Jaggery Benefits: சர்க்கரையை விட வெல்லம் எவ்வளவு நல்லது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Jaggery Benefits: சர்க்கரையை விட வெல்லம் எவ்வளவு நல்லது தெரியுமா?


வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? வெல்லத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? இதற்கான விளக்கங்களை இங்கே காண்போம்.

சர்க்கரையை விட வெல்லம் ஏன் சிறந்தது?

வெல்லத்தில் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஆனால், சர்க்கரையில் இந்த சத்துக்கள் இல்லை. இது செயலாக்கத்தின் காரணமாகும். சர்க்கரையில் கலோரிகள் அதிகம். இதை அதிகமாக உட்கொள்வதால் உடல் எடை அதிகரிப்பு மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். அதனால்தான் வெல்லத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.

வெள்ளை சர்க்கரையில் 99.7 சதவீதம் சுக்ரோஸ் உள்ளது. வெல்லத்தில் 70 சதவீதம் சுக்ரோஸ் மட்டுமே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால்தான் புரதங்கள், கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய வெல்லத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: Jaggery Benefits: சீனிக்கு பதில் வெல்லத்தைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதா?

வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

செரிமானத்தை மேம்படுத்துகிறது

வெல்லத்தில் உள்ள இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் சீரான செரிமானத்திற்கு உதவுகின்றன. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அஜீரணம், வீக்கம் மற்றும் வாயு போன்ற அறிகுறிகளைக் குறைக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரத்த சோகையை குறைக்கிறது

வெல்லம் சாப்பிடுவதன் அற்புதமான நன்மை என்னவென்றால், அது இரத்த சோகையை குறைக்கிறது. இதில் இரும்பு மற்றும் பாஸ்பரஸ் கூறுகள் உள்ளன. இவை இரத்த சோகை பிரச்னையை தடுக்கும். மேலும், உடலில் இரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது.

வெல்லம் இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. கருவுற்ற பெண்கள் வெல்லம் சாப்பிட்டால் இரத்தசோகை பிரச்சனை குறையும். 2015 இல் 'ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன்' வெளியிட்ட அறிக்கையின்படி, 12 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு 100 கிராம் வெல்லம் சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண்களில் ஹீமோகுளோபின் அளவு கணிசமாக அதிகரித்ததாக கண்டறிந்துள்ளனர். தினமும் வெல்லம் சாப்பிடுவதால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

Image Source: Freepik

Read Next

Red Banana Benefits: விந்தணு அதிகரிப்பு முதல் பார்வை திறன் மேம்பாடு வரை.. செவ்வாழை பழத்தின் நன்மைகள் இங்கே..

Disclaimer

குறிச்சொற்கள்