Kidney Healthy Foods: சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்?

  • SHARE
  • FOLLOW
Kidney Healthy Foods: சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்?


சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் உணவிலும் கவனமாக இருக்க வேண்டும். உணவு, பானங்களில் சில மாற்றங்களைச் செய்தால் சிறுநீரகப் பிரச்னையில் இருந்து விரைவில் விடுபடலாம் என்கின்றனர் நிபுணர்கள். சில உணவுகள் சிறுநீரகத்தை சுத்தப்படுத்தி ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் என்று கூறப்படுகிறது. சிறுநீரக நோயாளிகளின் உணவில் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிவதற்கு இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

இதையும் படிங்க: தினையின் வகை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம்?

சிறுநீரக செயல்பாடுகள்

சிறுநீரகங்கள் நம் உடலில் மிக முக்கியமான உறுப்புகள். சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டி, அதிலிருந்து கழிவுகளை பிரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றினால் தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

சிறுநீரகம் சரியாக வேலை செய்தால் தான் மற்ற உறுப்புகளும் நன்றாக வேலை செய்யும். இல்லையென்றால் உறுப்புகள் வேலை செய்வதை நிறுத்தி பிற உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீரகத்தில் பிரச்சனை இருந்தால் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாது, சில நேரங்களில் பிரச்சனை தீவிரமடையும் போது தான் அது தெரியவே வரும்.

சிறுநீரக கோளாறு அறிகுறிகள்

உடல் எடை குறைவு, பசியின்மை, கணுக்கால் வீக்கம், கால் வீக்கம், கை வீக்கம், சோர்வு, சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், தசைப்பிடிப்பு, தோல் அரிப்பு போன்ற அறிகுறிகளில் இருந்து கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சிலி உணவுகள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய உணவுப் பழக்கங்களை பார்க்கலாம்.

வெங்காயம்

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் சோடியம் குறைவாக உள்ள வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்களின் உணவுகளில் உப்பைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக வெங்காயத்தைப் பயன்படுத்துங்கள். சிறுநீரக நோயாளிகள் உப்பை தவிர்க்க வேண்டும். வெங்காயம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். சிறுநீர் பாதையை ஆரோக்கியமாக வைக்கிறது. எனவே தாராளமாக வெங்காயத்தை எடுத்துக் கொள்ளலாம்.

பூண்டு

சிறுநீரக நோயாளிகள் சமையலில் உப்புக்குப் பதிலாக பூண்டைப் பயன்படுத்த வேண்டும். பூண்டு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. பூண்டில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளது, இது சிறுநீரக நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பூண்டு இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற பூண்டு உதவுகிறது. பச்சையாகவோ அல்லது பாத்திரங்களில் போட்டு வதக்கியோ சாப்பிடுவது நல்லது. பூண்டில் உள்ள மாங்கனீஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது.

காலிஃப்ளவர்

சிறுநீரக நோயாளிகளுக்கு சூப்பர் உணவாக காலிஃபிளவர் செயல்படுகிறது. கொழுப்பு வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தை குறைப்பதன் மூலம் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சோடியம் மற்றும் பொட்டாசியம் உடலில் அதிகமாக இருந்தால், அதிக நீர் சிறுநீரகங்களுக்குள் நுழைந்து அவற்றின் செயல்பாட்டை பாதிக்கிறது.

காலிஃபிளவரில் சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவாக உள்ளது, இது உங்கள் உடலில் நீர் அளவை பராமரிக்க உதவுகிறது. காலிஃபிளவரில் புரதம் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை எதிர்த்து போராடுகிறது. காலிஃப்ளவர் உடலுக்கான வரப்பிரசாதமாகும்.

ஸ்ட்ராபெர்ரிகள்

ஸ்ட்ராபெர்ரியில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை செரிமான அமைப்பை மேம்படுத்தும். ஸ்ட்ராபெர்ரியில் உள்ள மாங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதோடு ஸ்ட்ராபெர்ரியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.

ஓட்ஸ்

ஓட்ஸிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் 'பீட்டா குளுக்கன்' என்ற நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. ஓட்ஸ் சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைக்கிறது. காலை உணவாக அவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. உடல் எடை குறைவு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை ஓட்ஸ் சாப்பிடுவது மூலம் பெறலாம்.

ரெட் கேப்சிகம்

சிறுநீரக நோயாளிகளுக்கு ரெட் கேப்சிகம் ஒரு சூப்பர் உணவாக செயல்படுகிறது. சிவப்பு கேப்சிகத்தில் பொட்டாசியம் குறைவாக உள்ளது. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சிவப்பு கேப்சிகத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இவை சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

ஆப்பிள்

ஆப்பிளை தினசரி சாப்பிட்டு வந்தால் உடல்நலக் கோளாறுகள் வராது என நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆப்பிள் சாப்பிட்டால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை இதய நோய், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

நீரிழிவு நோயால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே ஆப்பிள் சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனைகள் குறையும். ஆப்பிளில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் குறைவாக உள்ளது. சிறுநீரக நோயாளிகளுக்கு இது வரப்பிரசாதமாகும். சிறுநீரகம் தொரடர்பான பிரச்சனைகளில் இருந்து இது பெருமளவு நிவாரணம் அளிக்கிறது.

இதையும் படிங்க: குயினோவா ஏன் சாப்பிட வேண்டும்?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்

● குறைந்தளவில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் இறைச்சி சாப்பிடுங்கள். கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

● புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே நிறுத்த வேண்டும். புகைபிடித்தல் சிறுநீரகங்களுக்கான இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இது சிறுநீரக செயல்பாட்டை குறைக்கிறது.

● வலி நிவாரணிகளை முடிந்தவரை குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி இவற்றை உட்கொள்ளக் கூடாது. சில வகையான புற்றுநோய் மருந்துகள் மற்றும் ஆண்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை சேதப்படுத்தும்.

● ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூங்குவதும் முக்கியம். போதிய உறக்கம் இல்லாவிட்டால், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இவை சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

● சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு இந்த உணவு வகைகளும், இந்த வழிமுறைகளும் உதவும் என்றாலும் ஏதேனும் தீவிரத்தை உணவரும் போது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

image source: freepik

Read Next

Liver Healthy Foods: ஆரோக்கியமான கல்லீரலுக்கு சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்!

Disclaimer

குறிச்சொற்கள்