Bigg Boss Tamil: தமிழகத்தில் மிகப் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் பட்டியலிட்டோம் என்றால் அதில் ஐபிஎல், குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்டவைகள் கண்டிப்பாக இடம்பெறும். இதில் பிக்பாஸின் சில நிகழ்வுகள் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தி பரபரப்பை உண்டாக்கும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் போது பலரும் சிந்திப்பார்கள், ஏன் தேவையில்லாமல் அவர்கள் சண்டையிடுகிறார்கள். ஏன் இவர் மட்டும் அதிகமாக எல்லை மீறுகிறார். நாம் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் எவ்வளவு நேர்மையாக நடந்திருப்போம் என எண்ண ஓட்டங்கள் வரும்.
முக்கிய கட்டுரைகள்
இதையும் படிங்க: Music Benefits: மியூசிக் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்குமா?
பிக்பாஸ் போட்டியில் நிறைந்திருக்கும் சவால்கள்

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. 100 நாட்கள் ஒரே வீட்டுக்குள் வெளி உலகம் தெரியாமல் இருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதுமட்டுமல்லாமல் உடன் இருக்கும் பிற நபர்களும் போட்டியாளர்கள். அவர்களை எப்போது நம்புவது எப்போது நம்பக் கூடாது என்றே தெரியாது.
மனநிலை என்பது நிலையாக இருக்காது. அதோடு நாம் எப்படி விளையாடிகிறோம், நம்மை எப்படி வெளியே காண்பிக்கிறார்கள், நம்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் போன்ற எண்ணங்கள் தலைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும்.
உச்சக்கட்டமாக இருக்கும் மன அழுத்தம்
மன அழுத்தம் வெகுவாக அதிகரிக்கும். இதனால் அடிக்கடி சண்டை வரத் தொடங்கும். பின் சண்டையில் யார் மேல் தவறு என்று சிந்தித்துக் கொண்டே இருக்கத் தோன்றும். மனநிலை என்பது நிலையாக இருக்காது.
அதோடு பிக்பாஸ் போட்டியாளர்கள் தேர்வு விதமே வித்தியாசமாக தான் இருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தை பிரிந்து இருப்பவர்கள், வாய்ப்பு கிடைக்காமல் அழுத்தத்தில் இருப்பவர்கள், குழந்தைப் பருவத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டவர்கள் போன்றவர்களை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்களை 100 நாட்களுக்கு ஒரு வீட்டுக்குள் போட்டியாளர்கள் மத்தியில் அடைத்தால் அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.
பொறுமையை தூண்டுதல்

இதோடு டாஸ்க், வார இறுதி நாட்களில் நிகழ்ச்சியின் ஹோஸ்ட் பட்டும்படாமல் கண்டிப்பது என அனைத்து வழிகளும் மன அழுத்தத்தோடு விளையாடும் விஷயமாகவே இருக்கும். எனவே பிக்பாஸ் போட்டியாளர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். யார் அங்கே இருந்தாலும் மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சரி, இந்த மன அழுத்தம் எனக்கு வெளிப்புறத்திலேயே இருக்கிறது என்றால் அதை சரிசெய்வது எப்படி என்பதை இப்போது தெரிந்துக் கொள்ளுங்கள்.
மனச்சோர்வு தீவிரமடையும் போது என்ன அறிகுறிகள் தோன்றும்?
அடிக்கடி மனநிலை மாறும் மற்றும் அடிக்கடி சோகமான உணர்வு ஏற்படும்.
தன்னம்பிக்கையின்மை மற்றும் உங்கள் மீதான நம்பிக்கையை இழக்கும் உணர்வு வரும்.
எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல், அடிக்கடி அமைதியின்மை ஏற்படும்.
முடிவுகளை எடுப்பதில் சிரமம் மற்றும் குறைந்த தன்னம்பிக்கை வரும்.
தனக்குத் தானே தீங்கிழைக்கும் எண்ணங்களும் ஏற்படும்.
இதையும் படிங்க: Stress Symptoms: மன அழுத்தம் இருந்தால் முகம் எப்படி இருக்கும் தெரியுமா?
மனச்சோர்விலிருந்து வெளிவருவது எப்படி?
மனச்சோர்விலிருந்து வெளிவர, உளவியலாளரின் உதவியைப் பெறுவது அவசியம். உங்கள் அறிகுறிகள் அதிகரித்தால், கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
மனச்சோர்வை தொடர்ந்து கவனிப்பது அவசியம். அழுத்தம் ஏற்படும் பட்சத்தில் உடனே தகுந்த ஆலோசகரை அணுகுங்கள். சிந்திக்கவே வேண்டாம்.
ஆலோசகர் வழங்கும் ஆலோசனையை புறக்கணிக்காமல் முறையாக பின்பற்றவும்.
உங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நபர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.
எதிர்மறை எண்ணங்களை உங்கள் மனதில் நுழைய விடாதீர்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் முடிந்தவரை அதிக நேரத்தை செலவிடுங்கள்.
உங்களுடன் இருப்பவரையும் தொடர்ச்சியாக கவனித்துக் கொள்ளுங்கள்.
Pic Courtesy: FreePik