Kidney Disease: OMG! இந்த பழக்கங்கள் ஒன்றல்ல இரண்டல்ல 395 வகை சிறுநீரக பிரச்சினையை ஏற்படுத்துமாம்!

  • SHARE
  • FOLLOW
Kidney Disease: OMG! இந்த பழக்கங்கள் ஒன்றல்ல இரண்டல்ல 395 வகை சிறுநீரக பிரச்சினையை ஏற்படுத்துமாம்!


சிறுநீரக நோய் என்பது, சிறுநீரகங்களால் தங்கள் வேலையைச் சரிவர செய்ய முடியாதது ஆகும். அதாவது, இரத்தத்தை சரியாக வடிகட்டுவது அல்லது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்யாததையே மருத்துவ மொழியில் சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக நோய் என்று அழைக்கிறோம். சிறுநீரக நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழன் கிழமை உலக சிறுநீரக தினம் (World Kidney Day) கொண்டாடப்படுகிறது.

சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் அவற்றைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இந்த நாளைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாகும். சிறுநீரக பாதிப்பு, சிறுநீரக நோய் என்பது என்ன, சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Kidney Healthy Foods: சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்?

எத்தனை வகை சிறுநீரக நோய்கள் உள்ளது?

அடிக்கடி சிறுநீரகம் தொடர்பான நோய்களை பற்றி பேசும் போது, பெரும்பாலும் சிறுநீரகக் கற்கள், சிறுநீரகச் செயலிழப்பு, சிறுநீரகப் புற்றுநோய், நாட்பட்ட சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றை பற்றிதான் பேசுவோம். ஆனால், ஒரு ஆய்வு அறிக்கையில் சிறுநீரகம் தொடர்பான மொத்தம் 395 வகை நோய்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பிரச்சனைகளில் பெரும்பாலானவை உங்கள் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையுடன் தொடர்பானவை. அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்-

தண்ணீர் குறைவாக குடிப்பது

சிறுநீரகங்கள் சீராக செயல்பட போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். நீர் கழிவுப்பொருட்களை நீர்த்துப்போகச் செய்து, சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவுகிறது. நீங்கள் தண்ணீரைக் குறைவாகக் குடித்தால், அது சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் கழிவுப் பொருட்களை வடிகட்டுவதற்கான அவற்றின் திறன் பலவீனமடையக்கூடும். எனவே, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாள் முழுவதும் தண்ணீர் அருந்துவது அவசியம். குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம் : Kidney Stone Remedies: சிறுநீரகக் கல்லை அகற்ற இயற்கையான வீட்டு வைத்திய முறைகள்

அதிக உப்பு சாப்பிடுவது

அதிகப்படியான உப்பை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணமாகும். சிறுநீரகங்கள் உடலில் சோடியம் அளவைக் கட்டுப்படுத்த வேலை செய்கின்றன. ஆனால், அதிக உப்பு சாப்பிடுவது சிறுநீரகத்தின் சுமையை அதிகரிக்கிறது, இது நீண்ட காலத்திற்கு சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, பொதுவாக அதிக உப்பு கொண்ட, பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். இது தவிர சமைக்கும் போதும் உண்ணும் போதும் உப்பை குறைவாக பயன்படுத்த வேண்டும்.

இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும்

நீரிழிவு, குறிப்பாக டைப் 2 நீரிழிவு, சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணமாகும். உடலில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால், இரத்த நாளங்கள் மற்றும் நெஃப்ரான் (சிறுநீரகத்தின் வடிகட்டுதல் அலகு) படிப்படியாக சேதமடையலாம். இதன் காரணமாக சிறுநீரகம் பலவீனமடையம். நீரிழிவு நோயாளிகள் மருந்துகளை சரியாக உட்கொள்வதன் மூலமும், உணவில் கவனம் செலுத்துவதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும், தங்களைப் பரிசோதித்துக்கொள்வதன் மூலமும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம், நீரிழிவு நெப்ரோபதி (சர்க்கரையால் சிறுநீரக பாதிப்பு) போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : World Kidney Day 2024: இந்த முன்னெச்சரிக்கைகள் மூலம் சிறுநீரகத்தை பாதுகாக்கவும்!

புகைபிடித்தல்

சிகரெட் புகையில் பல வகையான விஷங்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் உள்ளன. அவை சிறுநீரகத்தையும் சேதப்படுத்தும். புகைபிடித்தல் சிறுநீரக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நீண்டகால சிறுநீரக நோய் (CKD) போன்ற சிறுநீரக நோய்களை மோசமாக்கும்.

சிகரெட்டில் உள்ள நிகோடின் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இரத்த நாளங்களை சுருக்குகிறது. இது சிறுநீரகத்திற்கு இரத்த ஓட்டத்தை குறைக்கிறது மற்றும் அவற்றின் செயல்பாட்டை பாதிக்கிறது. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கவும், சிறுநீரகம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் புகைப்பிடிப்பதை நிறுத்துவது மிகவும் அவசியம்.

மது அருந்துதல்

அளவுக்கு அதிகமாக மது அருந்துவது சிறுநீரகம் உட்பட முழு உடலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. ஆல்கஹால் ஒரு வகை டையூரிடிக் ஆகும். அதாவது, இது சிறுநீர் உருவாக்கும் செயல்முறையை அதிகரிக்கிறது. இது உடலில் நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும், அதை ஈடுகட்ட அதிக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

அதிக நேரம் மது அருந்துவது சிறுநீரகத்தை மறைமுகமாக பாதிக்கிறது. எனவே, மதுவை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவுக்கு அதிகமாக குடிக்கக் கூடாது.

இந்த பதிவும் உதவலாம் : Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது

உடல் உழைப்பு இல்லாததால் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடலில் சர்க்கரையை சரியாக உறிஞ்சிவதில் சிரமம் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். இவை அனைத்தும் சேர்ந்து சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம், இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கும், உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும் மற்றும் உடலில் சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.

இது சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கிறது. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது விறுவிறுப்பான நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்ற ஏரோபிக் செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

World Kidney Day 2024: இந்த முன்னெச்சரிக்கைகள் மூலம் சிறுநீரகத்தை பாதுகாக்கவும்!

Disclaimer