
சோகமாக இருக்கும் போது அல்லது மனம் சரியில்லாதபோது மது குடிக்கிறார்கள் என்ற தகவலை நாம் எப்போதும் கேள்விப்படுகிறோம். இது பலருக்கும் ஒரு ‘escape’ போல தெரிந்தாலும், உண்மையில் அது மனநலத்தைக் குறைக்கும் ஆபத்தான வழி என பல ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக மனச்சோர்வு (Depression) அல்லது பதட்ட நோய்கள் (Anxiety Disorder) உள்ளவர்களுக்கு மது பழக்கம் நிலையை மேலும் மோசமாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். OnlyMyHealth குழுவிடம், Fortis Escorts Faridabad மருத்துவமனை மனநல நிபுணர் டாக்டர் சமீர் பார்கவா இதுதொடர்பாக விரிவாக விளக்கினார்.
முக்கியமான குறிப்புகள்:-
CHECK YOUR
MENTAL HEALTH

மனச்சோர்வு மற்றும் மதுவுக்கு என்ன தொடர்பு?
ஆராய்ச்சிகள் தெளிவாக கூறுவது, மது குடிப்பவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகும் சாத்தியம் அதிகம். அதேசமயம், மனச்சோர்வில் இருக்கும் பலர் “Self-medication” என்று மதுவை நாடுகிறார்கள். “மனச்சோர்வு அல்லது பதட்டத்தில் இருக்கும் சிலர் மனதை நேரம் தற்காலிகமாக அமைதிப்படுத்த மது குடிக்கிறார்கள். ஆனால் இது நீண்ட காலத்தில் பழக்கத்தை உருவாக்கி நிலையை மோசமாக்குகிறது. மேலும் இது எடுத்துக்கொள்கிற மருத்துவ மருந்துகளின் செயல்பாட்டையும் குறைக்கிறது” என்று டாக்டர் பார்கவா கூறுகிறார். அதனால் Depression + Alcoholism இரண்டும் சேர்ந்து வந்தால் அது மிகப்பெரிய சிகிச்சை சவாலாக மாறும்.
மது மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு
மது மூளையின் முக்கிய பகுதிகளை நேரடியாக பாதிக்கிறது:
* மதிப்பீட்டுத் திறன்
* செயல் கட்டுப்பாடு
* நினைவாற்றல்
* உணர்ச்சி கட்டுப்பாடு
மது மூளையின் முக்கிய neurotransmitters ஆகிய GABA, Glutamate, Dopamine ஆகியவற்றை குழப்புகிறது. இது தற்காலிகமாக சிலருக்கு “calmness” அல்லது “euphoria” போல தோன்றினாலும், தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை முதிர்வு, கவனம் குறைவு, நினைவாற்றல் குறைவு, சிந்தனை திறன் பாதிப்பு உண்டாகும்.
மது குடித்த பிறகு ஏன் மனம் துவண்டு போகிறது?
“மது தானாகவே ஒரு depressant. இது மூளையின் ரசாயன சமநிலையை குலைத்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பகுதிகளை slow ஆக்குகிறது. அதனால் குடித்த சில நேரம் கழித்து மனஅழுத்தம், துக்கம், கவலை அதிகரிக்கிறது” என்று டாக்டர் பார்கவா விளக்கம். மேலும் மதுவால் தூக்கக் குறைவு, அதிக சோர்வு, எரிச்சல், கவனம் குறைவு. இதனால் depression மேலும் மோசமாகிறது.
இறுதியாக..
மனச்சோர்வில் இருக்கும் சிலர் தற்காலிக நிம்மதிக்காக மதுவை நாடினாலும், அது நீண்டகாலத்தில் தீங்கான விளைவுகளை மட்டுமே தருகிறது. மதுவும் depression-உம் சேர்ந்து பெரும் ஆரோக்கிய ஆபத்தை உருவாக்கும். சரியான சிகிச்சை, தெரபி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இந்த நெருக்கடியை கடக்க முடியும்.
Disclaimer: இந்த கட்டுரை தகவல் பகிர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டால் தகுந்த மனநல நிபுணரை அணுகவும்.
Read Next
இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க அதிக ஸ்ட்ரெஸ்ல இருக்கீங்கனு அர்த்தம்.. இயற்கையாகவே எப்படி குறைக்கலாம்
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 19, 2025 20:12 IST
Published By : Ishvarya Gurumurthy