மனச்சோர்வு என்பது ஒரு மனநிலைக் கோளாறு ஆகும். சோகம், சோர்வு, பயனற்றவர் போல் உணர்வது, நம்பிக்கையின்மை, ஆற்றல் இழப்பு, சிந்தனை அல்லது முடிவுகளை எடுப்பதில் சிரமம், தற்கொலை பற்றிய எண்ணம், பதற்றம், கவலை ஆகியவை மனச்சோர்வின் சில குறிப்பிடத்தக்க அறிகுறிகளாகும்.
மனச்சோர்விலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல. அப்படிப்பட்ட தருணங்களில் சிக்கியிருப்போர் செய்யக்கூடாத சில விஷயங்களை நிபுணர்கள் உதவியுடன் உங்களுக்கு நினைவூட்டியுள்ளோம்.
முக்கிய கட்டுரைகள்
அதை விட்டு விலகுங்கள்:
யாருக்கு தான் பிரச்சனை இல்லை, சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் வீட்டிற்குள் முடங்கக்கூடாது என உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லிக்கொள்ளுங்கள். மனச்சோர்வில் இருக்கும் போது எதைப் பற்றி யோசிப்பதும் தவறான முடிவை எடுக்கவே தோன்றும்.

இதையும் படிங்க: Mental Health:இந்த 5 பழக்கங்கள் உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும்!
எனவே உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் பிரச்சனைகளைப் பற்றி சிந்திப்பதில் இருந்து விலகி இருங்கள், அவற்றைக் கவனிக்காமல் விட்டாலே மனச்சோர்வில் இருந்து விடுபட்டு, ஆர அமர்ந்து பிரச்சனைக்கான தீர்வை பின்னர் தெளிவாக எடுக்கலாம்.
தூக்கத்தை தவிர்க்காதீர்கள்:
நரம்பு மண்டலத்தை நிதானமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க ஆரோக்கியமான தூக்கம் மிகவும் முக்கியமானது.
மன அழுத்தம் என்ற பெயரில் தாமதமாக உறக்கச் செல்வது அல்லது தாமதமாக உறங்கி எழுவது ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் கடைபிடிக்காதீர்கள். ஏனெனில் முறையான தூக்கம் இல்லை என்றால் மனச்சோர்வு அதிகரிக்குமோ தவிர, குறையாது.
இதையும் படிங்க: தனிமையில் இருப்பவர்களே உஷார்… இந்த அறிகுறிகளை புறக்கணிகாதீர்கள்!
வீட்டிற்குள் பூட்டிக் கொள்வது:
வீட்டை விட்டு வெளியே செல்லவும், காற்றோட்டமான இயற்கை வெளியில் கைவீசி நடைபோடவும் உங்களை நீங்களே ஊக்கப்படுத்த வேண்டும். அது நம் மனது கண்டதையும் நினைத்து குழம்பாமல் இருக்கவும், தனிமை உணர்வு அதிகரிப்பதை தடுக்கவும் உதவும்.
இந்த விஷயங்கள காதுல வாங்காதீங்க:
உலகம் முழுவதும் நடக்கும் பயங்கரமான விஷயங்களைப் பற்றிய செய்திகளால் ஊடகங்கள் நம்மை மனச்சோர்வடையச் செய்யலாம். முடிந்தவரை இதுபோன்ற செய்திகளில் இருந்து விலகி இருக்க முயற்சிக்க வேண்டும்.
தப்ப வேண்டாம்:

சமூக ஊடகங்கள் அல்லது வீடியோ கேம்களின் உதவியுடன் உணர்வுகளிலிருந்து தப்பிக்க முயற்சிக்கக் கூடாது. மாறாக, நம் உணர்வுகளுடன் உட்கார்ந்து ஆரோக்கியமான முறையில் அவற்றைக் கையாள நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
குற்ற உணர்வு:
நமது மனச்சோர்வைப் பற்றி நாம் ஒருபோதும் குற்றவுணர்வு கொள்ளக்கூடாது. அதற்கு பதிலாக, நம் உணர்ச்சிகளை நிவர்த்தி செய்வதற்கும், நம்மை நன்றாக உணருவதற்கும் வழிகளைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும்.
ஒப்பீடுகள்:
மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது வாழ்க்கையைப் பார்ப்பதற்கான ஆரோக்கியமற்ற வழியாகும். ஒவ்வொருவருக்கும் அவரவர் பயணங்கள் உள்ளன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், மேலும் நம்முடைய பயணத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இதற்கு வெட்கப்படாதீர்கள்:
நாம் பாதுகாப்பாக உணரும் நபர்களின் உதவியை நாட வேண்டும் - நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர். விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறும் போது நாம் மருத்துவ உதவியை நாடலாம்.
ImageSource: Freepik