சீனாவில் தற்போது பரவுவதாக கூறப்படும் HMPV வைரஸ் தொற்று, அடுத்த COVIDஆக இருக்குமோ என்ற பேச்சு இப்போது உலகம் முழுவதும் வலம் வருகிறது. குறிப்பாக இது குழந்தைகளை அதிகம் பாதிப்பதால், பெற்றோர்கள் மத்தியில் அதீத கவலை ஏற்படுகிறது.
HMPV வைரஸ் கொடியதா.? இந்த HMPV தொற்று, அடுத்த COVIDஆக இருக்குமா.? இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்ன.? இதன் அறிகுறிகள் என்னென்ன.? என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இது குறித்து டாக்டர் பால் சமூக வலைதளத்தில் பதிவை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதை இங்கே விரிவாக காண்போம்.
HMPV என்றால் என்ன? (what is hmpv)
HMPV (Human Metapneumovirus) என்பது ஒரு பருவகால வைரஸ் தொற்று ஆகும். இது குளிர்கால மாதங்களில் பொதுவாக வறண்ட காற்று நமது நாசி மற்றும் தொண்டை பாதுகாப்பை பலவீனப்படுத்தும். இது பெரும்பாலும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நபர்களை பாதிக்கும்.
HMPV ஒரு புதிய COVID ஆ?
HMPV கோவிட்-19 ஐ விட கொடியது அல்ல என்று டாக்டர் பால் கூறினார். மேலும் இது லேசான பரவல் மற்றும் குறைவான அறிகுறிகளுடன் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் நீங்கள் இதை அப்படி விடக்கூடாது. உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இதனை குணப்படுத்தவில்லை என்றால் கொடியதாக மாறும். அதாவது மரணத்திற்கு வழிவகுக்கும்.
HMPV அறிகுறிகள் (HMPV Symptoms)
* காய்ச்சல்
* இருமல்
* சோர்வு
* மூச்சுத் திணறல்
கவலை வேண்டாம்
HMPV குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கூறிய டாக்டர் பால், HMPV மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும், இதனை அடிப்படை முன்னெச்சரிக்கைகள் மூலம் இதை சமாளிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
HMPV தடுப்பு நடவடிக்கைகள் (HMPV Preventions)
* அடிக்கடி கைகளை கழுவவும்.
* நீரேற்றமாக இருக்கவும்.
* நெரிசலான இடங்களில் முகமூடிகளை அணியவும்.
* பழங்கள், காய்கறிகள் மற்றும் புளித்த உணவுகள் மூலம் உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்.
குறிப்பு
HMPV க்கு இதுவரை தடுப்பூசி இல்லை. எனவே தடுப்பு முக்கியமானது. அறிகுறிகள் தோன்றினால், ஓய்வெடுத்து, நீரேற்றம் செய்து, மருத்துவர்களை நாடவும். மேலும் பெற்றோர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றும், வலுவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தைகள் இயற்கையாகவே பாதுகாப்பானவர்கள் டாக்டர் பால் கூறினார்.