ஒரு மனிதருக்கு உறக்கம் என்பது மிக முக்கியம். இந்த டிஜிட்டல் யுகத்தில் எங்கு திரும்பினாலும் ஸ்க்ரீன் அணுகல் தான். ஸ்க்ரீன் அணுகல் இல்லாமல் பொழுதுபோக்கு அம்சமே இல்லை என ஆகிவிட்டது. இரவில் தூங்கும் நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை மிக சொர்ப்பம். தற்போது இதுவே பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறையாக மாறியுள்ளது. இதன் விளைவாக, மக்கள் பெரும்பாலும் காலையில் போதுமான தூக்கம் பெறுவதில்லை. ஏராளமானோர் தூக்கமின்மை என்பதை பெரும் பிரச்சனையாக கருதுவதில்லை.
தூங்காமல் இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும்
சரியாக தூங்காமல் எழுந்திருப்பவர்கள் அடுத்த நாள் தூங்கிக் கொள்ளலாம் என சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். அரைகுறையாக தூங்கி எழுந்து தங்கள் அன்றாட வேலையை பார்க்கச் செல்பவர்கள் பலர். இதனால் ஏற்படும் பின் விளைவுகளை யாரும் அறிவதில்லை. பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட தூக்கமின்மை என்பதும் பிரதான காரணமாகும்.
இதையும் படிங்க: மலச்சிக்கல் இத்தனை பாதிப்பை ஏற்படுத்துமா?

தலைவலி
அமெரிக்க மைக்ரேன் அறக்கட்டளை கூற்றுப்படி , "தூக்கமின்மை அல்லது போதிய தூக்கம் இல்லாதது ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். அதேபோல், நீங்கள் போதிய நேரம் தூங்காமல் இருந்தால், தலைவலி உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க வழிவகுக்கும். தூக்கமின்மை ஒற்றை தலைவலி மற்றும் ஹிப்னிக் தலைவலியை ஏற்படுத்தலாம்." நல்ல தூக்கம் இல்லையென்றால், தலைவலி ஏற்படுவது ஏறத்தாழ உறுதியான விஷயமாகும்.
கண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்
தூக்கமின்மையால் சிறு வயதிலேயே கண்களுக்குக் கீழே கருமை, சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது தவிர, நல்ல தூக்கம் இல்லாதபோது, கண்களில் எரியும் உணர்வு இருப்பதையும் நீங்கள் அடிக்கடி உணர்ந்திருப்பீர்கள். கண் எரிச்சல் காரணமாக வாகனம் ஓட்டுவது, எழுதுவது, படிப்பது மற்றும் கவனம் செலுத்தும் பணிகளில் சிரமம் ஏற்படும். அதுமட்டுமின்றி சில சமயங்களில் கண்கள் வறட்சி அடையும் பிரச்சனையும் சந்திக்க வைக்கும்.
நினைவாற்றல் சிக்கல்
நீங்கள் நன்றாக தூங்கவில்லை என்றால் உங்கள் நினைவாற்றல் என்பதும் கேள்விக்குறியாகும். சிறிய விஷயங்களை நினைவில் கொள்வதிலும் சிரமம் ஏற்படும். நீங்கள் நன்றாக தூங்கினால் நினைவாற்றல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். தூக்கமின்மையால் ஒருவகை மந்தநிலை ஏற்பட்டு எதிலும் சரியாக செயல்படமுடியாது.
எந்த செயலலிலும் ஈடுபாடு இருக்காது
போதிய தூக்கம் இல்லாததால், எந்த விதமான செயலிலும் பங்கு கொள்ள முடியாது. குறைவான உடல் செயல்பாடு காரணமாக, பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. இது வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கிறது.
நீங்கள் நன்றாக தூங்கினால், உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதோடு, உணவிலும் கவனம் செலுத்துவீர்கள். சரியாக தூங்காமல் எது செய்தாலும் அவை முழுமை அடையாது. உடற்பயிற்சி போன்ற எந்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காது.
எரிச்சல் மற்றும் கோபம் வரும்
உங்களுக்கு நல்ல மற்றும் ஆழ்ந்த தூக்கம் வரவில்லை என்றால், இந்த மனநிலையும் மோசமான விளைவை ஏற்படுத்தும். பல நேரங்களில், தூக்கமின்மையால், அக்கறையின்மை, விரக்தி மற்றும் கோபமும் அதிகரிக்கிறது. இது மட்டுமின்றி, ஏற்கனவே ஏதேனும் பிரச்சனையால் ஒருவர் சிரமப்பட்டிருந்தால், அவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கலாம் அல்லது பதட்டம் ஏற்படலாம்.
நல்ல தூக்கம் பெறுவது எப்படி?

● உறங்குவதற்கு முன் உங்கள் அறையில் விளக்குகளை அணைக்கவும்.
● தொலைபேசியுடன் படுக்கையறைக்கு செல்ல வேண்டாம்.
● இரவு வெகுநேரம் வரை விழித்திருந்து அலுவலக வேலைகளைச் செய்யாதீர்கள்.
● தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
● அதிக சத்தத்தை ஏற்படுத்தும் பொருட்களை படுக்கையறையை சுற்றி வைப்பதை தவிர்க்கவும். சத்தம் தூக்கத்தைக் கெடுக்கும்.
● இரவில் டிவி பார்த்து தூங்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் தூங்கச் செல்லும் போதெல்லாம், டிவியை அணைக்கவும். படுக்கையறையில் டிவி வைக்காமல் இருப்பது நல்லது.
● நீங்கள் தூங்கும் இடத்தை உங்கள் ஏற்றார் போல் சௌகரியமாக வைத்துக் கொள்ளுங்கள். சரியான தூக்கமும், சரியான உணவும் எடுத்துக் கொண்டால் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளலாம், மகிழ்ச்சியோடு வாழலாம்.
இதையும் படிங்க: Tooth Decay: தீரா பல் வலியை தடுக்க உகந்த வைத்தியம்!
image source: freepik