Vitamin B12 Benefits: வைட்டமின் பி12 நன்மைகள் என்னென்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Vitamin B12 Benefits: வைட்டமின் பி12 நன்மைகள் என்னென்ன தெரியுமா?


நம் உடலுக்கு மிக அத்தியாவசிய தேவையாக வைட்டமின் பி12 திகழ்கிறது. ஆனால் இதனை உடல் உற்பத்தி செய்யாது. இவை இறைச்சியில் இருந்து பெறப்படுகிறது. இந்த வைட்டமினின் நன்மைகள் குறித்து இங்கே காண்போம். 

இதய ஆரோக்கியத்துக்கு உதவும்

வைட்டமின் பி12 உடலில் உள்ள ஹோமோசைஸ்டீன் அளவை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வைட்டமின் பி12 குறைந்தால், ஹோமோசைஸ்டீன் அளவு அதிகரிக்கும். 

எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கும்

வைட்டமின் பி12 எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இவை உடலில் குறைவாக இருந்தால், எலும்பு வலுவிழந்து போகும். இது எலும்பை மென்மையானதாகவும் உடையக்கூடியதாகவும் மாற்றும்.

இதையும் படிங்க: Vitamin B12 Deficiency: கவனிக்க வேண்டியவை இது தான்…

​மாகுலர் சிதைவு அபாயத்தை குறைக்கலாம்

வைட்டமின் பி12 மாகுலர் சிதைவை தடுக்க உதவும். இது உங்கள் இரத்த ஓட்டத்தில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் என்ற அமினோ அமிலத்தை குறைக்கும். மேலும் வயது தொடர்பான மாகுலர் சிதைவின் அபாயத்தை குறைக்கும். 

இரத்த சோகையை தடுக்கிறது

சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க வைட்டமின் பி12 உதவுகிறது. சிவப்பு இரத்த அணுக்கள் சீராக இருக்கும் போது, வட்ட வடிவில் இருக்கும். அதுவே அவை குறைவாக இருக்கும் போது முட்டை வடிவமாக இருக்கும். இது இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இதனால் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல முடியாமல் போகும். 

ஆரோக்கியமான கர்ப்ப காலம்

ஆரோக்கியமாக கர்ப்பத்திற்கு வைட்டமின் பி12 உதவியாக இருக்கிறது. இது கருவில் குழந்தையின் மூளை மற்றும் நரம்புகளை வளர்ச்சியடைய உதவுகிறது. வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், பிறப்பு குறைபாடு அல்லது கருச்சிதைவு ஏற்படும். 

Image Source: Freepik

Read Next

சர்க்கரையை உடனடியாக கட்டுப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள்

Disclaimer

குறிச்சொற்கள்