Sat Sep 12, 2026 | 12:14 AM IST

Expert

கனமான உணர்வா இருக்கா? என்ன காரணங்கள் தெரியுமா? அதை எவ்வாறு தவிர்ப்பது?

இன்று பலரும் நாள்பட்ட மன அழுத்தம், தனிமை, அதீத சிந்தனை மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கொந்தளிப்புகள் போன்றவற்றால் மார்பில் அதிக கன உணர்வுடன் இருக்கின்றனர். இதில் கனமான உணர்வு ஏற்படுவதற்கான காரணங்களையும், அதை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் மக்கள் சில நேரங்களில் தங்கள் வாழ்க்கையை சற்று சுமையாகவே எண்ணுகின்றனர். மேலும் நடப்பில் நிகழும் ஒரு வருத்தமான நிகழ்வை எண்ணுவதில் கவனம் செலுத்தும் போது, அது பழைய கசப்பு நிகழ்வுகளையும், எதிர்கால நிகழ்வுகளையும் எண்ணி இன்னும் மனதை வருத்தமடையச் செய்கிறது. இது பெரும்பாலானோர் அனுபவிக்கக்கூடியதாகும். இவை அனைத்தும் ஒரே நேரத்தில் உங்களைத் தாக்கத் தொடங்கும் போது, உணர்ச்சிகளும் எண்ணங்களும் ஒன்றன் மீது ஒன்றாகக் குவியத் தொடங்குகிறது. இது பெரும்பாலும் சுவாசிப்பதற்கே கடினமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற சமயங்களில், சிறிய வேலைகள் கூட ஒரு பெரும் பணியாகத் தோன்றக்கூடும். அது மட்டுமல்லாமல், காலக்கெடுவிற்குள் வேலைகளை முடிப்பது சாத்தியமற்றதாகத் தெரிகிறது. இதில் ஒருவர் ஒரே இடத்தில் சிக்கிக்கொண்டது போல உணரக்கூடும். அன்றாட வாழ்க்கையைச் சமாளித்துச் செயல்பட்டாலும், மற்றவர்கள் பார்க்க முடியாத ஒரு அமைதியான பாரத்தையும் சுமந்து வாழ்க்கையைப் பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருப்பர். இந்த உணர்வை உங்களாலும் உணர முடிகிறதா? ஆம் எனில், கவலை வேண்டாம். கனமான உணர்வு ஏற்படுவதற்கான காரணங்களையும், அதைத் தவிர்க்க உதவும் முறைகளையும் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

கனமான உணர்வு ஏற்படுவதற்கான காரணங்கள்

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், இந்தச் சுமையான உணர்விற்குப் பின்னால் உள்ள காரணம் மற்றும் அதிலிருந்து எப்படி மீள்வது என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

"வாழ்க்கை மிகவும் பாரமாக இருக்கிறது என்றும், எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்றும் நீங்கள் எப்போதாவது உணர்ந்திருந்தால், நீங்கள் தனியாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உயிரியல் ரீதியாக, இவை குறைந்த செரோடோனின் மற்றும் குறைந்த டோபமைனுடன் தொடர்புடையவை. இது மகிழ்ச்சி, உந்துதல் அல்லது நம்பிக்கையை உணர்வதை கடினமாக்குகிறது" என்று அவர் தனது பதிவில் கூறினார்.

image

nutritionist-shares-tips-to-protect-your-physical-health-during-emotional-stress-Main-1758256483289.jpg

மேலும் அவர் தனது பதிவில் கூறியதாவது, “நீண்டகால மன அழுத்தம், தனிமை, அதீத சிந்தனை மற்றும் உணர்ச்சிப் பெருக்கம் போன்றவை மூளையில் பயத்தின் மையங்களைத் தூண்டி, உங்களை வலியிலேயே சிக்க வைக்கின்றன" என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, ஊட்டச்சத்து நிபுணர் மனச்சோர்வை வெல்வதற்கான படிகளைப் பகிர்ந்தார்.

மனச்சோர்வை வெல்வதற்கான நான்கு படிகள்

1. சூரிய ஒளி படும்படி இருப்பது

ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்களின் கூற்றுப்படி, "ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் சூரிய ஒளி படுவது கூட செரோடோனின் அளவை அதிகரித்து, மனநிலையை மேம்படுத்தி, உணர்ச்சி சமநிலையைக் கொண்டுவரும்" எனக் கூறினார். எனவே, சூரிய ஒளியின் மூலம் செரோடோனின் அளவை மேம்படுத்தி உணர்ச்சி சமநிலையை மேம்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஹேங்கோவரைக் குணப்படுத்த சிக்கரி வேர் சாறு உதவுமா? நிபுணர் என்ன சொல்கிறார்

2. செரோடோனினை ஆதரிக்கும் உணவுகளை உண்ணுவது

"வால்நட்ஸ், வாழைப்பழம், டார்க் சாக்லேட், விதைகள் மற்றும் டிரிப்டோபான் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது மனநிலையை இயற்கையாகவே மேம்படுத்தும்" என்று ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கிறார். இந்த வகை உணவுகளை உட்கொள்வதன் மூலம் நல்ல மனநிலையை மேம்படுத்தலாம்.

3. ஒமேகா-3 நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது

ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆளி விதைகள், சியா விதைகள், வால்நட்ஸ் மற்றும் நல்ல தரமான எண்ணெய்களை சேர்க்க வேண்டும். இவை உடலில் வீக்கத்தைக் குறைத்து, உணர்ச்சி ஆரோக்கியத்தை நிலைப்படுத்த உதவுகின்றன என்று அந்த ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார்.

4. நீங்கள் நம்பும் ஒருவரிடம் பேசுவது

இறுதியாக, சுகாதார நிபுணர், "உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது ஒரு பலவீனம் அல்ல; அது ஒரு விடுதலை," என்று குறிப்பிடுகிறார். இது "உங்கள் நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது மற்றும் உணர்ச்சி ரீதியான தனிமையைப் போக்குகிறது" என்றார்.

image

mental-stress-reduce-in-tamil-1748903285339.jpg

View this post on Instagram

A post shared by Anjali Mukerjee (@anjalimukerjee)

இறுதியாக அஞ்சலி முகர்ஜி,”தொடர்ந்து எடுக்கப்படும் சிறிய படிகள், நீங்கள் உணருவதை விட உங்கள் உள் உலகத்தில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று உறுதியளிக்கிறார்.

எனவே, மனச்சோர்வாகவோ அல்லது அந்நியமாகவோ உணர்வது உங்கள் தவறு அல்ல என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், இந்த உணர்வுகளைக் கடக்க நீங்கள் சுறுசுறுப்பாக எடுக்கும் நடவடிக்கைகளே இந்த குணப்படுத்தும் பயணத்தில் மிக முக்கியமானவையாகும்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: உங்கள் துணை அருகில் தூங்குவதால் கிடைக்கும் அதிசய நன்மைகள் – நிபுணர் விளக்கம்

Image Source: Freepik

Read Next

மனச்சோர்வில் மதுவை நாடும் மக்கள்.! ஏன் தெரியுமா.? விளக்கம் இங்கே..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 11, 2025 12:31 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content