Weight Loss Breakfast: உடல் எடையை குறைக்க காலை இதை சாப்பிடுங்கள்!

  • SHARE
  • FOLLOW
Weight Loss Breakfast: உடல் எடையை குறைக்க காலை இதை சாப்பிடுங்கள்!

காலையில் எழுந்ததும் என்ன செய்கிறோம், என்ன சாப்பிடுகிறோம், என்ன குடிக்கிறோம் என்பது வாழ்க்கை முறைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. காலையில் முதலில் என்ன செய்கிறோம் என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பலர் உடல் எடையை குறைக்க பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இதையும் படிங்க: ஒரே நாளில் 500 கலோரிகளை குறைக்க வேண்டுமா? இந்த 6 உணவுகளை தேர்வு செய்யுங்கள்

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் பலர் விலைமதிப்பற்ற பணத்தை வீணடிக்கிறார்கள். இப்படி பணத்தை செலவு செய்தும் பலருக்கும் பலன் கிடைப்பதில்லை.

உடல் எடையை குறைக்கும் காலை உணவுகள்

சில உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சியாளர்கள் டயட் உணவுகளை தொகுத்து வழங்குவார்கள். இதை பின்பற்றுவது பலருக்கும் கடுமையான ஒன்றாக இருக்கும். சில எளிய காலை உணவுகளை பின்பற்றுவதன் மூலமாகவே உங்கள் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.

முட்டை

முட்டை என்ற வார்த்தை கேட்ட உடன் பலருக்கும் நியாகம் வருவது இது எடை அதிகரிக்கும் உணவு என்பது தான். இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி உணர்வு ஏற்படாது. இது பசியைக் கட்டுப்படுத்தும். இதனால் அதிக கலோரிகள் எடுத்துக் கொள்ளாமல் கட்டுப்படுத்த முடியும். எனவே காலை உணவாக முட்டையை எடுத்துக் கொள்ளலாம்.

எடையை குறைக்கும் வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. இதில் குறைந்த அளவிலான கலோரிகளே உள்ளது. காலை நேரத்தில் சர்க்கரை நிறைந்திருக்கும் உணவுகளை உண்வதற்கு பதிலாக வாழைப்பழத்தை உட்கொள்ளலாம்.

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் நார்ச்சத்தும் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். ஒரு வாழைப்பழத்தில் 100 கலோரிகள் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதை தாராளமாக காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

பயிர் வகைகள் சாலட்

பலரும் சாலட் என்று நினைத்த உடன் ஃப்ரூட் சாலட் என்றுதான் நினைக்கிறார்கள். வெஜிடேபிள் சாலட், முளைக்கட்டிய பயிர் சாலட் என்ற பலவகை சாலட்களை உட்கொள்ளலாம். இந்த வேர் சாலட்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இந்த ஸ்ப்ரௌட் வகைகளை சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காது. ஆனால் இதன் நன்மைகளை அறிந்துக் கொண்டால் கண்டிப்பாக இதை சாப்பிடாமல் இருக்க முடியாது.

ஸ்மூத்தி வகைகளை எடுக்கலாம்

ஸ்மூத்தியில் உடலுக்கு சத்து வழங்கும் பல மூலங்கள் உள்ளன. இதை காலையில் எடுத்துக் கொண்டால் உடல் எடையை எளிதாக குறைப்பதோடு உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ஸ்மூத்தியில் காய்கறிகள், பழங்கள், பால் ஆகியவற்றை சேர்ப்பதால் உடலுக்கு வைட்டமின்கள், புரதங்கள் அதிகமாக கிடைக்கும்.

இதையும் படிங்க: வார இறுதியில் எடை அதிகரிப்பு? இதை தவிர்க்க 7 குறிப்புகள் இங்கே

காலையில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் உடல் எடையை குறைக்க பெருமளவு உதவும். இருப்பினும் நீங்கள் வேறு ஏதேனும் மருத்துவ சிகிச்சையையோ, ஒவ்வாமை பிரச்சனையோ இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

Image Source: FreePik

Read Next

Fat Loss Tips: கொழுப்பை கரைக்க உடற்பயிற்சி மட்டும் போதாது.. இது முக்கியம்!

Disclaimer

குறிச்சொற்கள்