Doctor Verified

Suicide Prevention: தற்கொலை எண்ணம் வருவதற்கு இது தான் காரணம்! இதனை கையாள்வது எப்படி? 

  • SHARE
  • FOLLOW
Suicide Prevention: தற்கொலை எண்ணம் வருவதற்கு இது தான் காரணம்! இதனை கையாள்வது எப்படி? 

நம்பிக்கையின்மை மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்துகொண்டு, அனுபவிப்பவர்களை அடையாளம் கண்டு, முறியடித்து, ஆதரிப்பதன் அவசியத்தை, மீரட்டில் உள்ள லோக்ப்ரியா மருத்துவமனையின் மனநல மருத்துர் ராஷி அகர்வால், எங்களிடம் பகிர்ந்துள்ளார். 

இவ்வளவு தற்கொலைகளா? 

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, “ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒருவர் உயிரிழப்பதால், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு தற்கொலைக்கும், 20க்கும் மேற்பட்ட தற்கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில், ஒரு லட்சம் மக்கள்தொகையில் தற்கொலை இறப்பு விகிதம் 16.5 ஆக இருக்கிறது. அதே நேரத்தில் உலகளவில் சராசரி ஒரு லட்சத்திற்கு 10.5 ஆக இருக்கிறது. இதில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் 15-29 வயதுடையவர்கள், முதியவர்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் தான்”. 

மனநலக் கோளாறுகள், தற்கொலை எண்ணங்களுக்கு முதன்மையான ஆபத்துக் காரணிகளாக இருந்தாலும், தீவிர நோய்கள், சட்டப் பிரச்சனைகள், நிதிச் சிக்கல்கள், போதைப்பொருள் துஷ்பிரயோகம், கொடுமைப்படுத்துதல், உறவுகளை இழத்தல் மற்றும் ஒரு நம்பிக்கையின்மை உணர்வு ஒருவரின் தற்கொலை அபாயத்தையும் அதிகரிக்கும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க: Mental Health Tips: மனநலத்தை நிம்மதியாக வைத்திருப்பது எப்படி?

நம்பிக்கையின்மை எப்போதும் ஆபத்து தான்!

நாம் ஒரு விஷயத்தில் ஈடுபடும் போது, நம்பிக்கையுடன் செயல்பட்டால், அனைத்தும் சாத்தியமாக மாரும். அதுவே நம்பிக்கை இல்லாமல் செய்தால், எதுவும் நடக்காது என்று மருத்துவர் கூறினார். நாம் நம்பிக்கையை இழக்கும் போது, நாம் தனியாக இருப்பது போல் உணர்கிறோம். மேலும் நமக்கு எதுவும் கிடைக்காது, நம்மால் எதுவும் முடியாது என்றெல்லாம் தோன்றும். இதுவே தற்கொலை எண்ணத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர் கூறினார். 

ஒரு நபர் இத்தகைய உணர்வுகளை வளர்க்கத் தொடங்கும் போது, முதலில் மோசமான கற்பனைகளில் ஈடுபடுகிறார்கள். அதாவது, அவர்கள் தான் கடினமான வாழ்க்கையை வாழ்வதாகவும், அவர்களை தவிர வேறு யாராலும் இந்த வாழ்க்கையை வாழ முடியாது என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். மேலும் அவர்கள் உதவியற்றவர்களாக உணர்வதால், இது தற்கொலை எண்ணத்தை தூண்டும் என்று மருத்துவர் கூறினார்.

நடவடிக்கை எடுக்க நேரம் இது!

தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவரை, அதில் இருந்து வெளிகொண்டு வருவது, அவர்களை சுற்றியுள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் கைகளில் உள்ளது. தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்களை முடிந்த அளவு சமூகத்துடன் தொடர்பு படுத்த முயற்சிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இது தற்கொலை எண்ணத்தை தடுக்க உதவும் என்று மருத்துவர் விளக்கினார். 

மேலும், மனச்சோர்வடைந்த நம்பிக்கையற்ற நபரைச் சுற்றியுள்ளவர்கள், அவர்களிடம் பேசி, அவர்களை புரிந்துக்கொண்டு, அவர்களுக்கான ஆதரவை வழங்க வேண்டும் என்று மருத்துர் கூறினார். குறிப்பாக  தொழில்முறை உதவி, சிகிச்சை மற்றும் மருந்துகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது அவசியம் என்று, அவர் மேலும் கூறுகிறார். 

Image Source: Freepik

Read Next

Constipation Treatment: மலச்சிக்கலை போக்கும் பேரிக்காய், எப்படி சாப்பிடுவது என தெரிந்து கொள்ளுங்கள்!

Disclaimer