சமீபத்தில் த ர்பூசணியில் இரசாயனம் கலந்திருப்பதாகவும் இதை சாப்பிட்டால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் தமிழகத்தின் உணவுத்துறை அதிகாரி விளக்கமளித்திருந்தார். இதன் பின் பொதுமக்கள் தர்பூசணி எனப்படும் தண்ணீர் பழத்தை வாங்கி சாப்பிடவே தயக்கம் காட்டினார்கள்.
தண்ணீர் பழம் விற்பனை குறைந்ததால் விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் சிக்கலை சந்தித்தார்கள். இதையடுத்து தண்ணீர் பழத்தை தாராளமாக வாங்கி சாப்பிடலாம் என சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பரவத் தொடங்கின. இருப்பினும் இதன்மூலம் சிலர் திருப்தி அடையவில்லை. இந்நிலையில் இந்த மொத்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
தர்பூசணி குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இதுகுறித்து மருத்துவர் சரவணன் அளித்த விளக்கம் குறித்து பார்க்கையில், தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கிறது, வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே தண்ணீர் அதிகமாக குடிப்பது மிக முக்கியம். மேலும் நீராகாரம் உடலுக்கு மிக முக்கியம், அப்படி இயற்கையாக கிடைக்கக் கூடிய பல மூலங்கள் இருக்கிறது. இதற்கு தர்பூசணி மிகவும் நல்லது. பிற பழ வகைகளையும் வெயில் காலத்தில் உட்கொள்ளலாம்.
குறிப்பாக வெயில் காலத்தில் ஹீட் ஸ்ட்ரோக், கல்லீரல் பாதிப்பு, கிட்னி பிரச்சனை உள்ளிட்டவைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்க தர்பூசணி பழம் பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க: 30 வயதிலுன் 20 போல் ஜொலிக்கனுமா.? அதான் ரெட்டினால் இருக்கானே.. அப்புறம் என்ன..
மேலும் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரியின் தவறான தகவல் மூலம் தர்பூசணி விற்பனையிலும் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர். தர்பூசணியில் சாயம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை கிடையாது. மக்கள் தர்பூசணி பழங்களை அச்சமின்றி தாராளமாக சாப்பிடலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
image source: Meta