Benefits Of Eating Amla Daily: ஆம்லா என்றழைக்கப்படும் இந்திய நெல்லிக்காய் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இதில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் இன்னும் பிற நன்மை பயக்கும் சேர்மங்கள் அதிகம் நிறைந்துள்ளது. இத்தகைய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆம்லாவை தினமும் உட்கொள்வது சரியா?
ஆம். தினந்தோறும் ஆம்லாவை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்துடன் சரும ஆரோக்கியம் உட்பட பல்வேறு வழிகளில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதில் தினமும் நெல்லிக்காய் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Avocado Benefits: இந்த நன்மைகள் எல்லாம் பெற தினமும் ஒரு அவகேடோ பழம் சாப்பிடுங்க
தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உடல் எடை குறைப்பு
கசப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு போன்ற சுவைகளை ஒருங்கிணைந்திருப்பது பெருநெல்லிக்காய் ஆகும். இது வெறுமனே அப்படியே சாப்பிடுவது நல்லது. இது தவிர தேனில் கலந்து சாப்பிடுவது, சாறாக அருந்துவது உடல் எடையைக் குறைக்க உதவும் நபர்களுக்குச் சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி பசி உணர்வைக் கட்டுப்படுத்துகிறது. இவை உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.
உயர் இரத்த அழுத்தம்
தினமும் ஆம்லாவை உட்கொள்வது உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் நல்ல கொழுப்பின் அளவையும் சீராக வைக்க உதவுகிறது. மேலும் இது தமனிகள் மற்றும் நரம்புகளில் உள்ள கொழுப்புகளின் திரட்சியைக் குறைக்கிறது. இவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
இரத்த சர்க்கரையைக் குறைக்க
நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஈ, பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், அதன் சேதத்தைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதில் குரோமியம் நிறைந்துள்ளது. இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Masoor Dal Side Effects: இவங்க எல்லாம் மறந்தும் மைசூர் பருப்பை சாப்பிடாதீங்க. அப்றம் பிரச்சனை உங்களுக்குத்தான்
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த
நெல்லிக்காயை உட்கொள்வது உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இதயத்திற்குச் செல்லும் இரத்தக்குழாய்களில் ஏதேனும் அடைப்பு இருப்பின், அதைத் தடுத்து இதயத்தில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது.
சளி, இருமலைக் குறைக்க
ஆம்லா இயற்கையாகவே வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த மூலமாகும். இது சிறந்த நோயெதிர்ப்புப் பண்புகளுடன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த வைட்டமின் சி நிறைந்த ஆம்லாவை உட்கொள்வது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு
கல்லீரலின் சீரான செயல்பாட்டிற்கு நெல்லிக்காய் சிறந்த தேர்வாக அமைகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி கல்லீரல் பாதிப்பைத் தடுக்கிறது. மேலும் கல்லீரலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெற தினந்தோறும் ஒரு நெல்லிக்காயை உட்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves Benefits: இந்த நாள்பட்ட நோய்களை எல்லாம் தவிர்க்க தினமும் 5 கறிவேப்பிலை சாப்பிடுங்க
Image Source: Freepik