Heart Attack Causes: நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக விளங்குவது இதயம் ஆகும். இது உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்வதன் மூலம், அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தம் செல்ல ஏதுவாகிறது. மற்ற உறுப்புகளுக்கு இதயம் இரத்தத்தை எடுத்துச் செல்லும் திறன் பாதிப்படைவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்படுவது அதிகரிக்கப்பட்டு, உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஆனால், மாரடைப்பு ஏன் மற்றும் எப்படி ஏற்படுகிறது தெரியுமா? மாரடைப்பு பற்றியும், இந்த தீவிர நோய் குறித்த விவரங்களை மும்பையில் உள்ள ஏசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட் மூத்த இருதய நோய் நிபுணர் டாக்டர் சந்தோஷ் குமார் டோரா அவர்கள் விவரித்துள்ளார்.
இதயம் வேலை செய்யும் விதம்
இதயத்தில் ஏற்படும் பிரச்சனையான மாரடைப்பு குறித்து அறியும் முன், இதயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம். நம் உடலின் முக்கிய உறுப்பான இதயம், 24 மணி நேரமும் வேலை செய்யும். அதாவது இது துடிக்கும் இதயத்துடிப்பைப் பொறுத்து உணர முடிகிறது. இதயத்தின் வேலை, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இரத்தத்தை ஒரு வழியாக உடல் உறுப்புகளுக்கு வழங்குவதும், மற்றொரு வழியில் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் உடலுக்குத் தேவையற்ற கூறுகளைக் கொண்ட இரத்தத்தை மீண்டும் கொண்டு வருவதும் ஆகும். இதயத்தில் நடக்கும் இந்த வேலைகள் தமனிகள், நரம்புகள் செல்கள், இரத்த நாளங்கள் மூலம் தொடர்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: World Heart Day 2023: உப்பு மற்றும் சர்க்கரை உணவுகள் சாப்பிடுவது, இதயத்துக்கு பாதுகாப்பாக இருக்குமா?
இதயத்தின் வலது பக்கம் பல்வேறு உறுப்புகளில் இருந்து இரத்தத்தை (நச்சுக்கள் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது) எடுத்து நுரையீரலுக்கு செலுத்துகிறது. இங்கே இரத்தத்தில் இருந்து கார்பன்-டை-ஆக்ஸைடு அகற்றப்படுகிறது. மேலும், புதிய ஆக்ஸிஜன் இரத்தத்தில் சேர்க்கப்படுகிறது. அதன் பிறகு, இந்த இரத்தம் நுரையீரலில் இருந்து இதயத்தின் இடது பகுதிக்கு அனுப்பப்பட்டு மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு செலுத்தப்படுகிறது. இந்தப் பாதையில் சிறுநீரகம் உள்ளது. சிறுநீரகத்தின் வேலை இரத்தத்தை வடிகட்டுவது மற்றும் நச்சுக்களை அகற்றுவது ஆகும்.
மாரடைப்பு என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது?
நமது முழு உடலுக்கும் ஆக்ஸிஜனை வழங்கும் முக்கிய உறுப்பு இதயம் ஆகும். உடலில் அனைத்து தசைகள் மற்றும் செல்கள் உயிருடன் இருக்க ஆக்ஸிஜன் அவசியமாகும். இத்தகைய சூழ்நிலையில், குறைந்த ஆக்ஸிஜன் மற்ற உறுப்புகளை அடைந்தால் உடலில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதாவது குறைவான ஆக்ஸிஜன் இதயத்தை அடைந்தால் அல்லது முற்றிலும் நின்றுவிட்டால் இதய தசைகள் இறக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக, இதயம் மற்ற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க முடியாமல் படிப்படியாக அனைத்து உறுப்புகளும் இறக்கத் தொடங்குகின்றன. இந்த நிலையே மாரடைப்பு எனப்படுகிறது. தமனிகளில் படிந்திருக்கும் கொழுப்பு, பிளேக் அல்லது இரத்த உறைவு போன்றவை இதயத்திற்கு ஆக்ஸிஜன் வழங்குவதைத் தடுக்கலாம். கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு நிறைந்த உணவுகளால், உடலில் சேரும் ஒரு ஒட்டும் பொருளாகும். இது தமனிகளில் குவிந்து இரத்த விநியோகத்தைத் தடுக்கிறது.
மாரடைப்புக்குப் பின் மக்கள் எவ்வாறு இருப்பர்?
மாரடைப்பால் ஒருவரின் மரணம் நிச்சயம் என்பது கிடையாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு நபர் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம், காப்பாற்றப்படலாம். இவை மாரடைப்பு ஏற்படும் தசை சேதத்தின் அளவு, மாரடைப்பின் போது ஒரு நபரின் இதயத்தின் எந்தப் பகுதிக்கு எவ்வளவு இரத்த விநியோகம் தடைபட்டது மற்றும் அந்த நபர் எவ்வளவு விரைவாக மருத்துவ சிகிச்சை பெற்றார் என்பதைப் பொறுத்ததாகும். இதில் இரத்த ஓட்டம் முற்றிலும் நின்று விடும் போது, மாரடைப்பு நோயாளிக்கு மருத்துவமனையை அடைய நேரம் கொடுக்காது. ஆனால், இது படிப்படியாக ஏற்பட்டால் சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம், இந்த பாதிப்பை நிறுத்தி உயிரைக் காப்பாற்ற முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: World Heart Day 2023: உங்க இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறிகள். நிபுணர் கூறும் விளக்கம்
மாரடைப்புக்குப் பிறகு தசைச் சேதம் குணமடையவில்லையா?
இயற்கையாகவே நமது உடல் அதன் பெரும்பாலான பிரச்சனைகளைத் தானே குணப்படுத்தும் வகையில் அமைகிறது. மாரடைப்புக்குப் பின், உடலே சேதமடைந்த தசைகளை, வடு திசு மூலம் சரி செய்கிறது. ஆனால், அதற்கு 7 முதல் 8 வாரங்கள் அல்லது சில மாதங்கள் கூட ஆகலாம். ஆனால், இந்த வடு திசுக்கள் ஆரோக்கியமான தசை திசுக்களைப் போல சுருக்கமடையாது மற்றும் திறக்காது. அதாவது, இந்த திசுக்கள் ஆக்ஸிஜன் விநியோகத்திற்கு உதவாது. இதனால், இதயத்தின் செயல்திறன் நிச்சயமாக பாதிக்கப்படலாம்.
இதயம் ஒரு நுட்பமான உறுப்பாகும். சாதாரண சூழ்நிலையில் இதயத்தின் சிறு பகுதியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அது தன் வேலையைச் செய்து கொண்டே இருக்கும். எனினும், அதன் திறன் குறையும். இந்நிலையிலேயே ஒரு நபர் மாரடைப்பின் லேசான அறிகுறிகளை உணரலாம். இது மினி அல்லது லேசான மாரடைப்பு எனப்படுகிறது. இந்த அறிகுறியைப் புரிந்து கொண்டு உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்து, வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் இதயத்தை சேதத்திலிருந்து காப்பாற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம்: World Heart Day 2023: இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனே இதய மருத்துவரை அணுகவும்!
Image Source: Freepik