Expert

White Bread In Diabetes: நீரிழிவு நோயாளிகள் மறந்தும் இந்த பிரட் சாப்பிடாதீங்க.

  • SHARE
  • FOLLOW
White Bread In Diabetes: நீரிழிவு நோயாளிகள் மறந்தும் இந்த பிரட் சாப்பிடாதீங்க.

நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியாத போதிலும், சில ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும். அதன் படி, நீரிழிவு நோயளிகள் வெள்ளை ரொட்டி சாப்பிடுவதால் என்ன மாதிரியான விளைவுகளைப் பெறலாம், அவர்கள் வெள்ளை பிரட் சாப்பிடலாமா? என்பது குறித்த கேள்விகளுக்கு டயட்டீஷியன் பூஜா சிங் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Foods in Winter: குளிர்காலத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்க.

நீரிழிவு நோயாளிகள் வெள்ளை பிரட் சாப்பிடலாமா?

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இதன் மூலம் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும் என நிபுணர் பூஜா சிங் அவர்கள் கூறியுள்ளார். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் வெள்ளை ரொட்டி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.

ஏனெனில், வெள்ளை ரொட்டியில் அதிகளவிலான சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. இவை உடலில் கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதில் நீரிழிவு நோயாளிகள் வெள்ளை பிரட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்துக் காணலாம்.

நீரிழிவு நோயாளிகள் வெள்ளை ரொட்டி சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்

சர்க்கரை நோயாளிகள் வெள்ளை ரொட்டியை உட்கொள்வதால் பின்வரும் உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

எடையை அதிகரிக்கும் வெள்ளை ரொட்டி

மற்ற ரொட்டிகளுடன் ஒப்பிடுகையில், வெள்ளை ரொட்டி அதிகளவிலான கலோரிகளைக் கொண்டுள்ளது. இதனால், வெள்ளை ரொட்டி உடல் எடையை அதிகரிக்கலாம். நீரிழிவு நோயாளிகள் எடை அதிகரித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகலாம். மேலும், இந்த உடல் எடை அதிகரிப்பு காரணமாக இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயங்களும் அதிகரிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Amla For Diabetes: நெல்லிக்காயை இப்படி எடுத்துக்கிட்டா சுகர் பிரச்சனையே வராதாம்.!

இதய நோய் அபாயம்

வெள்ளை ரொட்டியில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தலாம். எனவே நீரிழிவு அல்லது சர்க்கரை நோயாளிகள் இதய அபாயத்தைத் தடுக்க, வெள்ளை ரொட்டியை எடுத்துக் கொள்ளலாம்.

செரிமான பிரச்சனைகள்

வெள்ளை பிரட் தயாரிக்க உதவும் மாவு, செரிமானத்தை கடினமாக்கலாம். இதனால், வெள்ளை மாவு பயன்பாடு வயிற்று வலி, வாந்தி மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே நீரிழிவு நோயாளிகள் செரிமானப் பிரச்சனைகளைத் தவிர்க்க வெள்ளை ரொட்டியை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிக இரத்த சர்க்கரை

வெள்ளை பிரட் தயாரிப்பில் நிறைய செயலாக்கங்கள் இடம்பெற்றுள்ளது. வெள்ளை ரொட்டி பதப்படுத்தப்படுவதால் உடலில் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கலாம். இவ்வாறு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

மேலே கூறப்பட்ட காரணங்களால், நீரிழிவு நோயாளிகள் வெள்ளை ரொட்டி உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Beetroot Benefits: அரை கப் பீட்ரூட் துண்டு போதும். நீரிழிவு பிரச்சனையை ஈஸியா குறைக்கலாம்.!

Image Source: Freepik

Read Next

Diabetes Foods in Winter: குளிர்காலத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்க.

Disclaimer