Sat Sep 12, 2026 | 12:46 AM IST

Expert

டீயுடன் ரஸ்க் சாப்பிடுபவரா நீங்க? ரஸ்க் சாப்பிடுவதால் ஏற்படும் ரிஸ்க் என்ன தெரியுமா?

Is tea and toast good for health: நாம் அனைவரும் டீயுடன் ரஸ்க் மற்றும் டோஸ்ட் சாப்பிட விரும்புகிறோம். நம்மில் பெரும்பாலோர் டீயுடன் டோஸ்ட் அல்லது ரஸ்க் சாப்பிடுவதுடன் தான் நமது வாழ்க்கையை துவங்குகிறோம். காலை உணவாக இருந்தாலும் சரி, மாலை நேர சிற்றுண்டியாக இருந்தாலும் சரி, டீயை எத்தனை முறை குடிக்கிறோமோ அவ்வளவு முறை டோஸ்ட் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், டீயுடன் டோஸ்ட் சேர்த்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் பல தீமைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், உண்மைதான் நாம் சுவையானது என தினமும் சாப்பிடும் ரஸ்க் மற்றும் டீ நமது ஆரோக்கியத்திற்கு பல தீமைகளை ஏற்படுத்தும். இது குறித்து, மருத்துவ ஊட்டச்சத்து நிபுணரும் உணவியல் நிபுணருமான கரிமா கோயலிடம் பேசினோம். இது குறித்து அவர் கூறியதாவது, தேநீருடன் சிற்றுண்டி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும். இது பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். டீயுடன் ரஸ்க் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Benefits Of Green Tea: நலன் தரும் கிரீன் டீயின் அற்புத பயன்கள் என்னென்ன தெரியுமா?

டீயுடன் ரஸ்க் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன?

அதிக சர்க்கரை

டோஸ்ட் அல்லது ரஸ்க்கில் இனிப்பு சுவை சேர்க்க, அவற்றில் நிறைய சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்வதுடன், இது நீரிழிவு போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட மாவு

ரஸ்க்கில் ரவை மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது, பெரும்பாலான ரஸ்க்களில் மைதா மாவு சேர்க்கப்படும் அல்லது ரவையுடன் சிறிது மாவு கலக்கப்படுகிறது. இதை வயிற்றால் எளிதில் ஜீரணிக்க முடியாது. இது எடை அதிகரிப்புக்கு பங்களிக்கிறது. இதனால், உங்கள் செரிமானம் மோசமாகும்.

இந்த பதிவும் உதவலாம் : க்ரீன் டீயில் என்ன கலந்து குடிக்கலாம்? ஆரோக்கியமான க்ரீன் டீயை இனி சுவையாக மாற்றலாம்.

இதய நோய் ஆபத்து

டீயுடன் டோஸ்ட் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமானதல்ல. இது அனைத்து நோய்களின் அபாயத்தையும் அதிகரிப்பது மட்டும் அல்ல, இதய நோய்களுக்கான முக்கிய ஆபத்து காரணியாகவும் உள்ளது. உயர் இரத்த அழுத்தம், அதிக எடை, நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்ற ஆபத்துகள் அதிகரிக்கலாம்.

குடல் பாதிப்பு

நீங்கள் வழக்கமாக தேநீருடன் டோஸ்ட்டை உட்கொண்டால், அது குடலில் புண்களை பாதிக்கும். இது வயிற்றில் வாயுவை உண்டாக்குவது, செரிமானமின்மை, அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் பல பிரச்சனைகளை உண்டாக்கும். இந்த உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தைத் தவிர்க்க விரும்பினால், தேநீருடன் டோஸ்ட்டை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Pic Courtesy: Freepik

Read Next

Soft Drinks Side Effects: குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் நோய்கள்.. எச்சரிக்கை அவசியம்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content