Thu Oct 29, 2026 | 01:44 PM IST

Constipation Treatment: மலச்சிக்கலை போக்கும் பேரிக்காய், எப்படி சாப்பிடுவது என தெரிந்து கொள்ளுங்கள்!

Constipation Treatment: மலச்சிக்கலை போக்கும் பேரிக்காய், எப்படி சாப்பிடுவது என தெரிந்து கொள்ளுங்கள்!Constipation Treatment: மலச்சிக்கலை போக்கும் பேரிக்காய், எப்படி சாப்பிடுவது என தெரிந்து கொள்ளுங்கள்!

How to Eat Pears to Get Relief from Constipation: பேரிக்காயில் அதிக அளவு சத்து மற்றும் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. மேலும் இதில், வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் தாமிரம் உள்ளது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய, உங்கள் உணவில் பேரிக்காயை சேர்ப்பது மிகவும் நல்லது. அதுமட்டும் அல்ல, பேரிக்காய் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இது வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது. பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், பேரிக்காய் சாப்பிடுவதால் அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுபட பேரிக்காயை எப்படி சாப்பிடுவது என பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Constipation Home Remedy: மலச்சிக்கல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் வீட்டு வைத்தியம்!

மலச்சிக்கலை போக்க பேரிக்காயை எப்படி சாப்பிடுவது?

வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிடுங்கள்

மலச்சிக்கலை போக்க பேரிக்காய் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பேரிக்காய் சாப்பிடலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் பேரிக்காயை சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இதனால், அஜீரணம், வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

பேரிக்காயை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, ​​அதில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சப்படும். இந்நிலையில், போதுமான அளவு நார்ச்சத்து கிடைக்கும், இது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Fruits Help Constipation: மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும் பழங்கள் என்னென்ன தெரியுமா?

பேரிக்காய் ஜூஸ் குடியுங்கள்

மலச்சிக்கல் ஏற்பட்டால் பேரிக்காய் சாறு குடிக்கலாம். இதற்கு நீங்கள் ஒரு பெரிய அளவு பேரிக்காயை எடுத்து, அதன் விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். இப்போது அவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்னர், ஒரு வடிகட்டியில் உதவியால் சாற்றை வடிகட்டி குடிக்கவும். பேரிக்காய் சாற்றை தினமும் குடித்து வந்தால், உங்கள் வயிறு மற்றும் குடல் நன்கு சுத்தம் செய்யப்படும். பேரிக்காய் சாறு உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : மலச்சிக்கல் இத்தனை பாதிப்பை ஏற்படுத்துமா?

ஃப்ரூட் சாலட்டில் பேரிக்காயை சேர்த்து சாப்பிடலாம்

பேரிக்காயை ஃப்ரூட் சாலட்டில் கலந்தும் சாப்பிடலாம். சாலட் செய்ய பப்பாளி, கொய்யா, ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். அதில் பேரிக்காய் துண்டுகளையும் கலந்து தினமும் சாப்பிடவும். உணவு உண்ணும் முன் ஃப்ரூட் சாலட் சாப்பிடுவது நல்லது. இதனால், போதுமான அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Fatigue Causes: எப்போதும் சோம்பலாக உணருகிறீர்களா? சுறுசுறுப்பாக இருக்க இதை செய்யுங்கள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.