
கூல்ட்ரிங்க்ஸ் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோகோ கோலா, பெப்சி போன்ற பானங்கள் தான் நினைவுக்கு வரும். உலக சந்தைகளில் அந்த அளவிற்கு இந்த பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் கேம்பா கோலா என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தாலும், அதற்கு போதுமான அளவு வரவேற்பு கிடைத்ததாக தெரியவில்லை. அதுமட்டுமின்றி கோலா பானங்களை பருகுவதால் ஏராளமான உடல் நலக்கோளாறுகளும் ஏற்படுகிறது.
கூல்ட்ரிங்க்ஸால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் என்ன?
சோடா மற்றும் குளிர் பானங்களில் அதிக அளவிலான சர்க்கரை இருக்கும். இது உங்களை வேகமாக எடை அதிகரிக்கச் செய்கிறது. கோகோ கோலாவின் ஒரு வழக்கமான கேனில் 8 தேக்கரண்டி சர்க்கரை உள்ளது. குளிர் பானங்கள் உங்கள் பசியைத் தணிக்கும், ஆனால் அவை உங்கள் வயிற்றை நிரப்பாது. குளிர்பானங்களில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் பிரக்டோஸ் என்ற சேர்மம் உள்ளது. இது அதிகப்படியாக சேரும் போது, கல்லீரல் அதை கொழுப்பாக மாற்றுகிறது. மேலும் சோடாக்களில் உள்ள அதிக அளவு சர்க்கரை டைப் 2 நீரிழிவு நோயை ஏற்படுத்தும். சோடாவில் பாஸ்போரிக் அமிலம் மற்றும் கார்போனிக் அமிலம் உள்ளது, இது நீண்ட காலத்திற்கு பல் பற்சிப்பியை அரிக்கும்.
இப்படி ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. ஆனால் சவுதி அரேபியா தயாரித்துள்ள மிலாஃப் கோலா முழுக்க முழுக்க பேரீச்சம்பழங்களால் ஆனது. இதன் நன்மைகள் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள்...
முதல் முறையாக குளிர்பானம் தயாரித்த சவுதி அரேபியா:
தங்களுக்குப் போட்டியாக யாரும் வரமாட்டார்கள் என நினைத்துக் கொண்டிருந்த கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களுக்கு போட்டியாக சவுதி அரேபியா தனது சொந்த பிராண்ட் குளிர்பானத்தை தயாரித்துள்ளது. கோகோ கோலா மற்றும் பெப்சி குளிர்பானங்களை ஒப்பிடுகையில் சவுதியின் குளிர்பானம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இது பேரிச்சம்பழத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
சவூதி அரேபியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனமான துரத் அல்-மதீனா, பேரிச்சம்பழம் கொண்டு மிலாஃப் கோலா என்ற குளிர்பானத்தை தயாரித்து வருகிறது. இது உள்நாட்டில் விளையக்கூடிய உயர்தரமான பேரீச்சம்பழத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
மிலாஃப் கோலா உடலுக்கு நல்லதா?
பாரம்பரிய கோலா மற்றும் சோடாக்களை விட பேரிச்சம்பழம் கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் மிகவும் சிறந்தவை. இதில் செயற்கை சர்க்கரை எதுவும் இல்லை. பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து, அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் உள்ளன. மற்ற குளிர்பானங்களில் காணப்படும் ஆரோக்கியமற்ற பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகள் இதில் இல்லை. இப்படி குடித்தால் புத்துணர்ச்சி மட்டுமே கிடைக்கும். ஆனால், மிலாஃப் கோலா புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
சர்வதேச உணவு பாதுகாப்பு தரநிலைகளின்படி, மிலாஃப் கோலா சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் தயாரிக்கப்படுவதாக டுராத் அல் மதீனா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேரீச்சம்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் மிலாஃப் கோலா எப்போது நம் இந்தியாவிற்குவரும் என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால் நிறுவனம் தனது சந்தை நோக்கத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் சில தனித்துவமான ஹெல்த் டிரிங்க்களையும் விரைவில் கொண்டு வரவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version