Body Weight Check Timings: இந்த 5 சந்தர்ப்பங்களில் வெயிட் செக் பண்ணக்கூடாது - ஏன்?

  • SHARE
  • FOLLOW
Body Weight Check Timings: இந்த 5 சந்தர்ப்பங்களில் வெயிட் செக் பண்ணக்கூடாது - ஏன்?

உடல் எடை அதிகரிப்பது ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சவால். அதனால் தான் எடைக்கூட ஆரம்பித்ததும், பெரும்பாலானோர் ஜிம்மிற்கு சென்று கடுமையான ஒர்க்அவுட்களை செய்ய முயற்சிக்கின்றனர். அதேபோல் ஸ்ட்ரிட் டயட், வாக்கிங், ஜாக்கிங், ஸ்விம்மிங் என கடும் முயற்சிகளைகளை மேற்கொள்கின்றனர்.

இதையெல்லாம் செய்த பிறகு அனைவரும் செய்யக்கூடிய ஒரே விஷயம், எடை மிஷினில் அவ்வப்போது உடல் எடையை செக் செய்வது. உண்மை என்னவெனில், அடிக்கடி வெயிட் செக் செய்வதும் எடையில் மாற்றம் ஏற்படக் காரணமாக அமையும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நாளின் சில நேரங்களும் சந்தர்ப்பங்களும் உங்கள் எடையைச் சரிபார்க்க ஏற்றவை. இல்லையெனில், நீங்கள் விரும்பிய நேரத்தில் எடையைச் சரிபார்த்தால், இயந்திர அளவில் நீங்கள் பார்க்கும் எண்ணைக் கண்டு நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, சில சமயங்களில் எடையை பரிசோதிக்கவே கூடாது.

சாப்பிட்ட உடனேயே:

உணவு உண்ட பிறகும், நிறைய தண்ணீர் குடித்த பின்பும் எடையை சரிபார்க்க வேண்டாம். அப்படிச் செய்தால் உங்கள் எடையில் வித்தியாசம் தெரியும். உணவு மற்றும் தண்ணீர் இயற்கையாகவே அதிக எடையுள்ளது. உங்கள் உடல் ஏற்கனவே செரிமானம் மற்றும் திரவங்களை உறிஞ்சும் என்பதால், எடையில் மாற்றம் ஏற்படும். எனவே லேசான உணவை உட்கொண்ட பிறகு அல்லது வெறும் வயிற்றில் எடையை சரிபார்க்கவும்.

பெண்களே இந்த சமயத்தில் வேண்டாம்:

மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்கள் எடையை பரிசோதிப்பதை தவிர்க்க வேண்டும். அந்த நேரத்தில் உடல் பல ஹார்மோன் மாற்றங்களுக்கு உட்படுகிறது, இது தண்ணீரைத் தக்கவைக்கும். இதன் விளைவாக, நீங்கள் சிறிது எடையை தற்காலிகமாக அதிகரித்தது போல் உணரலாம்.

உடற்பயிற்சி முடிந்த உடனேயே:

பலருக்கு ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்த பிறகு எடை பார்ப்பதை பழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் இது சரியல்ல. வியர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்ததால் உடலில் திரவங்கள் வெளியேறி இருக்கும், இதனால் பயிற்சிக்குப் பிறகு எடை குறைந்திருக்கும்.

ஆனால் நீங்கள் திரவங்களை எடுத்துக்கொண்டதும், உடல் முந்தைய எடைக்குத் திரும்பும். அதனால் ஒரே இரவில் உடல் எடையை குறைக்க முயற்சிக்காதீர்கள். உடல் எடையை குறைக்க சில நாட்கள் கொடுங்கள்.

கண் விழித்ததும்:

சிலர் எழுந்தவுடன் தங்கள் எடையை சரிபார்த்துக்கொள்வார்கள். ஆனால் அந்த நேரத்தில் உங்கள் எடையில் வேறுபாடுகள் ஏற்படக்கூடும். இரவில் அதிக தூக்கம் அல்லது அதிகமாக தண்ணீர் பருகி இருந்தால், எடையில் வித்தியாசம் காட்டலாம். மேலும், உங்கள் உடலும் முகமும் சிறிது வீங்கியது போலவோ அல்லது நீர்ச்சத்து குறைவாகவோ உணர்ந்தால், வெயிட் பார்க்காமல் இருப்பது நல்லது.

சுற்றுலா:

சிலர் விடுமுறையில் இருந்து திரும்பிய உடனேயே தங்கள் எடையை சரிபார்ப்பார்கள். அவர்கள் விடுமுறையில் அதிகமாக சாப்பிடுவார்கள் அல்லது மது அருந்துவார்கள். இதன் விளைவாக எடை கூடுகிறது. எனவே உங்கள் உண்மையான எடையை அறிய சில நாட்கள் காத்திருந்து பின்னர் சரிபார்க்கவும்.

தினமும் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பவர்கள், உடல் எடையை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் என்ற கவலையை தவிர்த்து, வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கி எடையை சரி பார்ப்பது நல்லது.

Read Next

எதிர்பார்க்காத அளவுக்கு எடை குறைய ஆப்பிள் சைடர் வினிகரை இப்படி குடிங்க!

Disclaimer

குறிச்சொற்கள்