மெக்னீசியம் அவசியம். இரத்த சர்க்கரையை சீராக்க மற்றும் தசைகளை மீட்டெடுக்க இது உதவுகிறது. மேலும், இது உடலில் ஆற்றலைப் பராமரிக்கிறது மற்றும் உடலை ரிலாக்ஸ் செய்கிறது.
இந்த வைட்டமின்கள் அனைத்தும் பெண்களுக்கு அவசியமானவை. உங்கள் உணவில் இந்த அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக்கொள்வதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
Pic Courtesy: FreePik