Skin Care Tips: குழந்தைகளுக்கான குளிர்கால ஸ்கின் கேர் டிப்ஸ்!

  • SHARE
  • FOLLOW
Skin Care Tips: குழந்தைகளுக்கான குளிர்கால ஸ்கின் கேர் டிப்ஸ்!


பொதுவாக குழந்தைகளின் தோல் பெரியவர்களின் தோலை விட மென்மையானது. ஆகையால் இது உணர்திறன் வாய்ந்தவையாக இருக்கும். இதனால் அவர்களுக்கு எளிதில் தோல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக குளிர்காலத்தில் குழந்தைகளின் தோல் பாதிப்புக்கு உள்ளாகலாம். அதாவது, தோல் அலெற்ஜி, எரிச்சல், வரட்ச்சி போன்ற தோல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். இதில் இருந்து குழந்தைகளை காக்க சில தோல் பராமரிப்பு குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

வெதுவெதுப்பான குளியல்

குழந்தைகளை நீண்ட நேரல் சூடான நீரில் குளிக்க வைத்தால், அது அவர்களின் தோலை வரட்ச்சிக்கு உள்ளாக்கும். இதனால் தோலின் ஈரப்பதம் குறையும். ஆகையால், குழந்தைகளை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்கவும். அதுவும் நீண்ட நேரம் கூடாது. 5 நிமிடம் போதும். மேலும் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது, அவர்களது தோலுக்கு ஏற்ற pH அளவை பயன்படுத்த வேண்டும். 

இதையும் படிங்க: Diabetes in children: குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்க இந்த 5 விஷயங்களை செய்தாலே போதும்!

மாய்ஸ்சரைஸரை மறக்காதீர்

குழந்தையை குளிக்க வைத்த பிறகு, அவர்கள் சிறிது ஈரமாக இருக்கும் நேரத்தில் மாய்ஸ்சரைஸரை தடவவும். மேலும் கெமிக்கல் இல்லாத இயற்கையான மாய்ஸ்சரைஸரை பயன்படுத்தவும். மேலும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடிய லோஷன், ஆயில் எதுவாக் இருந்தாலும், அதில் உள்ள மூலப்பொருட்களை ஆராயவும். அதில் ஈரப்பதம் அளிக்கும் பொருட்கள் உள்ளதை உறுதிப்படுத்தவும். இது உங்கள் குழந்தையை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. 

டயப்பர் மீது கண் இருக்கட்டும்

குழந்தைகளுக்கு அடிக்கடி டயப்பரை மாற்ற வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு எரிச்சல் உணர்வு அல்லது தோல் தடிப்புகள் ஏற்படலாம். இதனை தவிர்க்க போதுமான அளவு டயப்பரை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக மென்மையான பருத்தி துணியை பயன்படுத்தலாம். இது குழந்தைகளுக்கு ரேஷ்சஸ் வராமல் தடுக்கும். 

குழந்தைகளை பராமரிக்கும் முறை என்று வரும்போது, எப்போதும் இயற்கை சார்ந்த பொருள்களை நாடுவது நல்லது. இந்த குழந்தைகள் தினத்தில் (Children's Day), குழந்தைகளின் தோல் பராமரிப்பு குறித்து புரிந்துக்கொள்ளுங்கள். மேலும் உங்கள் குழந்தைகளின் தோல் குறித்து முழுமையாக அறிய குழந்தை மருந்துவரை அணுகுவது நல்லது. 

Image Source: Freepik

Read Next

Children's Day Special: மாறிவரும் வானிலை! குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது?

Disclaimer

குறிச்சொற்கள்