What is unknown about asthma: இணையத்தின் இந்த யுகத்தில், தகவல்களைப் பெறுவது எவ்வளவு சுலபமோ, சரியான தகவல்களை அணுகுவது அவ்வளவு கடினம். இணையத்தில் நிறைய தவறான தகவல்கள் உள்ளன. குறிப்பாக உடல்நலம் பற்றி. உடல்நலம் குறித்து எந்த தகவலை இணையத்தில் தேடினாலும், அது மிகவும் ஆபத்தானது என்பதையே 80 சதவீதம் கூறுகிறது.
இதனால், மக்கள் அதிகமாக பீதியடைய துவங்குகிறார்கள். எனவே, பொதுவான விஷயங்களை பற்றி ஒரு புரிதலை நாம் வைத்திருப்பது நமக்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய்கிழமை ‘உலக ஆஸ்துமா தினம்’ (World Asthma Day 2024) கொண்டாடப்பட்டு வருகிறது. ஆஸ்துமாவின் ஆபத்து மற்றும் அதன் சிகிச்சை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
முக்கிய கட்டுரைகள்
பொதுவாக ஆஸ்துமா குறித்து நம்மில் பலருக்கு பல சந்தேகங்கள் இருக்கும். இது குறித்து இணையத்தில் தேடும் போது, பாதி விஷயங்கள் தவறாகவே இருக்கும். ஆஸ்துமா தொடர்பான சரியான தகவல்களை உங்களுக்கு நங்கள் எடுத்து கூறுகிறோம். இது குறித்த கட்டுக்கதைகள் மற்றும் உண்மை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : Zinc for Asthma: துத்தநாகம் நிறைந்த உணவுகள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த உதவுமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!
ஆஸ்துமா குறித்த கட்டுக்கதைகளும் உண்மைகளும்

கட்டுக்கதை: நீண்ட நாட்களுக்கு ஆஸ்துமா மருந்தை உட்கொள்வது அதன் விளைவைக் குறைக்கும்.
உண்மை - ஆஸ்துமா ஒரு நீண்ட கால பிரச்சனை அல்லது உடல் நிலை என்று சொல்லலாம். இந்நிலையில், இதிலிருந்து நிவாரணம் பெற, அவதிப்படுபவர் எப்போதும் மருந்து சாப்பிட வேண்டியிருக்கும். ஆனால், நீண்ட காலமாக ஆஸ்துமா மருந்தை உட்கொள்வது அதன் விளைவைக் குறைக்கும் என்று அர்த்தமல்ல. ஆஸ்துமாவுக்கு வெவ்வேறு மருந்துகள் வெவ்வேறு வழிகளில் வேலை செய்கின்றன. இவற்றில் சில மருந்துகளை தினமும் எடுத்துக் கொண்டால் மட்டுமே அவை பலனளிக்கும். அறிகுறிகளின் குறைவு மற்றும் அதிகரிப்புக்கு ஏற்ப நீங்கள் சில மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
கட்டுக்கதை: ஆஸ்துமா உள்ளவரால் உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சி செய்வது ஆபத்தானது.
உண்மை - உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆஸ்துமாவில் ஆபத்தானது என்று பொதுவாக நம்பப்படுகிறது. எனவே, ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வெளியில் விளையாட விடாமல் தடுக்கின்றனர். இது உண்மை இல்லை என்றாலும், மிதமான உடல் செயல்பாடு ஆஸ்துமா நோயாளிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Stress Induced Asthma: மன அழுத்தம் ஆஸ்துமா அபாயத்தை அதிகரிக்கிறதா? காரணம் மற்றும் அறிகுறிகள் இங்கே!
இருப்பினும், ஆஸ்துமா நோயாளிகள் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளையும் கடுமையான உடற்பயிற்சிகளையும் தவிர்க்க வேண்டும் என்பது உறுதி. ஓடுதல், அதிக எடை தூக்குதல் மற்றும் கடினமான விளையாட்டு போன்றவை சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் செய்து வந்தால் நல்லது.
கட்டுக்கதை: இன்ஹேலர் என்பது ஒரு போதைப் பழக்கம் போன்றது, அது ஒருமுறை பயன்படுத்திய பிறகு பழக்கமாகிவிடும்.
உண்மை - இன்ஹேலர்களின் பயன்பாடு பொதுவாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. உண்மை என்னவென்றால், இன்ஹேலர் ஒரு போதை அல்ல, கடுமையான ஆஸ்துமா தாக்குதலில், இன்ஹேலர் மிகவும் திறம்பட செயல்படுகிறது. ஏனெனில், இந்த நிலையில் மருந்தை உட்கொள்ளும் போது அது முதலில் குடலில் இருந்து உறிஞ்சப்பட்டு பின்னர் இரத்த ஓட்டத்தை அடைகிறது. ஆனால், இன்ஹேலர் வடிவில், இந்த மருந்து நேரடியாக காற்றுப்பாதைகளை சென்றடைகிறது.
இந்த பதிவும் உதவலாம் : World Asthma Day 2024: இதெல்லாம் தான் ஆஸ்துமா வர காரணம்! எப்படி தடுப்பது?
கட்டுக்கதை: ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ முடியாது.
உண்மை - ஆஸ்துமாவைப் பற்றிய ஒரு பெரிய தவறான கருத்து என்னவென்றால், ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ முடியாது. உண்மையில், ஆஸ்துமா நோயாளிகள் தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், நீங்களும் ஒரு பெரிய அளவிற்கு சாதாரண மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
ஆஸ்துமாவைத் தடுக்க, சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது அவசியம். முடிந்தவரை மாசுபட்ட சூழலைத் தவிர்ப்பது, புகைப்பிடிக்காதீர்கள், தூய்மையை முழுமையாகக் கவனித்துக்கொள்வது, பருவகால ஒவ்வாமைகளைத் தவிர்ப்பது மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிப்பது போன்றவை. அந்த வகையில், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுத்துக் கொண்டால், ஆஸ்துமா நோயாளிகளும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.
Pic Courtesy: Freepik