What are the side effects of eating too much butter: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவுமுறையில் மிகுந்த கவனம் செலுத்துவது முக்கியமாகும். பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகள் எதையும் சாப்பிடுவதற்கு முன்பு சிந்திப்பது அவசியம்.
ஏனெனில், நீரிழிவு நோயாளிகள் ஏதேனும் தவறான உணவை சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும். நீரிழிவு நோயாளிகளுக்கு நீரிழிவு இருக்கும்போது வெண்ணெய் சாப்பிட வேண்டுமா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது? அல்லது வெண்ணெய் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு உண்மையில் தீங்கு விளைவிக்குமா? குறைந்த அளவில் வெண்ணெய் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.
இந்த பதிவும் உதவலாம்: Buttermilk in Summer: மோர் குடித்தால் வயிற்று பிரச்சனை வருமா? வெயிலில் மோர் குடிப்பது ஏன் முக்கியம்?
பலரும், நீரிழிவு நோயில் வெண்ணெய் சாப்பிடுவதற்கு முன்பு இருமுறை யோசிப்பார்கள். இது போன்ற நிலையில், வெண்ணெய் சாப்பிடுவதற்கு சிலர் பயப்படுகின்றனர். எனினும், அதிகமாக வெண்ணெய் சாப்பிடுவது பல வழிகளில் தீங்கு விளைவிக்கலாம். இதை சாப்பிடுவது இரத்த சர்க்கரையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சில சமயங்களில் இதயம் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. இது குறித்து டெல்லியைச் சேர்ந்த உணவியல் நிபுணர் பிராச்சி சாப்ரா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இங்குக் காண்போம்.
நீரிழிவு நோயில் அதிகமாக வெண்ணெய் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
உடல் பருமன் அதிகரிப்பு
உடல் பருமன் ஆனது நீரிழிவு நோய்க்கு ஒரு எதிரி மட்டுமல்ல. இதனால், நீரிழிவு நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு இருப்பின், அது நீரிழிவு பிரச்சனையை அதிகரிக்கிறது. மேலும், வெண்ணெயில் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இவை உடலில் கொழுப்பை அதிகரிக்கும். நீரிழிவு நோயாக இருப்பின் வெண்ணெய் சாப்பிடுவது உடலில் கொழுப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நீரிழிவு நோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவுகளும் பாதிக்கப்படுகின்றன.
இரத்த சர்க்கரை பாதிப்பு
சந்தையில் விற்கப்படும் வெண்ணெயில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ளன. இது உடலில் கொழுப்பை மட்டுமல்லாமல், உடலின் பிற பாகங்களையும் பாதிக்கக்கூடும். வெண்ணெய் சாப்பிட விரும்பினால், இதை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எனினும், குறைந்த அளவில் வெண்ணெய் சாப்பிடுவது இரத்த சர்க்கரையை நேரடியாக அதிகரிக்காது. வெண்ணெயின் கிளைசெமிக் குறியீடு பொதுவாக குறைவாக காணப்படுகிறது. ஆனால், அதை அதிகமாக சாப்பிடுவது சில நேரங்களில் இரத்த சர்க்கரையை பாதிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த விதைகளை தயிருடன் கலந்து சாப்பிடுங்கள்..
கொழுப்பு அதிகரிப்பு
நீரிழிவு நோயாளியாக இல்லாவிட்டாலும், அதிகமாக வெண்ணெய் சாப்பிடுவது கொழுப்பை அதிகரிக்கும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. சந்தையில் விற்பனை செய்யப்படும் வெண்ணெயில் பெரும்பாலும் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சில நேரங்களில் பாமாயிலும் உள்ளது. இது உடலில் கொழுப்பை அதிகரிக்கக்கூடும். சில சமயங்களில், அதிகமாக வெண்ணெய் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளின் குடலில் கொழுப்பு குவிவதற்கு வழிவகுக்கிறது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே, வெண்ணெய் சாப்பிடுகிறீர்கள் என்றால், வீட்டில் தயாரிக்கப்பட்ட வெண்ணெயை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது.
இதய ஆரோக்கியம் பாதிப்பு
நீரிழிவு நோய் ஒரு வகையில் இதய ஆரோக்கியத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீரிழிவு நோய் நிர்வகிக்கப்படாவிட்டால் அல்லது கட்டுப்படுத்தப்படாவிட்டால், சில சந்தர்ப்பங்களில் அது இதய நோய்க்கு வழிவகுக்கக்கூடும். எனவே, நீரிழிவு நோயாளியாக இருப்பின் வெண்ணெய் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். உண்மையில், இதில் நிறைவுற்ற கொழுப்பும் உள்ளது. இது கொழுப்பு மற்றும் உடல் பருமனை அதிகரிக்கக்கூடும். இது பல வழிகளில் இதய அமைப்பை பாதிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் நைட் தூங்கும் முன்பு ஒரு ஸ்பூன் பீனட் பட்டர் சாப்பிடுங்க! எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்
Image Source: Freepik