What is the ice water hack and does it really work: இன்று பலரும் உடல் எடையைக் குறைப்பதற்கு பலதரப்பட்ட முயற்சிகளைக் கையாள்கின்றனர். இவ்வாறு எடையைக் குறைக்க அறை, பூங்கா, ஜிம் அல்லது உடற்பயிற்சியில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல. இதில் சமமான அளவு உணவுமுறைக்கும் முக்கியம் தர வேண்டும். எடையைக் குறைப்பதில் பல்வேறு உணவுமுறைகள் மற்றும் உத்திகள் உள்ளது. இந்த பல்வேறு டயட் முறைகளைப் பின்பற்றி உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
அவ்வாறு சமீபத்தில் பிரபலமான ஒரு அற்புதமான உடல் எடை இழப்புத் திட்டம் ஐஸ் ஹேக் டயட் ஆகும். இது அடிப்படையில் உடலை உணவுகள் உட்பட குளிர்ந்த பொருட்களுக்கு வெளிப்படுத்துவதை உள்ளடக்கியதைக் குறிக்கிறது. அதாவது, இது உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. இந்த முறையில் குடிக்கும் தண்ணீர் ஐஸ் சேர்க்கலாம், குளிர்ந்த ஸ்மூத்திகள், புதிய பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும், இதில் குளிர்ந்த உணவுகளை மட்டும் சாப்ப்டலாம். ஆனால், இது எடையிழப்புக்கு பயனுள்ளதாக இருக்குமா? என்பதை யோசிக்கிறீர்களா?
ஐஸ் ஹேக் டயட் பற்றி தெரியுமா?
ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்ட படி, ஐஸ் ஹேக் டயட் என்பது எடை இழப்புக்கான ஒரு போக்காகும். இதில் உடல் வெப்பநிலையைக் குறைப்பதன் மூலம் எடையிழக்க உதவக்கூடியதாகும். மேலும், இது உடல் வெப்பத்தை உருவாக்க அதிக கலோரிகளை எரிக்க கட்டாயப்படுத்துகிறது. அதாவது இந்த ஐஸ் ஹேக் முறையானது தெர்மோஜெனீசிஸ் எனப்படும் ஒரு செயல்முறையை அடிப்படையாகக் கொண்டதாகும். இது குளிர் வெளிப்பாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்வதைக் குறிக்கிறது. இந்த செயல்முறையைப் பின்பற்றி, உடல் நிலையான உள் வெப்பநிலையை பராமரிக்க கலோரிகளை எரிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Wall squats benefits: அதென்ன சுவர் குந்துகைகள்! இதுல இவ்ளோ இருக்கா? இது தெரியாம போச்சே
எடையிழப்புக்கு ஐஸ் ஹேக் எவ்வாறு உதவுகிறது?
எடை இழப்புக்கு ஐஸ் ஹேக் முறையானது பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. ஆனால், எடையிழப்புக்கு இது வேலை செய்வதாக பலரும் நம்புகின்றனர். ஏனெனில், இந்த முறையானது தெர்மோஜெனீசிஸ் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆராய்ச்சி ஒன்றில், அதிகப்படியான உடல் கொழுப்பால் வகைப்படுத்தப்படும் உடல் பருமனை நிர்வகிக்க இது உதவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், மற்றொரு ஆய்வு ஒன்றில், உடல் குளிர்ந்த பொருட்களுக்கு வெளிப்படும் போது, அதன் வெப்பநிலையை பராமரிக்க ஆற்றல் செலவை அதிகரிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. இது உடல் எடையிழப்புக்கு உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்க ஐஸ் ஹேக் முறை தரும் நன்மைகள்
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கு
குளிர்ந்த சூழலில் இருப்பது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த முறையானது உடல் ஓய்வில் இருக்கும்போது கூட அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.
நீரேற்றத்தை ஊக்குவிக்க
எடை இழப்புக்கு ஐஸ் ஹேக்கை முயற்சிப்பவர்களுக்கு, ஐஸ் சாப்பிடுவது அடங்கும். அதாவது, இதில் நாம் வழக்கத்தை விட அதிகளவு தண்ணீர் அருந்துவதைக் குறிக்கிறது. குறிப்பாக, சாப்பிடுவதற்கு முன்னதாக அதிகளவு தண்ணீர் குடிப்பது, வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இது அதிக உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது. இதன் மூலம் உடல் எடையிழப்புக்கு உதவுகிறது.
