$
Benefits Of Beetroot And Cucumber Juice: நாம் அனைவரும் பீட்ரூட் மற்றும் வெள்ளரியை சாலட் வடிவில் மட்டுமே சாப்பிட விரும்புவோம். ஆனால், உங்களுக்கு ஜூஸ் குடிப்பது மிகவும் பிடிக்கும் என்றால் பீட்ரூட் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதன் வழக்கமான நுகர்வு பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இரும்புச்சத்து, வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்களின் சிறந்த ஆதாரமாக பீட்ரூட் உள்ளது. வெள்ளரிக்காய் பற்றி கூறினால், அதில் பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ், வைட்டமின் ஏ, சி, கே அனைத்தும் நல்ல அளவில் உள்ளது. கூடுதலாக, வெள்ளரி விதைகளில் கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பைட்டோநியூட்ரியண்ட்களும் உள்ளன.
இந்த பதிவும் உதவலாம் : Sunflower Oil: நீங்க சமையலுக்கு சன்பிளவர் ஆயில் பயன்படுத்துபவரா? அப்போ ரொம்ப கவனமா இருங்க!
குளிர்காலத்தில் தினமும் பீட்ரூட் மற்றும் வெள்ளரி ஜூஸ் குடித்து வந்தால், ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். இது உடலுக்கு ஒரு சிறந்த டிடாக்ஸ் பானமாகவும் கருதப்படுகிறது. பீட்ரூட் மற்றும் வெள்ளரி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதை செய்வதற்கான எளிதான செய்முறையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பீட்ரூட் மற்றும் வெள்ளரி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

செரிமானத்தை மேம்படுத்தும்: இந்த ஜூஸ் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. இதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடலாம்.
உடலை டீடாக்ஸ் செய்யும்: இது உடலை சுத்தப்படுத்தும் இயற்கை நச்சு நீக்கும் பானமாக இது செயல்படுகிறது. இது உடலின் உள்ளே சேரும் அழுக்கு, தீங்கு விளைவிக்கும் துகள்கள் மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Spinach Benefits: பெண்களே! நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ தினமும் கொஞ்சம் கீரை சாப்பிடுங்கள்!
உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்: இந்த ஜூஸ் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுக்கவும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் பயனுள்ளதாக இருக்கும். இதை குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கிறது.
இரத்த சோகை நீங்கும்: இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் நிறைந்த இந்த பானம் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது மற்றும் இரத்த சோகையை தடுக்கிறது.
சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும்: இந்த ஜூஸ் உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது. இது சருமம் தொடர்பான பிரச்சனைகளை விலக்கி, சருமத்தில் ஈரப்பதத்தை பராமரிக்கிறது. இது அழகான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : வைட்டமின் B12 குறைபாட்டை நீக்க இந்த 5 பழங்களை குழந்தைகளுக்கு கொடுங்க!
பீட்ரூட் மற்றும் வெள்ளரி ஜூஸ் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள்கள்
பீட்ரூட் - 1 (சிறியது).
வெள்ளரி - 1 (மீடியம் சைஸ்)
எலுமிச்சை பழம் - 1.
கேரட் - 2.
துருவிய இஞ்சி - சிறிது.
செய்முறை:
எலுமிச்சை தவிர அனைத்து பொருட்களையும் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். இவற்றை மிக்சி அல்லது பிளெண்டரில் போட்டு, ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்னர், ஒரு வடிகட்டியின் உதவியுடன் சாற்றை வடிகட்டி ஒரு கோப்பையில் எடுக்கவும். அதன் மேல் எலுமிச்சை சாற்றை பிழிந்து குடிக்கவும்.
Pic Courtesy: Freepik