Benefits Of Drinking Lassi Daily: கோடைக்காலம் என்றாலே உடலின் வெப்பநிலையை எதிர்த்துப் போராட குளிர்ச்சித் தன்மையை விரும்புகின்றனர். இந்த காலகட்டத்தில் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், புத்துணர்ச்சியூட்டும் உணர்வைப் பெறவும் கோடைக்காலத்தில் குளிர்ச்சியூட்டும் உணவுகள், பானங்களை எடுத்துக் கொள்ளலாம். இவை உயர்ந்த நீர் உள்ளடக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு கோடைக்காலத்தில் சிறந்த தீர்வாக லஸ்ஸி எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். லஸ்ஸி மற்றும் சாஸ் ஆனது குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தயிர் பானமாகும். இது சுவையானது மட்டுமல்லாமல், அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் தினமும் லஸ்ஸி அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
கோடையில் குளிர்ச்சியான லஸ்ஸி
லஸ்ஸியில் உள்ள குளிரூட்டும் பண்புகள் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், புத்துணர்ச்சியைத் தரவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள அதிக அளவிலான நீர் உள்ளடக்கம் உகந்த நீரேற்றத்தை உறுதி செய்கிறது. லஸ்ஸியில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள், வியர்வையின் மூலம் இழந்ததை நிரப்ப உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Moringa Water Benefits: வெறும் வயிற்றில் முருங்கை நீர் அருந்துவதில் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
தினமும் லஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இந்த லஸ்ஸி பானத்தை தினமும் அருந்துவது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதுடன், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த
லஸ்ஸி புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி நிறைந்த சிறந்த ஆதாரமாகும். இதில் புரதச்சத்துக்கள் தசை வளர்ச்சி மற்றும் பழுதுபார்க்க உதவுகிறது. மேலும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறது. இதன் வைட்டமின் பி ஊட்டச்சத்துக்கள் மூளை செயல்பாடு, ஆற்றல் உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கிறது.
நீரேற்றமிக்க பானம்
தயிரைக் கொண்டு தயாரிக்கப்படும் லஸ்ஸி பானம், உடலுக்குப் போதுமான நீரேற்றத்தை வழங்குகிறது. இது திரவங்களின் சிறந்த ஆதாரமாகும். இது நாள்தோறும் நம்மை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவதுடன், வெப்பமான காலநிலைக்கு ஏற்றவாறும் அமைகிறது. இந்த பானம் அருந்துவது கோடைக்காலத்தில் உடலுக்குத் தேவையான குளிர்ச்சியையும், நீரேற்றத்தையும் அளிக்கிறது.
எடை மேலாண்மைக்கு
எடை மேலாண்மைக்கு சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக லஸ்ஸியை எடுத்துக் கொள்ளலாம். இந்த லஸ்ஸியில் உள்ள புரதம் மற்றும் கால்சியம் போன்றவை வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இதன் புரோபயாடிக்குகள் வளர்சிதை மாற்றம் மற்றும் எடைக்கட்டுப்பாட்டில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Kewra Water Benefits: செரிமானம் முதல் முடி பராமரிப்பு வரை! கெவ்ரா வாட்டர் தரும் அற்புத நன்மைகள்
ஆற்றல் மேம்பாட்டிற்கு
கோடைக்காலத்தில் வெயிலின் காரணமாக, உடலில் கலோரிகள் எரிக்கப்பட்டு சோர்வை அடையும் நிலை ஏற்படலாம். இந்த நேரத்தில் லஸ்ஸி அருந்துவது இயற்கையான ஆற்றல் ஊக்கியாக விளங்குகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
லஸ்ஸியில் உள்ள புரோபயாடிக்குகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரித்து நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. லஸ்ஸியில் உள்ள புரோபயாடிக் பண்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை லஸ்ஸியின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.
செரிமான மேம்பாட்டிற்கு லஸ்ஸி
லஸ்ஸியில் உள்ள இயற்கையான என்சைம்கள், புரோபயாடிக்குகள் போன்றவை செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது வயிறு எரிச்சலைத் தணித்து செரிமான அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. எனவே, கனமான அல்லது காரமான உணவுக்குப் பிறகும் லஸ்ஸியை எடுத்துக் கொள்வதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்தலாம்.
நாள்தோறும் லஸ்ஸி அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனினும், புதிய மற்றும் உயர்தர பொருள்களைத் தேர்ந்தெடுப்பதுடன், அதிகப்படியான சர்க்கரையைத் தவிர்ப்பது லஸ்ஸியின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க உதவுகிறது. சமநிலையான உணவில் லஸ்ஸியை சேர்த்துக் கொள்வது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Energy Boosting Seeds: மின்னல் வேகத்தில் செயல்பட இந்த 6 விதைகளை சாப்பிடுங்க
Image Source: Freepik