What is the best test for heart disease: மனித உடலில் ஒவ்வொரு பகுதியும் முக்கியமானது தான். ஆனால், அவை அனைத்தும் சரிவர இயங்க உதவுவது இதயம். இது மார்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான உறுப்பு. அதன் முக்கிய செயல்பாடு உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்வதாகும். இது தவிர, இதயம் உடலுக்கு ஆக்ஸிஜனை வழங்குகிறது. இது செல்கள் மற்றும் திசுக்களுக்கு இடையில் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கிறது. இந்த பணிகள் சரியாக நடக்க, இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.
இன்றைய மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும், வாழ்க்கை முறையாலும் இதயம் தொடர்பான நோய்களை மக்கள் அதிகமாக சந்திக்கின்றனர். உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆச்சர்யம் என்னவென்றால், இதய நோய்கள் உடலில் ஏற்படும் போது, சிலருக்கு அதற்கான ஆரம்ப அறிகுறிகள் கூட தோன்றுவதில்லை. நோய் தீவிரமடையும் போது தான், அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றனர். சிகிச்சை தாமதம் காரணமாக, மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு ஆபத்து அதிகரிக்கிறது. சில சமயங்களில் நோயாளி உயிரையும் இழக்க நேரிடுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : இதய அடைப்பின் 5 அறிகுறிகள்: பெண்களே உஷார்!!
நீண்ட ஆயுளுடன் வாழவும், ஆரோக்கியமாகவும் வாழ இதய நோய் வராமல் தடுப்பது மிகவும் முக்கியம். இதற்கு, நீங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், சில சோதனைகளைச் செய்ய வேண்டும். ஹெல்த்வாட்ச்சின் மருத்துவ அதிகாரி டாக்டர் சுசரிதா இதய நோயில் இருந்து தங்களை பாதுகாக்க என்னென்ன பரிசோதனைகளை நாம் செய்ய வேண்டும் என நமக்கு பகிர்ந்துள்ளார். அவற்றை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இதய நோய்களைத் தவிர்க்க என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும்?

இரத்த அழுத்தம் (Blood Pressure)
உயர் இரத்த அழுத்தம் இதய நோய்களுக்கு முக்கிய காரணம். எனவே, இதய நோய்களைத் தவிர்க்க, உங்கள் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து பரிசோதனை செய்யுங்கள். உங்கள் இரத்த அழுத்தத்தை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். உங்கள் BP 120/80 mm Hg-க்குக் குறைவாக இருந்தால், அது சாதாரணமானது. ரீடிங் இதை விட அதிகமாக இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.
கொலஸ்ட்ரால் பேனல் (Cholesterol Panel)
ஒரு கொலஸ்ட்ரால் பேனலில், ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் அளவு சரிபார்க்கப்படுகிறது. இதில், நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள் அடங்கும். LDL அளவு அதிகமாக இருந்தால், அது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம். வழக்கமான பரிசோதனைகள் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கலாம் மற்றும் இதய நோய்களைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Egg Health Benefits: முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா? கெட்டதா?
எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG)

ECG என்பது மருத்துவரால் செய்யப்படும் ஒரு பரிசோதனை முறையாகும். இதில், ஒருவரின் இதயத் துடிப்பு மற்றும் உறுதியற்ற தன்மை ஆகியவை ஆய்வு செய்யப்படுகின்றன. மாரடைப்பு, இதய நோய் மற்றும் அசாதாரண இதயத் துடிப்பைக் கண்டறிய ECG உதவுகிறது. அடிக்கடி ECG செய்து வந்தால், இதய நோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
மன அழுத்த சோதனை (Stress Test)
மனஅழுத்தம் மனநோய்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி, இதயநோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இதய நோய்களைத் தவிர்க்க, நீங்கள் அழுத்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். கரோனரி தமனி நோயைக் கண்டறிவதில் மன அழுத்தப் பரிசோதனையை மேற்கொள்வது உதவும். இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அழுத்த சோதனை மூலம் மதிப்பீடு செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம் : நெஞ்செரிச்சல் வராமல் தடுக்க 10 எளிய குறிப்புகள்
இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level)

உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, அது சர்க்கரை நோயை உண்டாக்கும். நீரிழிவு நோய் இதய நோய்களுக்கான ஆபத்து காரணி. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை தொடர்ந்து பரிசோதித்து வந்தால், சர்க்கரை நோய், இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். நீங்கள் வீட்டிலேயே இரத்த சர்க்கரையை எளிதாக சரிபார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : கார்டியாக் அரெஸ்ட் பற்றிய 7 அறியப்படாத உண்மைகள் இங்கே!
அட்வான்ஸ் கார்டியாக் இமேஜிங் (Advanced Cardiac Imaging)
கார்டியாக் இமேஜிங் என்பது ஒரு அட்வான்ஸ் நுட்பமாகும், இதன் உதவியுடன் இதய நோய் மற்றும் இதய செயலிழப்பைக் கண்டறிய முடியும். இதனால், இதயத்தை பரிசோதித்து, இதய நோய்களின் அபாயத்தை குறைக்க முடியும். ஆனால் இந்த சோதனை மருத்துவரால் மட்டுமே செய்யப்படுகிறது. ஆரோக்கியமான மற்றும் நோயில்லாத வாழ்க்கைக்கு இந்த பரிசித்தனைகளை செய்யுங்கள்.
Pic Courtesy: Freepik