$
How Does Vitamin b12 Help Your Body: உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் பல்வேறு வகையான வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை உதவுகின்றன. பல்வேறு வைட்டமின்கள் இருந்த போதிலும் வைட்டமின் பி12 மிகவும் பிரபலமான ஒன்றாகும். இது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு வகையான நன்மைகளைத் தருகிறது. ஆனால் பலருக்கு வைட்டமின் பி12 பற்றி தெரியாது? அதே சமயம் இதை ஒவ்வொரு நாளும் எடுக்க வேண்டுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழும்.
உண்மையில் மனநிலை மற்றும் ஆற்றலை அதிகரிக்க வைட்டமின் B12 சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்வர். இது உடலில் ஆரோக்கியமான நரம்பு மற்றும் மூளையின் செயல்பாட்டை ஆதரிக்கவும், இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யவும், அனைத்து உயிரணுக்களிலும் உள்ள மரபணுப் பொருளான டிஎன்ஏவை உருவாக்கவும் வைட்டமின் பி12 அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. பெரும்பாலானோர் உணவுகள் மூலம் போதுமான வைட்டமின் பி12-ஐப் பெற்றிருப்பினும், அதன் குறைபாட்டைத் தடுக்க சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்வது பாதிப்பை ஏற்படுத்தாது.
வைட்டமின் B12 பற்றி தெரியுமா?
வைட்டமின் பி 12 என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின்களைக் குறிப்பதாகும். இது கோபால்ட் தாதுக்களைக் கொண்டிருப்பதால் சில சமயங்களில் கோபலமின் என அழைக்கப்படுகிறது. இது இயற்கையாகவே பால், மாட்டிறைச்சி போன்ற சில உணவுகளில் காணப்படுகிறது. மேலும் காலை உணவு தானியங்கள் போன்ற வலுவூட்டப்பட்ட உணவுகளில் இவை காணப்படுகின்றன.
இது முதன்மையாக தாவர உணவுகளில் காணப்படாததால், சைவ உணவைப் பின்பற்றுபவர்கள் வைட்டமின் பி12 கொண்ட உணவுகளை அல்லது சப்ளிமென்ட்ஸ்களைக் கூடுதலாக உட்கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. இதில் வைட்டமின் B12 பெற்றுக் கொள்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Vitamin A Deficiency: இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை எப்படி தடுப்பது?
வைட்டமின் B12 குறைபாடு
வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதாவது சிலர் உணவில் போதுமான பி 12 உட்கொள்ளவில்லை என்றாலும், உணவில் இருந்து பி 12 ஐ உறிஞ்சுவதில் சிரமம் ஏற்பட்டாலும் உடலில் வைட்டமின் B12 குறைபாடு ஏற்படலாம். எனினும் மக்கள் உணவின் மூலம் போதுமான அளவு இந்த ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதன் மூலம், வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்க முடியும்.
வைட்டமின் பி12 தரும் ஆரோக்கிய நன்மைகள்
மூளை மற்றும் நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு
வைட்டமின் பி12 நரம்பியல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான நரம்பு செல்களை பராமரிக்க மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் வைட்டமின் B12 குறைபாடு நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை பாதிக்கலாம். இது காலப்போக்கில் நரம்பு சேதத்திற்கு வழிவகுக்கலாம். எனவே இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க வைட்டமின் பி12 குறைபாட்டைத் தவிர்ப்பது நல்லது.
சிவப்பு இரத்தணு உற்பத்திக்கு
உடலில் ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கும், மெகாலோபிளாஸ்டிக் அனீமியாவைத் தடுப்பதற்கும் போதுமான வைட்டமின் பி12 அவசியமாகிறது. மெகாலோபிளாஸ்டிக் அனீமியா என்பது பெரிய, வளர்ச்சியடையாத செல்களை ஏற்படுத்தும் இரத்த சோகையைக் குறிக்கிறது. இதன் அறிகுறிகளாக பசியின்மை, எடை இழப்பு, சோர்வு, வெளித்தோல், இதயத்துடிப்பு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin D Diet: டையட்டில் சேர்க்க வேண்டிய வைட்டமின் D உணவுகள் இது தான்?
வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த
வைட்டமின் பி12 உடலில் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த காரணத்திற்காக, வைட்டமின் பி12 குறைபாடு இருப்பின், சோர்வாகவும் பலவீனமாகவும் இருப்பதை உணரலாம். இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க வைட்டமின் பி12 நிறைந்த உணவு ஆதாரங்களை அதிகரிப்பதன் மூலமாகவோ, சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலமாகவோ வைட்டமின் பி12 குறைபாட்டிற்கு சிகிச்சையளிப்பதற்கு உதவுகிறது. இந்த சிகிச்சைகள் பெரும்பாலும் 48 முதல் 72 மணி நேரத்திற்குள் மிக விரைவாக வேலை செய்யலாம். எனினும் தனிப்பட்ட திட்டத்தைக் குறித்து மருத்துவரிடம் கலந்துரையாடலாம்.

குழந்தைகளுக்கான வளர்ச்சி
குழந்தையின் மூளை வேகமாக வளர்ச்சியடையும் போது இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யவும், ஆரோக்கியமான மூளை வளர்ச்சியை ஆதரிக்கவும் போதுமான வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. பொதுவாக இது தாய்ப்பாலில் எளிதில் காணப்படுகிறது. எனவே இந்த உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வது குழந்தைகளின் தேவையை எளிதில் பூர்த்தி செய்யலாம். அரிதான காலகட்டத்தில் வைட்டமின் பி12 குறைபாடு குழந்தைகளின் வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்தும். இது சிகிச்சையளிக்கப்படவில்லை எனில், வைட்டமின் பி 12 குறைபாடு காலப்போக்கில் நிரந்தர மூளை சேதத்திற்கு வழிவகுக்கலாம். எனவே குழந்தைகளைப் பற்றி மருத்துவர் அல்லது சுகாதாரக் குழுவிடம் பேசுவதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
எலும்பு ஆரோக்கியத்திற்கு
உடலில் வைட்டமின் பி12 குறைபாட்டின் காரணமாக ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உட்கொள்வது எலும்பு மஜ்ஜை செல்கள் உற்பத்தியை ஆதரித்து, எலும்பு ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதன் மூலம் எலும்பு அடர்த்தியை பராமரிக்கவும், ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் முடியும்.
இது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்களை அன்றாட வாழ்வில் சரியான அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin K Foods: வைட்டமின் கே குறைபாட்டை நீக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
Image Source: Freepik