Food cravings causes: அதிக உணவை சாப்பிட விரும்புபவரா நீங்க? அதுக்கு இது தான் காரணமாம்

Causes of food cravings and management tips: உணவுப்பசி இடைவிடாமல் பல்வேறு நேரங்களில் ஏற்படலாம். ஆனால், இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதில் உணவுப்பசி இடைவிடாமல் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Food cravings causes: அதிக உணவை சாப்பிட விரும்புபவரா நீங்க? அதுக்கு இது தான் காரணமாம்

Causes and management of food cravings: உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவர். எனினும் பிடித்த உணவைப் பற்றிய எண்ணம் இவை அனைத்தையும் மாற்றி விடும். அதாவது உணவுப்பசி தீங்கற்றதாகத் தோன்றினாலும், அது எந்தவொரு உடற்தகுதி அல்லது ஆரோக்கியமான வழக்கத்தையும் மாற்றி விடலாம். எனவே உணவுகளின் மீதான ஆசையின் மூல காரணத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். இதன் மூலம் இதை தகவலறிந்த முறையில் சமாளிக்கலாம். அதிகப்படியான கட்டுப்பாடான உணவுமுறைகளைப் பின்பற்றுவது, பெரும்பாலும் சாப்பிட அனுமதிக்கப்படாத உணவுகளுக்கான பசியைத் தூண்டுகிறது. இதில் உணவுப் பசிக்கான காரணங்கள் மற்றும் அதை எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து காணலாம்.

உணவு ஆசை

உணவுப்பசியானது ஒரு குறிப்பிட்ட வகை உணவுக்கான வலுவான தூண்டுதல் எனக் குறிப்பிடப்படுகிறது. இது கட்டுப்பாடற்றதாக காணப்படலாம். இந்த தூண்டுதல் ஆனது ஒரு நபர் சாதாரணமாக ஆரோக்கியமற்ற உணவுகளை விரும்புவதற்கு வழிவகுக்கிறது. இந்தப் பசி மிகவும் பொதுவானதாகும். அதிலும் 90%-ற்கும் அதிகமான மக்கள் இதை அனுபவிக்கின்றனர். ஒவ்வொருவருக்குமே தனித்தனியான ஆசைகள் இருக்கும். ஆனால், இது பொதுவாக தற்காலிகமானவையாகும். இது சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மீதான ஆசையாக இருக்கலாம். ஆராய்ச்சியின் படி, ஆண்கள் காரமான உணவுகளைத் தேடுவதிலும், பெண்கள் அதிக கொழுப்பு, இனிப்பு உணவுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் ஆர்வம் கொள்கின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Dark Chocolate: டார்க் சாக்லேட் இனிப்பு பசியைக் கட்டுப்படுத்த உதவுமா?

உணவு பசிக்கான காரணங்கள்

உணவுப்பசி உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக பல்வேறு தூண்டுதல்களால் ஏற்படக்கூடியதாகும். இதில் உணவுப்பசிக்கான காரணங்கள் சிலவற்றைக் காணலாம்.

மனச்சோர்வு

பிடித்த உணவுகளை அதிகம் விரும்புவது மனச்சோர்வுக்கு வழிவகுக்கலாம். ஆய்வு ஒன்றில்,மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்றவை சுவையான உணவுகளுக்கான ஏக்கத்தை அதிகரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது மக்கள் உணவை நாடுவதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். மேலும், இந்த ஆசைகள் உடல் எடையை அதிகரிக்கக் கூடும் என்று ஆய்வில் கூறப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு பற்றாக்குறை

சில உணவுப் பொருட்களை உண்ணாமல் இருப்பதும் கூட, அதை உண்ணக்கூடாது என்று நினைப்பதும் கூட சில சமயங்களில் அதை உண்ணக்கூடிய ஆசையை அதிகரிக்கலாம். ஆய்வு ஒன்றில், குறுகிய கால, தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு பற்றாக்குறை உண்மையில் தவிர்க்கப்பட்ட உணவுகளுக்கான ஏக்கத்தை அதிகரிப்பதாகத் தெரிகிறது. உளவியல் வழிமுறைகள் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை உணவு தூண்டப்பட்ட பசியைச் சேர்க்கிறது. அதனால் உணவுக்கட்டுப்பாடு பெரும்பாலும் மக்களில் அதிக பசிக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வெளிப்புற குறிப்புகள்

பல்வேறு வெளிப்புற குறிப்புகள், உணவுப் பசிக்கு வழிவகுக்கிறது. வெளிப்புற குறிப்புகள் ஒருவருக்குப் பிடித்த நிகழ்ச்சியைக் குறிக்கலாம். உதாரணமாக, வெளிப்புறத்திற்குச் செல்லும் போது ஐஸ்கிரீம் சாப்பிடுவதை விரும்புவர். இதனால், ஐஸ்கிரீம் எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளும் நிலை ஏற்படலாம். ஆய்வு ஒன்றில், உணவின் பார்வை மற்றும் வாசனையின் சுருக்கமான வெளிப்பாடு கூட உணவுப்பசியை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

மருத்துவ நிலைமைகள்

உணவுப் பசி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. இது கர்ப்பம், மாதவிடாய் முன் நோய்க்குறி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், நீரிழப்பு, தூக்கமின்மை, குறைந்த சர்க்கரை அளவு, மன அழுத்தம், மனநிலை ஏற்ற இறக்கங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது, ஊட்டச்சத்து குறைபாடுகள், செயலற்ற தன்மை போன்ற காரணங்களால் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Food Cravings: தூக்கமின்மை பசியை அதிகரிக்குமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

மோசமான தூக்கம்

நல்ல தூக்கமில்லாதது கூட உணவுப்பசி தூண்டுதல்களை அதிகரிக்கலாம். ஆய்வு ஒன்றில், பங்கேற்பாளர்கள் இரவில் குறைவான தூக்கம் வரும்போது, அவர்கள் பசியுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அதிகரித்த பசி மற்றும் உணவைப் பெறுவதற்கு அதிக உணர்திறன் மற்றும் மதிய உணவு நேரத்தில் உணவுப் பொருட்களிலிருந்து பெரிய பகுதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

உணவுப்பசியை எவ்வாறு சமாளிப்பது?

இதை நிர்வகிக்க வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சுய பாதுகாப்புத் திட்டங்கள் தேவைப்படுகிறது. அதில் சிலவற்றை இங்கே காணலாம்.

  • வழக்கமான உணவுமுறையைக் கையாள்வது
  • தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது
  • உணவை முன்கூட்டியே திட்டமிட்டு சரியான அளவில் தயார் செய்வது
  • ஆரோக்கியமான தின்பண்டங்களின் மீது கவனம் செலுத்துவது
  • சரியான தூக்கம் மற்றும் கவனமாக சாப்பிடுவதை உறுதி செய்வது
  • மன அழுத்தத்தை நன்றாக நிர்வகிக்க வேண்டும்
  • அடிக்கடி உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது

இது போன்ற ஆரோக்கியமான முறைகளைக் கையாள்வதன் மூலம் உணவுப்பசியை சமாளிக்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Craving Spicy Food: அடிக்கடி காரமான உணவு சாப்பிட ஆசை வருவது ஏன்? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

Image Source: Freepik

Read Next

HMPV ஒரு புதிய COVID ஆ? டாக்டர் பால் விளக்கம்..

Disclaimer