பெரும்பாலும் மக்கள் வெளியில் சாப்பிட விரும்புகிறார்கள், சிலருக்கு வெளியில் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். வீட்டை விட்டு வெளியே தனியாக வசிக்கும் மாணவர்களும் தொழில் வல்லுநர்களும் வெளி உணவுகளை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தினமும் வெளியில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. இது உங்களுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும்.
பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இனி அடிக்கடி கனமழை பெய்யக்கூடும். இந்த காலக்கட்டம் என்பது இதமாக இருக்கும் என்றாலும் நோய்கள் என்பது எளிதாக பரவக் கூடிய காலக்கட்டம் இதுவாகும். இந்த காலக்கட்டத்தில் கவனமாக இறுக்க வேண்டியது முக்கியம்.
வெளிப்புற உணவு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
இந்த நாட்களில் மக்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஊட்டச்சத்துக்கு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக இந்த நாட்களில் மக்கள் வறுத்த மற்றும் தெரு உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டியது மிக முக்கியம்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வெளிப்புற உணவுகளின் பிரியர்களாக மாறிவிட்டனர். இதில் ருசி மட்டுமே இருக்கிறதே தவிர வேறு ஏதும் இல்லை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல மூலங்கள் இதில் இருக்கிறது.
வயிற்று தொற்று ஆபத்து
மழைக்காலங்களில் தெரு உணவுகளை சாப்பிடக்கூடாது, ஏனெனில் அதை அதிக அளவில் உட்கொள்வது வயிற்றில் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. தெரு உணவுகளில் நிறைய சுகாதாரக் கேடுகள் இருக்கிறது, சுத்தமற்ற நீர் உள்ளிட்டவைகளால் பாக்டீரியாக்கள் உணவுப் பொருட்களைச் சென்றடையும்.
தெரு உணவுகளுடன் இத்தகைய பாக்டீரியாக்கள் வயிற்றில் சென்றால், அது வயிற்றுத் தொற்றை உண்டாக்கும்.
தண்ணீரால் ஏற்படும் நோய்கள்
மழைக்காலத்தில் தண்ணீரினால் ஏற்படும் நோய்களின் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அசுத்தமான தண்ணீரை குடிப்பதும், அசுத்தமான உணவுகளை சாப்பிடுவதும் தான். மழைக்காலத்தில் பொதுவாகவே சுடு தண்ணீர் குடிக்க அறிவுறுத்துவது வழக்கம். ஆனால் வெளிப்புற கடைகளில் சாதாரண குடிநீரை கூட சரியாக பராமரிப்பது இல்லை.
கொழுப்பு மற்றும் கலோரிகள்
தெரு உணவு அல்லது உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகளில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள எண்ணெய் உள்ளது. எனவே, நீங்கள் ஒரு நாளில் எவ்வளவு கொழுப்பு மற்றும் கலோரிகளை உட்கொள்ளுகிறீர்கள் என்பது தெரியாது. இது உடல் எடை அதிகரிப்பு முதல் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அரைநிலையில் சமைத்த உணவு
தெரு உணவில் சமையல் நிலை என்பதை பராமரிப்பது இல்லை. மழைக்காலத்தில் அரைகுறையாக சமைத்த உணவு ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் பாக்டீரியா உள்ளிட்டவைகள் உண்டாகி பல பாதிப்பை ஏற்படுத்தும்.
இரைப்பை குடல் பிரச்சினைகள்
மழைக்காலத்தில் தெரு உணவுகளை அதிகமாக உட்கொண்டால், அது இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, உணவுப் பொருட்களில் அசுத்தம் அதிகமாக இருந்தால், இதன் காரணமாக வாந்தி, காய்ச்சல், வயிற்றுவலி மற்றும் குமட்டல் போன்றவையும் ஏற்படலாம்.
மழைக்காலங்களில் தெரு உணவுகளில் இருந்து விலகி இருப்பது மிக முக்கியம். வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளுக்கே பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுங்கள்.
Image Source: FreePik