Doctor Verified

Tomato Ketchup-ல் உள்ள E415 பற்றிய உண்மையை மருத்துவர் விளக்குகிறார்..

Tomato Ketchup-ல் உள்ள E415 (Xanthan Gum) புற்றுநோய்க்கு காரணமில்லை. ஆனால் அதில் மறைந்திருக்கும் சர்க்கரை மற்றும் உப்பு தான் உடல்நலத்துக்கு ஆபத்து. கேட்சப்பின் உண்மையை மருத்துவர் விளக்கம்.
  • SHARE
  • FOLLOW
Tomato Ketchup-ல் உள்ள E415 பற்றிய உண்மையை மருத்துவர் விளக்குகிறார்..


பொதுவாக வீட்டிலும், ஹோட்டல்களிலும் தக்களி கேட்சப் (Tomato Ketchup) பலரின் விருப்பமான சைட் டிஷ். எல்லா உணவுகளுக்கும், கேட்சப் சுவையை கூட்டும். ஆனால் கேட்சப் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு உண்டாக்கும் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. குறிப்பாக “E415” எனப்படும் பொருள் கேட்சப்பில் இருப்பதால் அது ஆபத்தானது என்ற வதந்திகள் அதிகம். இதுகுறித்து மஸில் சென்ட்ரிக் எலும்பியல் மற்றும் விளையாட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் தன் இன்ஸ்டாகிராமில் உண்மையை விளக்கியுள்ளார்.

கேட்சப்பில் உண்மையான பிரச்சினை என்ன?

E415 என்று பெயர் பயங்கரமாகத் தோன்றினாலும் அது ஆபத்தான ரசாயனம் அல்ல. கேட்சப்பின் மூல வில்லன் சர்க்கரை மற்றும் உப்பு தான் என்று மருத்துவர் கூறுகிறார்.

* 100 கிராம் கேட்சப்பில் சுமார் 1000 mg சோடியம் (உப்பு) உள்ளது. இது நம் நாள் தேவையின் பாதி அளவு.

* அதே 100 கிராம் கேட்சப்பில் 120–140 கலோரி இருக்கும். இதில் பெரும்பகுதி சர்க்கரை மூலம் வருகிறது.

* உப்பு கேட்சப்பின் preservative (பாதுகாப்பு பொருள்) ஆக வேலை செய்கிறது. ஆனால் அதிகமாக சாப்பிடும் போது இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம்: தேங்காய் இதயத்தை காக்குமா.? நிபுணர்கள் சொல்வது என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.!

அப்படியென்றால் E415 என்றால் என்ன?

* E415 = Xanthan Gum என்று அழைக்கப்படும் இயற்கையான “thickener” (தடிப்பு உண்டாக்கும் பொருள்).

* இது சோளம், கோதுமை அல்லது சோயா போன்ற தானியங்களில் இருந்து பெறப்படும் சர்க்கரையை harmless bacteria (Xanthomonas campestris) மூலம் ferment செய்து தயாரிக்கப்படுகிறது.

* இறுதியாக கிடைக்கும் பொருள் சாப்பிட பாதுகாப்பானது.

* புற்றுநோய் ஏற்படுத்தாது என்றும் டாக்டர் உறுதி செய்துள்ளார்.

* மிக அதிக அளவில் (ஒரு நாளைக்கு 300–500 கிராம் கேட்சப்) சாப்பிட்டால் சிறிய வயிற்றுப்போக்கு அல்லது செரிமான சிக்கல் ஏற்படலாம்.

View this post on Instagram

A post shared by Dr Santhosh Jacob MBBS,DNB,MCh,DABRM,PhD (@drsanthoshjacob)

உண்மையை புரிந்துகொள்ளுங்கள்

* E415 க்கு பயப்பட தேவையில்லை.

* கேட்சப்பின் முக்கிய அபாயம் சர்க்கரை மற்றும் உப்பு தான்.

* ஆகையால் கேட்சப்பை ஒரு சுவை கூட்டும் சாஸ் ஆக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* அதை தினசரி உணவில் அடிப்படை உணவாக எடுத்து கொள்ளக் கூடாது.

இறுதியாக..

டமாட்டோ கேட்சப்பை சுவைக்க அவ்வப்போது பயன்படுத்துவதில் தவறு இல்லை. ஆனால் அதிகமாக சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தம், அதிக உடல் எடை, இதய நோய் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். E415 பற்றி தவறான பயம் கொள்ள வேண்டாம். உண்மையான வில்லன் சர்க்கரை, உப்புதான் என்பதை மறக்காதீர்கள்.

Disclaimer: இந்த கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. தனிப்பட்ட உடல்நிலை மற்றும் உணவு ஆலோசனைகளுக்காக மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகவும்.

Read Next

காபி குடிக்கும்போது நீங்கள் செய்யும் இந்த தவறுகள் வயிற்றையும் கல்லீரலையும் சேதப்படுத்தும்..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 29, 2025 09:50 IST

    Published By : Ishvarya Gurumurthy