Thu Oct 29, 2026 | 11:50 AM IST

இதை கவனிங்க.. உங்கள் மலம் எப்படி வெளியேறுகிறது? இப்படி வந்தால் பிரச்சனை தான்!

மலத்தின் நிறத்தைப் பார்த்து உங்கள் ஆரோக்கியத்தையும் அறியலாம். வரும் நோய்கள் மற்றும் உடல் உள்ளுறுப்புகள் பிரச்சனையை உடலில் இருந்து வெளியேறும் மலத்தின் மூலம் முன்கூட்டியே அறியலாம்.
இதை கவனிங்க.. உங்கள் மலம் எப்படி வெளியேறுகிறது? இப்படி வந்தால் பிரச்சனை தான்!இதை கவனிங்க.. உங்கள் மலம் எப்படி வெளியேறுகிறது? இப்படி வந்தால் பிரச்சனை தான்!

ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமற்ற உணவு என தரம் பிரித்து பார்த்து உண்ணுகிறோம். இதுகுறித்து மிகவும் விழிப்புடனும் நாம் இருக்கிறோம். ஆனால் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளில் கவனம் செலுத்துவதில்லை. உடலில் இருந்து வெளியேறும் மலத்தின் மூலம் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அறிந்துக் கொள்ளலாம்.

மலம் செரிமான செயல்முறையின் ஒரு பகுதியாகும். உடல் வெளியேற்றும் அனைத்து கழிவுப்பொருட்களும் மலத்தில் உள்ளன. இதில் செரிக்கப்படாத உணவுத் துகள்கள், பாக்டீரியாக்கள், உப்புகள் மற்றும் பிற பொருட்கள் இருக்கலாம். சில நேரங்களில் மலத்தின் நிறம், அமைப்பு, அளவு மற்றும் வாசனை ஆகியவற்றில் மாறுபாடு இருக்கும்.

அதிகம் படித்தவை: குளிர்கால நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இதை ஃபாளோ பண்ணவும்..

மோசமான மலத்தின் அறிகுறிகள்

இந்த மாற்றங்கள் பொதுவானவை என்றாலும். இவை ஓரிரு நாட்களில் குணமாகும். ஆனால் சில நேரங்களில் மலத்தின் நிறம் மற்றும் வாசனையின் அடிப்படையில் ஆரோக்கியத்தைக் கண்டறியலாம். கெட்ட மலம் உடலில் ஏற்படும் நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் கெட்ட மலம் என்றால் என்ன என்று நீங்கள் யோசித்து உள்ளீர்களா? மோசமான மலத்தின் அறிகுறிகள் என்ன என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

கடினமான துண்டுகளாக மலம்

உங்கள் மலம் துண்டுகளாக வந்தால். இது கடினமாகி, மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது, பின்னர் அது மோசமான மலத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. கடினமான துண்டுகள் கொண்ட மலம் கடுமையான மலச்சிக்கலின் அறிகுறியாகும். எனவே, குடல் இயக்கத்தின் போது உங்களுக்கு வலி இருந்தால், கடினமான துண்டுகளாக மலம் வெளியேறுகிறது, இந்த அறிகுறியை புறக்கணிக்காதீர்கள்.

கருப்பு மலம்

கறுப்பு மலமும் மோசமான மலத்தின் அறிகுறியாகும். குறிப்பாக கருப்பு நிற மலம் தார் போல் இருந்தால், அது இரைப்பை குடல் இரத்தப்போக்கு அறிகுறியாக இருக்கலாம். இந்த சூழ்நிலையை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் அலட்சியப்படுத்தாதீர்கள். நீங்கள் கருப்பு நிற மலம் கழிப்பதாக இருந்தால், கண்டிப்பாக ஒரு முறையாவது மருத்துவரை அணுகவும்.

மஞ்சள் மலம்

குறிப்பிட்ட மஞ்சள் நிற மலமும் மோசமான மலத்தின் அறிகுறியாகும். மலம் மஞ்சள் நிறமாகவும், கொழுப்பாகவும் காணப்பட்டால், மலத்தில் அதிக கொழுப்பு உள்ளது என்று அர்த்தம். இது என்சைம்கள் அல்லது பித்தத்தை உற்பத்தி செய்வதில் சிரமம் காரணமாக இருக்கலாம்.

திரவ மலம்

கடினமான மலம் மோசமான ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. அதேபோல், திரவ மலம் கூட மோசமான ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். திரவ மலம் வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கத்தின் அறிகுறியாகும். திரவ மலம் வெளியேறினால், இந்த சூழ்நிலையில் நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

பெரும்பாலான மக்கள் சில நேரங்களில் மலத்தின் நிறத்தில் குறிப்பிட்ட மாறுபாட்டைக் கவனிக்கிறார்கள். இது உணவுமுறை அல்லது வேறு ஏதேனும் சிறு காரணங்களால் இருக்கலாம். எனவே, 2 அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களுக்கு மலத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால், நிச்சயமாக மருத்துவரை அணுகவும்.

இதையும் படிங்க: ஆறிப்போன சுடுநீரை மீண்டும் சூடுபடுத்திக் குடிப்பதால் என்னாகும் தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

pic courtesy: freepik

Read Next

→ Rubbing Palms Benefits: குளிரும் போது கைகளை தேய்க்கும் பழக்கம் இருக்க? இதன் நன்மைகள் இங்கே!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

M Karthick

Senior Sub Editor

செய்தியாளர், செய்தி ஆசிரியர் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். ஆரோக்கிய நலன், அழகு பராமரிப்பு, பெற்றோர் குழந்தைகள் நலன், சினிமா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து கற்றறிந்து எழுத விரும்புபவன். தான் பதிவிடும் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். கருத்தரங்கில் பங்கேற்கவும் புத்தகம் படிக்கவும் பிடிக்கும். தனது செய்தியை படிக்கும் பயனருக்கு அதுசார்ந்த தகவலில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.