
தோள்பட்டை வலி மற்றும் இயக்கக் குறைவு பலருக்கும் பொதுவான பிரச்சனை. ஆனால் சிலருக்கு இது மூட்டு உறை (capsule) சுருங்கி, தோளின் இயக்கம் கடுமையாக குறையும் நிலைக்கு வளர்கிறது. இதையே மருத்துவ ரீதியில் ‘Frozen Shoulder’ அல்லது ‘Adhesive Capsulitis’ என்கிறார்கள்.
சாதாரணமாக, தோள்பட்டை எலும்புகள், தசைகள் மற்றும் லிகமெண்டுகள் ஒருங்கிணைந்து இயங்கும் போது சுருக்கம் இல்லாமல் சுலபமாக இயங்கும். ஆனால் சிலரிடம் அந்த மூட்டு உறை வீக்கம் அடைந்து, உள்ளே உள்ள எண்ணெய் சுரப்பு (lubrication) குறைந்துவிட்டால், தோளின் இயல்பு இயக்கம் தடையடைகிறது. இதுவே ‘ஃப்ரோசன் ஷோல்டர்’.
“தோள்பட்டை மூட்டில் இருக்கும் உறை வீக்கம் மற்றும் விறைப்புத்தன்மை காரணமாக, நோயாளிக்கு தோளை மேலே தூக்குவதோ, உடை அணிவதோ, கூட சாதாரண வேலை செய்வதோ கூட வலி தரும் நிலை ஏற்படுகிறது. இதுவே ‘ஃப்ரோசன் ஷோல்டர்’,” என்கிறார் டாக்டர் சந்தோஷ் ஜேக்கப்.
யாருக்கு அதிக ஆபத்து?
இந்த நோய் சில குழுக்களில் அதிகமாகக் காணப்படுகிறது:
* 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்
* நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்கள்
* தைராய்டு பிரச்சனை கொண்டவர்கள்
* கையில் ஏற்பட்ட முறிவு, காயம் அல்லது அறுவை சிகிச்சைக்கு பின்
* சில சமயம் நீண்ட நாட்கள் தோள்பட்டை அசையாமல் இருந்தால்
2024–25 சிகிச்சை வழிகாட்டுதல்
மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் கூறுகையில், புதிய சிகிச்சை வழிமுறைகள் நோயின் நிலைமையைப் பொருத்து கட்டப்படுகின்றன.
முதல் 3 மாதங்கள் பிஸியோதெரபி முக்கியம்
தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு தினசரி பிசியோதெரபி மற்றும் தோள்பட்டை மறுவாழ்வு பயிற்சிகள் மிகவும் முக்கியம். இது மூட்டு சுருக்கத்தை தளர்த்தி, தோளின் இயக்கத்தை மெதுவாக மீட்டெடுக்க உதவுகிறது. இவ்வாறு செய்தால் வலி குறையும், இயல்பு இயக்கம் திரும்பும்.
வலி நீடித்தால் இன்ஜெக்ஷன் சிகிச்சை
பிஸியோதெரபி பலன் அளிக்காதபோது, மருத்துவர் சில மருத்துவ ஊசிகளை பரிந்துரைக்கலாம்:
* ஸ்டீராய்டு இன்ஜெக்ஷன் (Steroid Injection): வீக்கத்தை குறைத்து வலியை கட்டுப்படுத்துகிறது. (நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவர் அனுமதி அவசியம்)
* PRP அல்லது Hyaluronic Acid: தோள்மூட்டின் உள்ளே சுரப்பை மீண்டும் உண்டாக்கி நனைவுத்தன்மையை மீட்க உதவுகிறது.
* Bone Marrow / Fat-derived Injections: சில கடுமையான நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் மேம்பட்ட சிகிச்சை முறைகள்.
இன்ஜெக்ஷன் பலனளிக்காவிட்டால் அறுவை சிகிச்சை
* Keyhole Arthroscopy: இது ஒரு சிறிய அறுவை முறை. மூட்டு உறையை நுணுக்கமாக வெட்டி தளர்த்தி, தோளின் இயல்பு இயக்கத்தை மீண்டும் பெற உதவுகிறது.
* Manipulation Under Anesthesia (MUA): சில இடங்களில் ஆர்த்ரோஸ்கோப்பி வசதி இல்லாவிட்டால், மயக்கத்தில் தோள்பட்டை மெதுவாக அசைத்து, சுருங்கிய மூட்டு உறையை தளர்த்தும் முறை பயன்படுகிறது.
View this post on Instagram
இறுதியாக..
ஃப்ரோசன் ஷோல்டர் என்பது சாதாரண வலியல்ல. இது மூட்டு உறையின் நெகிழ்வுத்தன்மை குறைவதால் ஏற்படும் நிலையான வலி மற்றும் இயக்கக் குறைவு. 40 வயதுக்கு மேல், குறிப்பாக நீரிழிவு அல்லது தைராய்டு பிரச்சனை கொண்டவர்கள் தங்கள் தோள்பட்டை வலியை அலட்சியமாகக் கருதாமல் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சரியான சிகிச்சையுடன், பெரும்பாலான நோயாளிகள் முழுமையாக குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரை மருத்துவ நிபுணர் டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் அவர்களின் பொது விளக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ள சிகிச்சை முறைகள் அனைத்தும் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
- Current Version
- Oct 31, 2025 19:39 IST Published By : Ishvarya Gurumurthy