பிக்பாஸ் சீசன் 8 போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் தங்களது போட்டியை மும்முரமாக விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் போட்டியில் வாரந்தோறும் டாஸ்க் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வாரம் "கோட்டை கட்டுதல்" டாஸ்க் வழங்கப்பட்டது.
இதுவரை இல்லாத அளவிற்கு முழுவதுமாக பிசிகல் டாஸ்க்காகவே இது அமைந்திருக்கிறது. இதில் போட்டியாளர்கள் 5 அணிகளாக பிரிந்து பெல்ட்டில் வரும் கற்களை எடுத்து கோட்டை கட்ட வேண்டும். வலுவான கோட்டையை கட்ட வேண்டும் பிறரின் கோட்டையை கட்டவிடாமல் தடுக்க வேண்டும் என்பதே டாஸ்க்காக இருந்தாலும், போட்டியாளர்கள் கற்களை எடுத்து தக்க வைப்பதிலேயே மோதல் வெடித்தது.
அதிகம் படித்தவை: Full Body Detox: நச்சுகள் நீங்கி மீண்டும் பிறந்தது போல் உடல் சுத்தமா மாறனுமா? 6 வழிகள் இருக்கு
பிக்பாஸ் சீசன் 8 ராணவுக்கு என்னாச்சு?
உண்மையில், இந்த டாஸ்க்கில் சண்டைக்கு காரணம் ஜெஃப்ரி தான். மஞ்சரி மற்றும் ராணவ் ஒரு அணியாக இருக்கும் போது மஞ்சரி கையில் இருக்கும் கற்களை ஜெஃப்ரி பறித்துக் கொண்டு செல்லவே இந்த மோதல் வெடிக்கத் தொடங்கியது. ஜெஃப்ரி எடுத்த கற்களை மீண்டும் ராணவ் வாங்க செல்லும் போது ஜெஃப்ரி முழு வலுவுடன் ராணவ்வை அங்கும் இங்கும் இழுத்து கீழே தள்ளிவிட்டார். அப்போது ராணவ் திடீரென கதறி அழுகத் தொடங்கினார்.
இந்த விஷயத்தில் ஜெஃப்ரி சம்பந்தப்பட்டதால் வீட்டார்கள் அனைவரும் மௌனம் காத்தனர். இதே இடத்தில் ராணவ் மூலமாக ஜெஃப்ரிக்கு நடந்திருந்தால், ராணவ் இந்நேரம் வீட்டிற்குள் இருக்கவே முடியாத அளவிற்கு ஜாக்கலின், ரயான், சௌந்தர்யா ஆகியோர் கூச்சலிட்டு வீட்டையே ரணகலம் செய்திருப்பார்கள், வீட்டார்கள் மொத்தமும் ராணவ் மற்றும் மஞ்சரியை தொடர்ந்து ஒன்றுகூடி தாக்கி வருவதே, இவர்கள் இருவருக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
மருத்துவமனையில் ராணவ் அனுமதி
சரி, நமது விஷயத்திற்கு வருவோம். கையில் வலியுடன் கதறி அழுதபடி கன்ஃபஷன் ரூமிற்கு சென்ற ராணவ், அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கே அவருக்கு Ligament Tear ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதோடு கையில் கட்டுப்போட்டு 3 வாரம் உறுதியாக ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இதன்மூலம் பலருக்கும் Ligament Tear என்றால் என்னவென்ற கேள்வி வரத் தொடங்கியது.
Ligament Tear என்றால் என்ன, இது எப்படி ஏற்படும், இதனால் வரும் பாதிப்புகள் என்ன, இது சரியாக எத்தனை நாட்கள் ஆகும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Ligament Tear, லிகமென்ட் டியர் என்றால் என்ன?
தோள்பட்டை தசைநார் கிழிதல் என்பதே Ligament Tear என அழைக்கப்படுகிறது. இது மென்மையான திசுக்களுக்குள் ஏற்படும் காயம் ஆகும், இந்த பிரச்சனையானது மூட்டுகளின் நிலைத்தன்மை மற்றும் இயக்கத்தின் வரம்பில் சிக்கலை ஏற்படுத்துகிறது. பொதுவாக மூட்டுகளில் நார்த் தசைகள் இருக்கும். இதில் காயம் அல்லது கிழிவு ஏற்படும் லிகமென்ட் என அழைக்கப்படுகிறது.
தோள்பட்டையில் கிழிந்த தசைநார் குணமடைய எவ்வளவு நேரம் ஆகும்?
இந்த பிரச்சனைக்கு ஓய்வு மற்றும் கவனிப்பு என்பது மிகமிக முக்கியம். லேசான சுளுக்கு போன்ற பிரச்சனை இருந்தால் அது சில வாரங்களில் குணமாகிவிடும், அதேசமயம் மருத்துவர் சோதனை செய்து மாதக்கணக்கில் ஓய்வு வேண்டும் என கூறினால், பிரச்சனை பெரிதாக இருக்கிறது என அர்த்தம். காயம் அல்லது கிழிவுக்கு ஏற்ப ஓய்வு மற்றும் குணமாகும் நேரம் தீர்மானிக்கப்படும். சில சமயங்களில் மாதக்கணக்கில் கூட ஆகலாம்.
(Shoulder Ligament Tear) தோள்பட்டை தசைநார் கிழிந்தால் தானே குணமாகுமா?
தோள்பட்டை ஒரு தனித்துவமான மற்றும் சிக்கலான மூட்டு ஆகும், இது மற்ற மூட்டுகளை விட தசைநார் கிழிவு எனப்படும் லிகமென்ட் டியர் பிரச்சனைக்கு எளிதில் உள்ளாகலாம். பெரும்பாலான இந்த பாதிப்பு, தசை பகுதி அல்லது முழுமையாக எலும்பிலிருந்து விலகிவிடக்கூடும். லிகமென்ட் டியர் எனப்படும் தசைநார் கிழிவு பிரச்சனை தானாக குணமடையாது. உங்கள் தோள்பட்டை மூட்டை மீட்டெடுக்க உங்களுக்கு ரோட்டேட்டர் சுற்றுப்பட்டை வைத்தியம் தேவை. குறிப்பாக நல்ல ஓய்வு தேவை.
தோள்பட்டை லிகமென்ட் டியர் பிரச்சனை யாருக்கெல்லாம் ஏற்படும்?
இந்த கேள்விக்கான பதில் குறித்து பார்த்தால், இந்த பிரச்சனை உண்மையில் யாருக்கெல்லாம் ஏற்படலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், விளையாட்டு வீரர்கள், அமர்ந்த இடத்தில் வேலை பார்ப்பவர்கள், நடனம் ஆடுபவர்கள், திடீரென தோள்பட்டைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், இவ்வளவு ஏன் வேகமாக மாடிப்படிகளில் ஏறுபவர்களுக்குக் கூட இது வரலாம்.
இதையும் படிங்க: Sprouts Benefits: தினசரி காலை முளைகட்டிய பயறு சாப்பிடுவது உண்மையில் நல்லதா?
தோள்பட்டை கண்ணீரில் இருந்து முழுமையாக மீள முடியுமா?
தோள்பட்டை கிழிதல் பிரச்சனையில் இருந்து விடுபட இருந்து முழுமையாக மீள நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகலாம். இருப்பினும் இது சிக்கல்களின் தீவிரத்தை பொறுத்து மாறுபடும். தசைநார் கிழிவு மோசமாக இருந்தால், சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது ஒருபோதும் தானாக குணமடையாது.