பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, தற்கொலை செய்து கொண்டார். இவரது இழப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் சமீப காலமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இவரது தற்கொலை குறித்து, மீராவின் நண்பர்களிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இன்றைய காலகட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. தற்கொலை எண்ணம் தோன்றுவதற்கு நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற உணர்வுகள் காரணமாக திகழ்கின்றன. மேலும் வாழ்க்கை சூழழும், மன அழுத்தமும் தற்கொலை எண்ணங்களை ஏற்படுத்துகின்றன.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒருவர் உயிரிழப்பதில், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தியாவில், ஒரு லட்சம் மக்கள்தொகையில் தற்கொலை இறப்பு விகிதம் 16.5 ஆக இருக்கிறது. அதே நேரத்தில் உலகளவில் சராசரி ஒரு லட்சத்திற்கு 10.5 ஆக இருக்கிறது. இதில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் 15-29 வயதுடையவர்கள்.
இதையும் படிங்க: Suicide Prevention: தற்கொலை எண்ணம் வருவதற்கு இது தான் காரணம்! இதனை கையாள்வது எப்படி?
தற்கொலை எண்ணம் தோன்றுவதற்கு நம்பிக்கையின்மை ஒரு முக்கிய காரணமாக திகழ்கிறது. ஒருவர் நம்பிக்கையை இழக்கும் போது, அவர் தனிமையை உணர்கின்றன. இந்த சமையம், அவர்களை சூழ்ந்துள்ளவர்கள், அவர்களை நம்பிக்கை தருவது போல் பேச வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவரை, அதில் இருந்து வெளிகொண்டு வருவது, அவர்களை சுற்றியுள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் கைகளில் உள்ளது. தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்களை முடிந்த அளவு சமூகத்துடன் தொடர்பு படுத்த முயற்சிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
Image Source: Freepik