Different Types Of Tea: டீ பிரியர்களை குஷிபடுத்த, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15 ஆம் நாள், சர்வதேச டீ தினம் (International Tea Day) கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக இந்தியா, இந்தோனேசியா, உகாண்டா, மலேசியா, இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் டிசம்பர் 15 ஆம் தேதி International Tea Day அனுசரிக்கப்படுகிறது. 2005 முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், சில நாடுகளில், மே 1 ஆம் தேதி டீ தினம் கொண்டாடப்படுகிறது.
டீ குடிப்பது நல்லதல்ல என சிலர் கூறுவர். வேறு சிலர் டீ இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்று வாழ்கிறார்கள். அதுவும் பேச்சுலர்ஸ்கு டீ தான் காலை, மதியம், மாலை, இரவு என உணவாகவே உள்ளது. டீயில் சில பக்கவிளைவுகள் இருந்தாலும், அவற்றில் நன்மையும் அடங்கியுள்ளது.

டீயின் நன்மைகள் (Tea Benefits)
இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே மன அழுத்தம், கவலை, வேலைப்பளு என பல பிரச்னைகள் உள்ளது. இதில் இருந்து அவர்களை வெளிகொண்டுவர டீ தான் உதவுகிறது. குறிப்பாக மூலிகை டீ, ஆயுர்வேத டீ ஆகியவை சிறந்த தேர்வாக இருக்கும்.
தலை முதல் கால் வரை பலன் தரக்கூடிய பல டீக்கள் இங்கு உள்ளன. கிரீன் டீ, இஞ்சி டீ, லெமன் டீ, துளசி டீ, ஏலக்கா டீ, கெமோமில் டீ, புதினா டீ, ரோஸ் டீ, முடுங்கைக்கீரை டீ என பல உள்ளன.
இதையும் படிங்க: Black Tea Benefits: ஒரு கப் பிளாக் டீ குடிப்பதன் நன்மைகள் என்ன?
டீக்களின் வகைகள் (Types Of Tea)
டீக்களின் வகைகளையும், அதன் நன்மைகளையும் இங்கே காண்போம்.
துளசி டீ
துள்சி இலையோடு வெல்லம் சேர்த்து நீரில் நன்கு கொதிக்க வைத்து, இதனை வடிகட்டி குடிக்கவும். இது உங்களை சளி மற்றும் இருமலில் இருந்து காக்க உதவுகிறது.
புதினா டீ
புதினா இலையுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, பின் அதனை வடிகட்டி குடிக்கவும். இது உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது.
ரோஸ் டீ
3 முதல் 5 வரை உலர்ந்த ரோஜா இதழ்களை சிறிதலவு குங்கும பூவுடன் சேர்த்து கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி குடிக்கவும். இது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
முருங்கைக்கீரை டீ
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை, தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின் இதனை வடிகடி, இதில் சிறிது தேன் கலந்து குடிக்கவும். இது உடல் எடை குறைய உதவும்.
லெமன் டீ
லெமன் டீ ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பலராலும் இது பருகப்பட்டு வருகிறது. இதற்கு கதகதப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கவும்.
கெமோமில் டீ
நீங்கள் நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்து வருகிறீர்கள் என்றால் கெமோமில் டீ குடிக்கவும். இது உங்கள் மனநிலையை சீராக்கும்.
இஞ்சி டீ
சிறிது இஞ்சியை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி சிறிது தேன் கலந்து குடிக்கவும். இது செரிமானத்தை சீராக்கி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கிரீன் டீ
எடையை குறைக்க விரும்புகிறீர்கள் என்றால், கிரீன் டீ சிறந்த தேர்வாகும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடை குறைய உதவுகிறது.
Image Source: Freepik