Almond Milk Benefits: பாதாம் பாலில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Almond Milk Benefits: பாதாம் பாலில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா?

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பாதாம் பாலில் சோடியம் குறைவாகவும், நல்ல கொழுப்பு சீராகவும் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக்கி, இதயம் சார்ந்த நோயில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. 

எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கும்

பாதாம் பாலில் கால்சியம் குறைவாக உள்ளது. ஆகையால் இதனை இரண்டு முறை குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கும். இதனால் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வராது. 

இதையும் படிங்க: Pistachios Benefits: ஒரு நாளைக்கு ஒருவர் எவ்வளவு பிஸ்தா சாப்பிட வேண்டும்?

உடல் எடை குறையும்

மற்ற பாலுடன் ஒப்பிடும் போது, பாதாம் பாலில் குறைந்த கலோரிகள் உள்ளன. அதாவது ஒரு கப் பாதாம் பாலில் 60 கிராம் கலோரிகள் உள்ளன. ஆகையால், தினமும் பாதாம் பால் குடிப்பதால், கலோரிகள் சீராக இருக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். எடை குறையும் பயனத்தில் உள்ளவர்களுக்கு, பாதாம் பால் சிறந்த தேர்வாக இருக்கும். 

தசைகளை வலிமையாக்கும்

புரதம் மற்றும் இரும்புச்சத்துகளால் நிறைந்துள்ள பாதாம் பால், தசைகளை வலுவாக்க உதவும். தசைகளை வலுப்படுத்த உதவும் ஊட்டச்சத்துகளை பாதம் பால் கொண்டிருப்பதால், உடல் பயிற்சி மேற்கொள்பவர்கள் இதனை உட்கொள்வது சிறந்ததாக இருக்கும். 

நினைவாற்றல் அதிகரிக்கும்

பாதாம் பாலை தினமும் இரண்டு முறை குடித்துவந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதனை காலை எழுந்த உடனும், இரவு படுக்கைக்கு முன்பும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

பார்வையை மேம்படுத்தும்

இன்றைய டிஜிட்டல் உலகில், புற ஊதா கதிர்களை வெளிப்படுத்தும் மொபைல் மற்றும் லேப்டாப் வாழ்வின் அங்கமாக உள்ளன. இதனால் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனை கட்டுப்படுத்த பாதாம் பால் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வையை மேம்படுத்தும். 

பாதாம் பாலில் எவ்வளவு நன்மைகள் இருந்தாலும், அதனை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் இதனை உட்கொள்வதற்க்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெருவது நல்லது. 

Image Source: Freepik

Read Next

தேங்காயை உணவில் எப்படி எல்லாம் சேர்க்கலாம் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்