பழுப்பு கொழுப்பை செயல்படுத்த
பிரவுன் கொழுப்பு (பழுப்பு கொழுப்பு திசு) என்பது குளிர்ந்த நிலையில் உங்கள் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் ஒரு வகையான உடல் கொழுப்பு ஆகும். மேலும், உடலில் வெள்ளை கொழுப்பு இருக்கும். இது ஆற்றலைச் சேமிக்கிறது. ஆனால், பழுப்பு கொழுப்பானது கலோரிகளை எரித்து வெப்பத்தை உருவாக்குகிறது. ஐஸ் தண்ணீர் குடிப்பது அல்லது குளிர்ந்த குளியல் எடுப்பது போன்ற குளிர்ந்த பொருட்களுக்கு உட்படுத்துவது பழுப்பு கொழுப்பை செயல்படுத்தக்கூடும். இது உடலில் கலோரிகளை எரிக்கவும், எடையைக் குறைக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: எடை குறைய அரிசி சாப்பிடாம இருக்கணும்னு அவசியமில்ல! இப்படி சேர்த்துக்கிட்டா ஈஸியா குறைக்கலாம்
எடையிழப்புக்கு ஐஸ் ஹேக்கை பின்பற்றுவது எப்படி?
எடையிழப்புக்கு ஐஸ் ஹேக் முறையை முயற்சிக்க விரும்பினால், இதை அன்றாட வழக்கத்தில் எப்படி சேர்ப்பது என்பது குறித்து காணலாம்.
குளிர்ந்த சூழலில் உடற்பயிற்சி
சற்று குளிரான அறையில் உடற்பயிற்சி செய்வது, உடலை அதிக கலோரிகளை எரிக்க ஊக்குவிக்கிறது. மேலும், குளிர்ந்த காலநிலையில் நடப்பது போன்ற உடல் செயல்பாடுகள் உடல் எடையிழப்பை ஆதரிக்கக் கூடும்.
குளிர்ந்த உணவுகளை உட்கொள்வது
- ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கு குளிர் சூப்கள் எடுத்துக் கொள்ளலாம்.
- பசலைக்கீரை, பெர்ரி மற்றும் பாதாம் பாலுடன் குளிர்ந்த ஸ்மூத்திகள் அருந்தலாம்.
- ஆப்பிள், வெள்ளரிகள், கேரட் மற்றும் தர்பூசணி போன்ற குளிர்ந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம்.
தொடர்ந்து குளிர்ந்த நீர் அருந்துவது
- உடலைக் குளிர்ச்சியாக வைக்க தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க முயற்சிக்க வேண்டும். ஆனால், குளிர்ந்த நீரை மட்டும் குடிக்க வேண்டும்.
- நீரைத் தவிர, குளிர்ந்த மூலிகை தேநீர் அல்லது எலுமிச்சை, வெள்ளரி அல்லது புதினாவுடன் கலந்த தண்ணீரை உட்கொள்ளலாம்.
ஐஸ் குளியல் மேற்கொள்வது
- 30 வினாடிகள் முதல் 2 நிமிடங்கள் வரை குளிக்க வேண்டும். ஏனெனில், இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
- சௌகரியகமாக இருந்தால், பழுப்பு நிற கொழுப்பைச் செயல்படுத்தி கலோரி எரிப்பை அதிகரிக்கக் கூடிய ஐஸ் குளியலை மேற்கொள்ளலாம்.
ஐஸ் ஹேக்கின் பக்க விளைவுகள்
இந்த முறை பயனுள்ளதாக இருப்பினும், சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
- தினமும் அதிகமாக குளிர்ந்த நீரைக் குடிப்பது செரிமானத்தை மெதுவாக்கி, வீக்கம் அல்லது வயிற்று அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
- இயற்கையாகவே எளிதில் குளிர்ச்சியை உணரும் மக்கள் நடுக்கத்தை உணரலாம்.
- ஐஸ் குளியல் அதிகமாக எடுத்துக் கொள்வது உடலுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
- ஐஸ் குளியல் அல்லது குளிர்ந்த நீர் குளியல் போன்ற குளிர்ந்த நீரில் நீண்ட நேரம் இருப்பது உடல் வெப்பநிலையை ஆபத்தான முறையில் குறைக்கலாம்.
- குளிர்ச்சியை வெளிப்படுத்துவது உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதை கடினமாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த 5 எக்சர்சைஸ் மட்டும் போதும்! எப்பேற்பட்ட வெயிட்டையும் அசால்ட்டா குறைக்கலாம்
Image Source: Freepik