Fat Loss Tips: நம்மில் பெரும்பாலானோர் தினசரி உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையே என வருத்தப்படுவது உண்டு. உடல் கொழுப்பு குறைந்தாலே உடல் எடை குறையும். அதோடு பல பிரச்சனைகளும் நீங்கும்.
சிலர் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த உடனே கண்ணாடி முன் நின்று உடல் எடை குறைந்துவிட்டதா என பரிசோதிப்பது உண்டு. இதற்கு சாத்தியமே இல்லை என்பதை முதலில் உணர்ந்துக் கொள்ளுங்கள். சிலர் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் உடற்பயிற்சி உள்ளிட்ட எடை இழப்பு பயிற்சிகள் செய்தும் பலன் பெறாமல் இருப்பார்கள்.
முக்கிய கட்டுரைகள்
இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க டீ உதவுமா? வாங்க பாக்கலாம்…
கொழுப்பு குறைய எளிய வழிகள்

உடற்பயிற்சி பயிற்சியாளரும் ஊட்டச்சத்து நிபுணருமான அக்ஷய் எஸ் ஷெட்டி இதுகுறித்து கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.
உடற்பயிற்சி செய்வது அதிக கலோரிகளை எரிக்கிறது என்ற தவறான எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது, ஆனால் அது அவ்வாறு இல்லை. எடை பயிற்சி நிலைகள் நிறைய கலோரிகளை எரிக்காது. எடைப் பயிற்சியின் போது நீங்கள் 500-700 கலோரிகளை எரிக்கிறீர்கள் என்று உங்கள் ஃபிட்னஸ் வாட்ச் அல்லது பேண்ட் காட்டினாலும் அது முழு உண்மை என்று கருதிவிட முடியாது.
ஃபிட்னஸ் பேண்ட் என்பது உங்களுக்கு ஒரு மதிப்பீட்டை மட்டுமே தருகிறது. அதன் முடிவுகள் துல்லியமானது என வெளிப்படையாக கூறிவிட முடியாது. உங்கள் உடலில் 30-40% கலோரிகள் எரித்துவிட்டதாக ஃபிட்னஸ் பேண்ட் காட்டினால் அதை முழுவதுமாக நம்பிவிட வேண்டாம். அப்படி தினசரி கலோரி அளவுகள் குறைந்தால் நீங்கள் எதிர்பார்த்தப்படி நாட்கள் கணக்கிலேயே உங்கள் உடல் எடையை குறைத்துவிடலாம்.
நீங்கள் ஒரு நல்ல பயிற்சிக்குப் பிறகு 300-400 கலோரிகளை மட்டுமே எரிக்கிறீர்கள், கொழுப்பு எரிப்பு என்று வரும் இது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சரி, கொழுப்பு குறைவதற்கு உடற்பயிற்சி மட்டும் போதாது என்றால், வேறு என்ன செய்வது என்ற கேள்வி வரலாம். இதற்கான பதிலை விரிவாக பார்க்கலாம்.
கொழுப்பு இழப்புக்கு வேறு என்ன செய்ய வேண்டும்?

தீவிர நடைபயிற்சி
ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்துவிட்டு அதன்பின் எந்தவித உடல் செயல்பாடும் இல்லாமல் இருந்து கொழுப்பு குறைவதில் அதிக பலன் கிடைக்காது. எனவே உடற்பயிற்சி மட்டுமின்றி 8-10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டெப்கள் நடக்க முயற்சிக்கவும்.
உணவு முறை உள்ளிட்ட வழிமுறைகள்
எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி மட்டும் போதாது. உணவு உட்கொள்ளல் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். கலோரி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது. உணவில் உள்ள கலோரிகளை கணக்கிடுவது என்பது மிக முக்கியம்.
அதேபோல் சிறுசிறு வேலைகளை கூட நீங்களே செய்ய முயற்சி செய்யுங்கள். கடைக்கு செல்லுதல், லிஃப்ட் பயன்படுத்தாமல் படியில் இறங்கி ஏறுதல், குறுகிய தூரத்திற்கு கூட வாகனம் எடுக்காமல் நடந்து செல்லுதல் உள்ளிட்டவைகளை செய்யுங்கள்.
புரதம் நிறைந்த உணவை உண்ணுங்கள்
நீங்கள் கொழுப்பை குறைக்க முயன்றால் உங்கள் உணவில் அதிகம் புரதம் இருப்பதை உறுதி செய்யுங்கள். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க டீ உதவுமா? வாங்க பாக்கலாம்…
உடல் எடையை குறைக்க முயன்றால் முதலில் கொழுப்பு அளவை குறைக்க முயலுங்கள். இந்த வழிகளை பின்பற்றி உங்கள் உடல் கொழுப்பு அளவை வேகமாக குறைக்கலாம். உங்களுக்கு வேறு ஏதேனும் தீவிர பிரச்சனை இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik